அர்ச்சியசிஷ்ட சிலுவை மந்திரம் சொல்லவும்.
ஆசீர்வதிக்கப்பட்ட கன்னிகையே, உம்மை வாழ்த்தித் துதிக்க எனக்கு அருள் புரியும். உமது சத்துருக்களுக்கெதிராக எனக்கு சத்துவமளித்தருளும்.
பிதாவுக்கும் சுதனுக்கும் (மற்றதும்....)
விசுவாசப் பிரமாணம் சொல்லவும்
பரம பிதாவுக்கு மகிமையாக:
பரலோக மந்திரம் சொல்லவும்.
1. சிருஷ்டிப்பும், இரட்சிப்பும், அர்ச்சிப் பும், அன்பின் நிறைவும் ஆகிய கடவுளின் நித்திய திட்டத்திற்கென மாதா நித்தியத்திலேயே தெரிந்துகொள்ளப்பட்ட மகிமையை அன்புட னும், மகிழ்ச்சியுடனும், நன்றியுடனும் நினைப் போம்...
கடவுளுக்காக மாதா அதை நிறைவேற்றும்படி மன்றாடுவோம்...
மாதா அதை நிறைவேற்றுவார்கள் என நம்புவோம்... ஒரு அருள் நிறை மந்திரம்.
(... இவ்வடையாளமிட்ட இடங்களில் சற்று நிறுத்தி மனதால் தியானிக்கவும்.)
2. மாதா அமலோற்பவமாயிருந்து ஜென்மப் பாவமில்லாமல் உற்பவித்த மகிமையை அன்புட னும், மகிழ்ச்சியுடனும், நன்றியுடனும் நினைப் போம்... தன் பிள்ளைகளை ஜென்மப் பாவ தோத்திலிருந்து விடுவிக்கும்படி மாதாவிடம் மன்றாடுவோம்... நம்மை அப்படி விடுவிப் பார்கள் என நம்புவோம்... ஒரு அரு.
3. சர்வேசுரனுடைய சகல வரப்பிரசாதங்களும் வந்து குவியும் பாத்திரமாக மாதா இருக்கிற மகிமையை அன்புடனும், மகிழ்ச்சியுடனும், நன்றியுடனும் நினைப்போம்... கடவுளின் சகல அன்புத் திட்டங்களையும் நிறைவேற்றுவதில் தன் பிள்ளைகளாகிய நமக்குத் தேவையான எல்லா வரப்பிரசாதங்களையும் தேவையான சமயத்தில் தந்து ஆதரிக்கும்படியாக மன்றாடுவோம்... மாதா நம் தாயாயிருப்பதால் நமக்கு ஒரு குறையும் இல்லாமல் அவ்வரப்பிரசாதங்களை தகுந்த நேரத் தில் தருவார்கள் என நம்புவோம்... ஒரு அரு.
4. சர்வேசுரனுடைய தாயாக மாதா இருக்கிற மகிமையை அன்புடனும், மகிழ்ச்சியுடனும், நன்றியுடனும் நினைப்போம்... கடவுளின் தேவை களை தாயயன்ற முறையில் மாதா அறிந்திருப் பதால் நம்மிடமிருந்து கடவுள் எதிர்பார்ப்பதை யயல்லாம் நாம் அவருக்குக் கொடுக்க உதவும்படி மன்றாடுவோம்... மாதாவே நம்மிடமிருந்து அவற்றை எடுத்து கடவுளிடம் சமர்ப்பிப்பார்கள் என நம்புவோம்... ஒரு அரு. பிதாவுக்கும், சுதனுக்கும்... (மற்றதும்)
தேவ சுதனுக்கு மகிமையாக:
பரலோக மந்திரம் சொல்லவும்.
5. மாதா பிதாவாகிய சர்வேசுரனின் குமாரத்தி யாக இருக்கிற மகிமையை அன்புடனும், மகிழ்ச்சி யுடனும், நன்றியுடனும் நினைப்போம்... இப்படி கடவுளின் அளவில்லா வல்லமையில் பங்கு பெறும் நம் தாய், சாத்தானை எதிர்த்து வெற்றி பெறும் வலிமையை நமக்குத் தரும்படி மன்றாடு வோம்... மாதாவின் இப்பலத்தைக் கொண்டு நாம் சாத்தானை முறியடித்து வெற்றி பெறுவோம் என நம்புவோம்... ஒரு அரு.
6. மாதா கன்னியும் தாயுமாயிருந்து சேசு வைப் பெற்ற மகிமையை அன்புடனும், மகிழ்ச்சி யுடனும், நன்றியுடனும் நினைப்போம்... சிருஷ் டிக்கப்படாத ஞானமாகிய அவரை மாதா நமக்குத் தந்து அந்த ஞானத்தின்படி நம்மை நடத்தி அவரிடம் நம்மைக் கொண்டு சேர்ப்பார்கள் என நம்புவோம்... ஒரு அரு.
7. மாதா, இஸ்பிரீத்துசாந்துவாகிய தேவனின் பிரியமுள்ள நேசமாக இருக்கிற மகிமையை அன்புடனும், மகிழ்ச்சியுடனும், நன்றியுடனும் நினைப்போம்... அவரிடமிருந்து பிரிக்க முடியாத மணவாளியாக இருக்கும் நம் தாய்க்கு அவர் தம் சிநேகம் முழுவதையும் கொடுத்துள்ளதால், உத்தமமாய்க் கடவுளை நேசிக்கிற அன்பை நமக்குத் தரும்படி மன்றாடுவோம்... கடவுளை நேசிக்கும் அன்பால் மாதா நம்மைப் பற்றி எரியச் செய்வார்கள் என நம்புவோம்... ஒரு அரு.
8. மாதா சகல மனிதருக்கும் தாயாக இருக்கும் மகிமையை அன்புடனும், மகிழ்ச்சியுடனும், நன்றியுடனும் நினைப்போம்... நம் மாதாவுக்கு எல்லா மானிடரும் பிள்ளைகளாயிருப்பதால், ஒவ்வொருவருடைய தேவைகளிலும் சொந்தத் தாயாக வந்து உதவும்படி மன்றாடுவோம்... உலகம், திருச்சபை, பாப்பரசர், ஆன்மாக்கள், பாவிகள் அனைவரின் தாயாகிய மாதா எல்லாரின் தேவைக் காகவும் உலக சமாதானத்திற்காகவும் மன்றாடி உதவுவார்கள் என நம்புவோம்... ஒரு அரு. பிதாவுக்கும், சுதனுக்கும்... (மற்றதும்)
இஸ்பிரீத்துசாந்துவுக்கு மகிமையாக:
பரலோக மந்திரம் சொல்லவும்.
9. சேசுவுடன் மாதா இணை இரட்சகியாயிருக் கிற மகிமையை அன்புடனும், மகிழ்ச்சியுடனும், நன்றியுடனும் நினைப்போம்... சேசுவின் பாடுகள் அனைத்தையும் மாதாவும் அனுபவித்து அவருடன் சேர்ந்து சம்பாதித்த பேறுபலன்களால் சாத்தானின் சகல ஏமாற்றும் தந்திரங்களிலும் நம்மைக் காப்பாற் றும்படி மன்றாடுவோம்... நம் இணை மீட்பரான மாதா நம்மை இரட்சித்து மோட்சம் அளிப்பார்கள் என நம்புவோம்... ஒரு அரு.
10. மாதா சகல வரப்பிரசாதங்களுக்கும் மத்தி யஸ்தியாயிருக்கிற மகிமையை அன்புடனும், மகிழ்ச்சியுடனும், நன்றியுடனும் நினைப்போம்... மாதாவே நமக்கு எல்லாமாக இருந்து சகல தேவ வரங்களையும் தந்து இவ்வுலகின் வாழ்விலும் மறுவுலகிலும் நம்மைப் பராமரிக்கும்படி மன்றாடுவோம்... அவர்களே நம் பணயமாகவும் சகலத்தையும் சர்வேசுரனுடன் இணைக்கும் பால மாகவும் இருப்பதால் நம்மை எப்படியும் காத்துக் கொள்வார்கள் என நம்புவோம்... ஒரு அரு.
11. மாதா ஆத்தும சரீரத்துடன் மோட்சம் சென்ற மகிமையை அன்புடனும், மகிழ்ச்சியுட னும், நன்றியுடனும் நினைப்போம்... அவர் களுக்கு நம் அர்ப்பணத்தின் அடையாளமான உத்தரியத்தை அணிந்திருப்போம். அதற்கு மாதா வாக்களித்துள்ளபடி நாம் மரணமடையும்போது நமக்குத் துணையாக வரும்படி மன்றாடுவோம்... நம்மை தன் குமாரன் சேசுவிடம் அவர்களே கூட் டிச் செல்வார்கள் என நம்புவோம்... ஒரு அரு.
12. மாதா பரலோக, பூலோக இராக்கினியாக மோட்சத்தில் முடிசூட்டப் பெற்ற மகிமையை அன்புடனும், மகிழ்ச்சியுடனும், நன்றியுடனும் நினைப்போம்... நம் அன்னையும் அரசியுமான அவர்களுக்கு நாம் முழுச் சொந்தமாகிவிடும் வரத்தைக் கேட்டு மன்றாடுவோம்... நம்மை ஏற்றுக்கொண்டு ஒவ்வொரு வினாடியிலும் நம்மை அவர்களே நடத்துவார்கள் என நம்பு வோம்... ஒரு அரு. பிதாவுக்கும் சுதனுக்கும் (மற்றதும்)
முடிவு ஜெபம்
சர்வேசுரனுடைய அர்ச்சியசிஷ்ட மாதாவே, இதோ உம்முடைய சரணமாக ஓடிவந்தோம். எங்கள் அவசரங்களிலே நாங்கள் வேண்டிக் கொள்வதற்கு நீர் பாராமுகமாயிராதேயும். ஆசீர்வதிக்கப்பட்டவருமாய் மோட்சம் உடைய வருமாயிருக்கிற நித்திய கன்னிகையே, சகல ஆபத்துக்களிலேயும் நின்று எங்களைத் தற்காத்துக் கொள்ளும்.
ஆமென்.