சுவாமி! என் தாய் தந்தையரை உமது நேசத் தினுடையவும், வல்லமையினுடையவும் சாய லாக உண்டாக்கி என்னை எல்லாவற்றிலும் அவர்களுக்குக் கீழ்ப்படியவும் அவர்களை நேசிக் கவும் கட்டளையிட்டீரே. சர்வத்துக்கும் வல்லவ ரான சர்வேசுரா, உமது கற்பனையானதை ஆசையோடும் முழு இருதயத்தோடும் நான் கைப்பற்ற எனக்கு உமது வரப்பிரசாதத்தைத் தந்தருளும். நான் அன்போடு அவர்களை நேசிக் கவும் மரியாதை செய்யவும், அவர்களுடைய கட்டளைகளுக்கு ஜாக்கிரதையுடன் கீழ்ப்படிந்து அவர்களுடைய இஷ்டத்துக்கு இணங்கி நடக்கவும், எல்லாவற்றிலும் அவர்களுடைய நலத்தை விரும்பி அவர்களுடைய தண்டனைகளைத் தாழ்ச்சியோடும், பொறுமையோடும் சகித்துக் கொள்ளவும் எனக்கு உதவி செய்தருளும்.
ஓ தேவனே! அகங்காரத்திலும், கலகத்திலும், வைராக்கியத்திலும், பிடிவாதத்திலுமிருந்து என்னை விடுவியும். என் எல்லாப் படிப்பினை களிலும் வேலைகளிலும், என்னைச் சுறுசுறுப் புடையவனாகவும் சோதனைகளில் பொறுமை யுடையவனாகவும் செய்தருளும். நான் அப்படியே என் ஜீவிய கால முழுவதிலும் என் ஆண்டவரான சேசுக்கிறீஸ்துநாதர் மூலமாக உமது பிள்ளை யயன்கிற பெயருக்கும் பாத்திரமுள்ளவனா யிருப்பேனாக.
ஆமென்.