அர்ச். கன்னிமரியாயின் மாசற்ற இருதயத்தின் பிரார்த்தனை

சுவாமி கிருபையாயிரும்
கிறீஸ்துவே கிருபையாயிரும்
சுவாமி கிருபையாயிரும்

கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும்.

கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும்.

பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

இஸ்பீரீத்து சாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

அர்ச்சியசிஷ்ட தமதிருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

அர்ச். மரியாயின் மாசற்ற இருதயமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சர்வேசுரனுடைய திரு இருதயத்திற்கு உகந்த மாசற்ற இருதயமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சேசுவின் திரு இருதயத்தோடு ஒன்றான மாசற்ற இருதயமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

இஸ்பிரீத்துசாந்துவுக்கு பிரிய சங்கீதமாகிய மாசற்ற இருதயமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அர்ச். திரித்துவத்தின்  தேவாலயமான மாசற்ற இருதயமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

மாம்சமாய் அவதரித்த தெய்வீக வார்த்தைக்குப் பிரிய இருப்பிடமான மாசற்ற இருதயமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பிரியதத்தத்தினாலே பூரணமான மாசற்ற இருதயமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சகல இருதயங்களில் ஆசீர்வதிக்கப்பட்ட மாசற்ற இருதயமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

மகிமைப் பிரதாப சிம்மாசனமாகிய மாசற்ற இருதயமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அத்தியந்த தாழ்ச்சியுள்ள மாசற்ற இருதயமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

தேவசிநேகத்தின் பலியான மாசற்ற இருதயமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சேசுநாதரோடு சிலுவையில் அறையுண்ட மாசற்ற இருதயமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

கஸ்திப்படுகிறவர்களுக்கு ஆறுதலாகிய மாசற்ற இருதயமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பாவிகளுக்கு அடைக்கலமான மாசற்ற இருதயமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

மரிக்கிறவர்களுக்கு நம்பிக்கையான மாசற்ற இருதயமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

இரக்கத்திற்கு இருப்பிடமான மாசற்ற இருதயமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.

இருதயத் தாழ்ச்சியும் சாந்தமுமுடைத்தான மாசற்ற மரியாயே, எங்கள் இருதயம் சேசுவின் திரு இருதயம் போலாகும்படி செய்தருளும். 

பிரார்த்திக்கக்கடவோம்

இரக்கம் நிறைந்த சர்வேசுரா, பரிசுத்த கன்னி மரியாயின் மாசற்ற திரு இருதயம் பாவிகளுக்கு இரட்சணியமும், நிர்ப்பாக்கியருக்கு அடைக்கல முமாய் இருக்கத்தக்கதாக, அம்மாசற்ற இருதயத்தை சிநேகத்தினாலும், இரக்கத்தினாலும் உமது திருக்குமாரன் சேசுநாதருடைய திரு இருதயத்துக்கு மிகவும் ஒத்ததாயிருக்கச் செய்தருளினீரே; இந்த மிகுந்த மதுரமும் அன்பும் பொருந்திய இருதயத்தைக் கொண்டாடுகிற நாங்கள் அந்தப் பரிசுத்த கன்னிமரியாயின் பேறுபலன்களாலும் சலுகையாலும், சேசுவின் திரு இருதயத்துக்கு உகந்தவர்களாய்க் காணும்படி அநுக்கிரகம் செய் தருளும். இந்த மன்றாட்டுகளையயல்லாம் எங்கள் ஆண்டவரான சேசுக்கிறீஸ்துவின் திருமுகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும் சுவாமி. 

ஆமென்.