அர்ச். செபஸ்தியாரை நோக்கிச் ஜெபம்

(திருநாள் : ஜனவரி 20)

அஞ்ஞானிகளால் உபாதிக்கப்பட்ட கிறீஸ்தவர்களுக்கு ஆறுதல் அளித்தவரும் வேதசாட்சி முடி பெற்றவருமான போர்வீரராகிய அர்ச். செபஸ்தியாரே! என்பேரில் இரக்கமாயிரும். ஆகாதவனுடைய மரணத்தை விரும்பாமல், அவன் குணப் பட விரும்புகிற சர்வேசுரன் பாவிகள் மனந்திரும்பவும், தர்மாத்துமாக்கள் பரிசுத்தப் படவும் வைசூரி, பேதி, பெரு வாரிக் காய்ச்சல் இவை முதலிய வியாதிகளை அனுப்பினாலும் சில விசை முன்பாடுபட்டு பேரடைந்த அர்ச்சியசிஷ்டவர் களுடைய வேண்டுதலாலே உபத்திரவப்படுகிறவர் களுடைய துன்பநாளில் அவர்களுக்கு ஆறுதலைக் கட்டளையிடுகிறாரென்று நான் அறிந்திருக்கிற படியால் இந்த வியாதியில் உமது சகாயத்தைக் கேட்டு மன்றாடுகிறேன்.  உரோமாபுரியில் உம் முடைய பேரால் பீடம் எழுப்பியபின்பு விஷக் காய்ச்சல் நீங்கினதென்று நான் அறிந்திருக்கிறேன்.

தியோக்கிளேஷியன் அரசனுக்குப் பயப்படா மல் வலிய வேதசாட்சியான அர்ச். செபஸ்தியாரே!  இந்த உபத்திரவமான வியாதியில் என்னைக் கைவிடாதேயும்.  என் பாவங்களுக்காக வந்த இந்த நோயை நான் பொறுமையோடே பொறுக்க வேண்டியதுதான். சுவாமியின் கைப்பாரம் என் மேல் சுமத்தப்பட்டது. நானோ வெகு பலவீனன். காற்றால் அடிக்கப்பட்ட சருகு போல் இருக் கிறேன். கடலில் கிடக்கும் துரும்பு போல் தத்தளிக் கிறேன். தேவனுடைய கோபத்தைத் தாங்க நான் வல்லவனல்லவே. நான் குடிக்க வேணுமென்று சர்வேசுரன் மனதாயிருக்கிற இந்த உபத்திரவப் பாத்திரத்தை நான் வீரத்துவம் பொருந்திய பொறு மையோடு குடிக்க எனக்காக ஆண்டவரை வேண்டிக்கொள்ளும்.  என் கேட்டுக்காக அல்ல, என் நலத்திற்காகவே சர்வேசுரன் என்னை தண்டிக் கிறார். காயப்படுத்துகிறவரும் குணமாக்குகிற வரும் அவரே.  நான் நல்ல நாளில் சர்வேசுரனை சிநேகிக்கிறதுபோல, துன்ப நாளிலும் அவரைச் சிநேகிக்கக்கடவேன்.  நான் இந்த வியாதியில் அலையுண்டு கலங்காதபடிக்கு இந்தக் கசப்பான பாத்திரத்தைச் சந்தோ­மாய் அவர் திருக்கரத் திலிருந்து வாங்கிக் குடிக்க எனக்கு வேண்டிய தைரியத்தைப் பெற்றுத் தந்தருளும்.

ஒரு ஸ்திரீ தன் பிள்ளையை மறந்தாலும் மனுமக்களை மறக்காத சர்வேசுரன் வைசூரி, பேதி, காய்ச்சல் முதலிய வியாதிகளையும், தரித்திரம், போர், பஞ்சம் முதலிய பெரிய துன்பங் களையும் நேசத்தினால் வரவிடுகிறார் என்று நான் அறிந்திருந்தும், ஏன் அவர் பேரில் முறைப்படு வேன்?  ஆகையால் அர்ச். செபஸ்தியாரே!  இந்த வியாதி சீக்கிரம் குணமாக சர்வேசுரன் சித்தமா யிராவிட்டால், நான் அதை நல்ல மனதோடு பொறுக்க எனக்கு தைரியத்தையாகிலும் தர மன்றாடும்.  என் பாவங்களின் பரிகாரத்துக்காக இன்னும் அதிக நோய்களும் துன்பங்களும் வர வேணுமென்று நான் ஆசிக்க வேண்டியதுதான்.  அர்ச்சியசிஷ்டவர்களே துன்ப துரித நோய்களை ஆசித்திருக்க, பாவியாகிய நான் நித்திய பாக்கிய மடைய நோய் வருத்தங்களை ஆசிக்காமலிருக்கக் கூடுமோ?  ஆனால் அர்ச். செபஸ்தியாரே, நான் மகா பலவீனனும், புண்ணியத்தில் திடனற்ற வனுமாயிருப்பதால், தேவரீர் என்மேல் இரங்கி இந்தத் துன்பங்களைப் பொறுமையோடாகிலும் நான் சகித்துக் கொள்ள எனக்காக ஆண்டவரை மன்றாடும். 

ஆமென்.