தேவ வரங்களால் நிறைந்த அர்ச். சூசையப்பரே வாழ்க. கர்த்தரும் கர்த்தருடைய திருத் தாயாரும் உம்முடனே. மனிதர்களுக்குள் ஆசீர் வதிக்கப்பட்டவரும் நீரே. உம்முடைய திருக் கன்னிப் பத்தினியினுடையவும் கனியாகிய சேசு ஆசீர்வதிக்கப்பட்டவருமாமே. கன்னித் தாயாருடைய பரிசுத்த பத்தாவாகிய அர்ச். சூசையப்பரே! உம்முடைய ஊழியரும் பிள்ளைகளுமாயிருக்கிற எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். சேசுக்கிறீஸ்து நாதருடையவும் கன்னிமரியம்மாளுடையவும் திருக்கரங்களில் பாக்கியமான மரணத்தை அடைந்தவர் நீரே. எங்களுக்கு எப்பொழுதும் எங்கள் மரண நேரத்திலும் ஒத்தாசையாயிரும்.
ஆமென்.