அமலோற்பவியான அர்ச். தேவமாதாவின் பிரார்த்தனை

சுவாமி கிருபையாயிரும்
கிறீஸ்துவே கிருபையாயிரும்
சுவாமி கிருபையாயிரும்

கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும்.

கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும்.

பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

இஸ்பீரீத்து சாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

அர்ச்சியசிஷ்ட தமதிருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

மாசில்லாத அர்ச்சியசிஷ்ட மரியாயே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

கன்னியருக்குள்ளே மாசில்லாத அர்ச். கன்னிகையே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

ஆதியில் குறிக்கப்பட்ட மாசில்லாத அர்ச். கன்னிகையே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உற்பவமுதல் எப்போதும் மாசில்லாதவர் களாயிருக்கிற அர்ச். மரியாயே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அமலோற்பவியான அர்ச். கன்னிகையே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பரம பிதாவின் மாசில்லாத குமாரத்தியே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

திவ்விய குமாரனுடைய மாசில்லாத தாயே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

இஸ்பிரீத்துசாந்துவின் மாசில்லாத பத்தினியே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அர்ச். தமத்திரித்துவத்தின் மாசில்லாத இருப்பிடமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சர்வேசுரனுடைய மாசில்லாத சாயலே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

நீதி ஆதித்தனுடைய மாசில்லாத உதயமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சேசுக்கிறீஸ்துநாதர் அடங்கியிருந்த மாசில் லாத பெட்டகமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

தாவீதரசனுடைய மாசில்லாத குமாரத்தியே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சேசுக்கிறீஸ்துநாதருக்கு மாசில்லாத காவலே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சர்வ பாவத்தையும் ஜெயித்த மாசில்லாத கன்னிகையே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சர்ப்பத்தின் தலையை நசுக்குகிற மாசில்லாத கன்னிகையே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பரலோகத்துக்கும் பூலோகத்துக்கும் மாசில் லாத இராக்கினியே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பரலோக எருசலேமின் மாசில்லாத வாசலே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

வரப்பிரசாதங்களின் மாசில்லாத வாய்க்  காலே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அர்ச். சூசையப்பரின் மாசில்லாத மணவாளியே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உலகத்தின் மாசில்லாத நட்சத்திரமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

யுத்தம் செய்கிற திருச்சபைக்கு அசையாததும் மாசில்லாததுமான ஸ்தம்பமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

முட்செடியில் புஷ்பிக்கும் மாசில்லாத ரோஜாவென்கிற புஷ்பமே,  எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

நிலத்தில் முளைக்கிற புஷ்பங்களில் மாசில் லாத லீலியயன்னும் புஷ்பமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சகல புண்ணியங்களுக்கு மாசில்லாத மாதிரிகையே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

எங்கள் நம்பிக்கைக்கு மாசில்லாத காரணமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

எங்கள் விசுவாசத்துக்கு மாசில்லாத ஸ்தம்பமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

தேவசிநேகத்துக்கு மாசில்லாத ஊற்றே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

எங்கள் இரட்சணியத்துக்கு மாசில்லாத குறிப்பே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உத்தம கீழ்ப்படிதலுக்கு மாசில்லாத கிரமமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சுகிர்த தரித்திரத்துக்கு மாசில்லாத மாதிரிகையே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பக்திக்கு மாசில்லாத பள்ளிக்கூடமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

கற்பின் ஒழுக்கத்துக்கு மாசில்லாத வாசமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

ஆத்தும ஈடேற்றத்துக்கு மாசில்லாத நங்கூரமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சம்மனசுகளுக்கு மாசில்லாத பிரகாசமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பிதாப்பிதாக்களுக்கு மாசில்லாத கிரீடமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

தீர்க்கதரிசிகளுக்கு மாசில்லாத மகிமையே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அப்போஸ்தலர்களுக்கு மாசில்லாத தலைவியே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

வேதசாட்சிகளுக்கு மாசில்லாத சகாயமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

ஸ்துதியர்களுக்கு மாசில்லாத வல்லமையே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

கன்னியாஸ்திரீகளுக்கு மாசில்லாத முடியே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சகல கிறீஸ்தவர்களுக்கும் மாசில்லாத பரிசுத்ததனமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

புண்ணியவான்களுக்கு மாசில்லாத துணையே,  எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உம்மை நம்புகிறவர்களுக்கு மாசில்லாத சந்தோஷமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

வியாதிக்காரருக்கு மாசில்லாத ஆரோக்கியமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பாவிகளுக்கு மாசில்லாத அடைக்கலமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பதிதர்களுக்கு பயங்கரமான மாசில்லாத ஆண்டவளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

மனுமக்களுக்கு மாசில்லாத பரிபாலியே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உம்மை ஸ்துதிக்கிறவர்களுக்கு மாசில்லாத உபகாரியே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.

சேசுக்கிறீஸ்துநாதருடைய திருவாக் குத்தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரவான்களா யிருக்கத்தக்கதாக, மாசில்லாமல் உற்பவித்த அர்ச். மரியாயே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பிரார்த்திக்கக்கடவோம்

அர்ச். கன்னிமாமரி மாசில்லாமல் உற்பவிக் கவும் உமது திவ்விய குமாரன் தங்கும் பரிசுத்த ஸ்தலமாயிருக்கவும் அவரைத் தெரிந்து கொண்டு நிகரில்லாத வரங்களால் அவரை அலங்கரிக்கத் திருவுளமான சர்வ வல்லவராகிய சர்வேசுரா! சேசுநாதருடைய புண்ணியப் பேறுகளினாலே அவர்களைச் சகல பாவதோ­ங்களிலிருந்து காப்பாற்றி இரட்சித்ததுபோல, நாங்கள் பரிசுத்தர் களாய் உம்முடைய சந்நிதானத்துக்கு வரும்படி யாய்க் கிருபை செய்தருள வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம்.  இந்த மன்றாட்டை சேசுகிறீஸ்துநாதருடைய திருமுகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும் சுவாமி. 

ஆமென்.