நீதியும் தயையுமுள்ள சர்வேசுரா, ஆதித் தாயாகிய ஏவை உமது கட்டளையை மீறி செய்த பாவத்துக்காக அவளால் பலுகுகிற சகல ஸ்திரீ ஜனங்களும் கர்ப்பவாதையோடு பிள்ளை பெறத் தீர்வையிட்டருளினீரே. அந்தத் தீர்வை பலித்து இந்த ஸ்திரீயும் இவள் வயிற்றிலே உமது கருணை யால் உற்பவித்த பிள்ளையும் மகா வருத்தத்தை அனுபவிக்கிறதினாலே கருணாசமுத்திரமான பிதாவே! தேவரீர் தயாபர கடாட்சத்தால் இவளை நோக்கி உம்முடைய திருக்குமாரனுடைய பரிசுத்த மாதா ஒரு வருத்தமுமில்லாமல் அற்புதமாய் அவரைப் பெற்றெடுக்க வரங்கொடுக்கத் திருவுள மானது போல, அந்த அமலோற்பவியான கன்னி மரியாயுடைய பேறுகளினாலேயும், வேண்டுதலி னாலேயும் இந்த ஸ்திரீயின் மேல் இரக்கம் வைத்து இவள் படுகிற கடின வாதையை நீக்கி இரட்சித் தருளும் சுவாமி. அப்படியே சுகமாய்ப் பிள்ளை பெற்று உம்மை ஸ்துதிக்க கோவிலுக்குச் செல்ல வும், பெற்ற பிள்ளையை ஞானஸ்நானத்தினால் தேவரீருக்கே பிள்ளையாகச் செய்து அதை உமது திருப்பணிவிடைக்கு வளர்க்கவும் கிருபை செய்தருளும்.
ஆமென்.
(கர்த்தர் கற்பித்த செபம்)