சுவாமி கிருபையாயிரும்
கிறீஸ்துவே கிருபையாயிரும்
சுவாமி கிருபையாயிரும்
கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும்.
கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும்.
பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
இஸ்பீரீத்து சாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
அர்ச்சியசிஷ்ட தமதிருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
ஜென்மப் பாவமில்லாமல் உற்பவித்த அர்ச். மரியாயே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
அர்ச். மிக்காயேலே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
அர்ச். கபிரியேலே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
அர்ச். இரபாயேலே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
நவவிலாச சபையிலுட்பட்ட சகல சம்மனசுக்களே,மீமீ
அர்ச். ஸ்நாபக அருளப்பரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
அர்ச். ஆபேலே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
அர்ச். ஆபிரகாமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
அர்ச். ஈசாக்கே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
அர்ச். யாக்கோபே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
அர்ச். மோயீசனே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
அர்ச். இசையாஸே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
அர்ச். தானியேலே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
அர்ச். ஜெரேமியாஸே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
அர்ச். அனானியாஸே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
அர்ச். அசாரியாஸே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
அர்ச். தாவீதே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
அர்ச். சக்கரியாஸே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
பிதாப்பிதாக்களும், தீர்க்கதரிசிகளுமாயிருக் கிற சகல அர்ச்சியசிஷ்டவர்களே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.
சர்வேசுரனுடைய சித்தத்திற்கு மிகவும் பிரியமுள்ள மாசில்லாத குழந்தைகளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.
ஆதித்தாய், தகப்பனிடத்தில் பிறந்த ஜென்மப் பாவ தோத்தை மாற்ற வந்த சேசுநாதருக்காகச் சீவனைத் தந்த மாசில்லாத குழந்தைகளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.
ஆதி மனுஷனால் தோன்றின ஜென்மப் பாவத்தை சேசுநாதருடைய திரு இரத்தத்தால் விமோசனமாக்கின மாசில்லாத குழந்தைகளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.
சர்வேசுரனுடைய தரிசனத்தை எப்போதும் தரிசிக்கிற மாசில்லாத குழந்தைகளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.
சர்வேசுரனுடைய தயவைப் பேறுபெற்று அனுபவிக்கிற மாசில்லாத குழந்தைகளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.
சர்வேசுரனுடைய இராச்சியத்திலே முத்தர் களான மாசில்லாத குழந்தைகளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.
இவ்வுலகத்தினுடைய கர்மப் பாவத்தைத் துவேஷித்த மாசில்லாத குழந்தைகளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.
இவ்வுலகத்தில் பிறந்தவுடனே மோட்ச இராச்சியத்தில் பிரவேசித்த மாசில்லாத குழந்தைகளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.
சேசுநாதருடைய புண்ணியங்களினால் நிரப்பப்பட்ட மாசில்லாத குழந்தைகளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.
சேசுநாதருடைய திரு இருதயத்துக்குப் பிரியமான மாசில்லாத குழந்தைகளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.
சேசுநாதருடைய விசேஷ பட்சத்தினால் அவருக்காக வேதசாட்சிகளாய்ப் பாக்கியம் பெற்ற மாசில்லாத குழந்தைகளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.
தேவமாதாவினுடைய மகிமையை எப்போ தும் தரிசிக்கின்ற மாசில்லாத குழந்தைகளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.
மோட்சத்தில் உண்டாகிய பாக்கியத்தை மன மகிழ்ச்சியோடு அனுபவிக்கிற மாசில்லாத குழந்தைகளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.
சகல அர்ச்சியசிஷ்டவர்களோடே பேரின்ப சந்தோஷத்தைக் கொண்டிருக்கிற மாசில்லாத குழந்தைகளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.
சகல கன்னியாஸ்திரீகளுடைய மனமகிழ்ச்சியான மாசில்லாத குழந்தைகளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி.
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமி.
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.
பிரார்த்திக்கக் கடவோம்
சர்வ சக்தி உள்ளவருமாய் அத்தியந்த மகிமை உடைத்தானவருமாயிருக்கிற சர்வேசுரா, சுவாமி! தேவரீர் உலகத்தை மிகவும் சிநேகித்திருந்தபடி யினாலே, உம்முடைய திருக்குமாரன் வழியாய் எங்களுடைய இரட்சிப்பை நிறைவேற்ற கிருபை செய்தருளினீரே. தேவரீர் மாசில்லாத குழந்தை களுக்கு இரட்சணிய வரம் தந்தருளினது போல, எங்களுக்கும் தந்தருளத் தேவரீரை மன்றாடு கிறோம். ஆதலால் நாங்கள் எல்லோரும் சேசுகிறீஸ்துவைக் கொண்டு தேவரீருடைய சித்தத்திற்கு ஏற்க நடக்கவும், மோட்ச பாக்கியத் தில் பிரவேசிக்கவும், அவருடைய புண்ணியப் பேறுகளைப் பார்த்து எங்களுக்கு அனுக்கிரகம் செய்தருளும். ஞான உத்தானத்திற்கும் பாவப் பொறுத்தலுக்கும் பாத்திரவான்களாகிச் சத்திய வேதத்தை முழு மனதோடு விசுவசித்து, விசுவாசம், நம்பிக்கை, தேவசிநேகம் என்கிற புண்ணியங் களில் வளர்வதற்கு தேவரீர் எங்களுக்குக் கிருபை செய்தருள உம்மை மன்றாடுகிறோம். இந்த மன்றாட்டுக்களை எல்லாம் உமது ஏக குமாரனு மாய் எங்கள் ஆண்டவருமாயிருக்கிற சேசு கிறீஸ்துநாதருடைய திருமுகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும்.
ஆமென்.