சிந்தாயாத்திரை மாதாவே! திருச்சபை என்னும் கப்பலை ஏந்தும் தாயே! பாவப் பெருங்கடலை நீந்துவோருக்கு மெய்யான தெப்பமே, என் ஆண்டவருக்குப் பின் என் ஏக நம்பிக்கையே, நான் அகோர தந்திர வலைகளில் சிக்கிச் சமுசார சாகரத்தில் அமிழ்ந்து என் பாவத்தால் நெருக்கமான மோட்ச வழியை நான் எளிதாகக் கைக் கொள்ளாமல் போராடி வரும் இத்தருணத்தில், எனக்கு உதவியாக வந்து, வைத்தியனைப் போல என் பாவ நோயைக் குணப்படுத்தி, தாயைப் போல எனக்கு ஞான அமுதூட்டி, தைரியம் தந்து, என் ஞானக் கப்பலாகிய ஆத்துமமானது நித்திய பேரின்ப பாக்கிய மோட்சக் கரையை அடையத் தயை செய்தருளும். தாயே,
ஆமென்.
ஒரு அருள்.