அர்ச். இஞ்ஞாசியார் பிரார்த்தனை

சுவாமி கிருபையாயிரும்
கிறீஸ்துவே கிருபையாயிரும்
சுவாமி கிருபையாயிரும்

கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும்.

கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும்.

பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

இஸ்பீரீத்து சாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

அர்ச்சியசிஷ்ட தமதிருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

அர்ச். மரியாயே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அர்ச். இஞ்ஞாசியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பிதாவாகிய சர்வேசுரனுடைய ஞான புத்திரனே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அவதரித்த சுதனாகிய சர்வேசுரனைப் பின் சென்றவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

இஸ்பிரீத்துசாந்துவாகிய சர்வேசுரனுடைய ஏவுதலை அனுசரித்தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

தேவமாதாவுக்கு எப்பொழுதும் உகந்த தாசனானவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அப்போஸ்தல ஸ்தானத்துக்கு மிகவும் பிரியமானவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சேசுசபையை உண்டாக்கினவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அர்ச்சியசிஷ்டவர்களுக்குள்ளே உத்தம ஞானியே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அதிசிரேஷ்ட முனிவர்களுக்குள்ளே உத்தம அர்ச்சியசிஷ்டவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

தேவ தோத்திரத்துக்காக மிகவும் பிரயாசைப்பட்டவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

ஆத்துமங்களுடைய ஈடேற்றத்தில் உத்தம அபேட்சையுள்ளவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அர்ச்சியசிஷ்டவர்களுடைய சரித்திரத்தின் வாசிப்பினால் அர்ச்சியசிஷ்டவராக ஏற்பட்டவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அநேகமுறை திவ்விய தரிசனங்களைக் கண்டவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

ஞான யுத்தத்தின் அரசரானவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சேசுநாதருடைய திருச்சபையை விளங்கப் பண்ணுகிறவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

தேவ ஆராதனையை வர்த்திக்கப் பண்ணுகிறவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

ஞான ஒடுக்க முறையை உண்டுபண்ணினவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

ஆத்துமங்களை இரட்சிக்கிறதிலே உத்தம சற்குணமுள்ளவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

குணாகுணங்களை நன்றாய்க் கண்டுபிடிப்பவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பரலோக நன்மைகளைக் கொண்டிருக்கிற பொக்கிஷமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

திவ்விய நற்கருணைக்குப் பூச்சியமான பாத்திரமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சுவிசேஷத்தின் புத்திமதிகளைக் குறையற அனுசரித்தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

குறையற்ற தருமத்தின் உத்தம மாதிரிகையே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

மெய்யான பக்தியின் சுரூபியானவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

தேவ ஊழியத்துக்கு அத்தியந்த பக்திப் பற்றுதலுள்ளவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பூலோகத்தை நிந்தித்தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

குருத்துவத்தின் பூச்சியமான அலங்காரமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

மெய்யான செபத்தின் அடையாளமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

மாசில்லாத நடக்கையின் மாதிரிகையே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

மாசில்லா சத்தியத்தின் பிரமாணிக்கமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

வாலிபர்களைத் தரும வழியில் நடப்பிக்கப் படிப்பித்தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

மிகவும் உத்தம திடத்தின் பதனமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உபவாசத்தின் காரணியே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உலக வெகுமானத்தை ஜெயித்தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

மனதினுள் பட்சத்தை இடைவிடாமல் அர்ச்சிக்கப் பார்த்துக் கொண்டிருந்தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சகல இச்சைகளை அடக்கி ஒடுக்கினவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

குற்றங்களைப் பொறுக்கிறவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

தப்புள்ள கிரிகைகளையும், சிந்தனைகளை யும் கண்டிப்பாய் நீக்கி விலக்கினவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உம்மை நம்பினவர்களை உத்தம விதமாய் பாதுகாக்கிறவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பாவங்களுடைய வேரைப் பிடுங்குகிறவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பதிதத்தனங்களை ஜாக்கிரதையாய் மறுத்து அகற்றினவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பசாசுக்களைப் பயங்கரப்படுத்தி ஓட்டு கிறவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

ஏழைகளுக்குச் சலுகையே,  எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

தரித்திரருடைய காரிய கர்த்தாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பசித்தவர்களைப் போஷித்தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சேசுக்கிறீஸ்துவை மிகவும் நேசித்தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சர்வேசுரனுடைய சித்தத்துக்குக் கீழப்படி யாதவர்களைச் சகிக்காதவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

திரளான பாவிகளை நன்னெறியில் திருப் பினவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பாவிகளுக்கு அடைக்கலமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

ஆபத்திலுள்ள ஸ்திரீகளுக்கு அநேக மடங் களை ஸ்தாபித்தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

தபசிகளுக்குத் தலைமையானவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

ஒத்திராத விரோதிகளுக்குச் சமாதானமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

யாவர்க்கும் விவேக வித்தியாபாரகரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

விசுவாசிகளை ஆதரிக்கிறவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அஞ்ஞானிகளை மனந்திருப்புகிறவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சம்மனசுக்களுடைய பக்தரானவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

தீர்க்கதரிசிகளுடைய ஞானத்தைக் கொண் டிருக்கிறவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அப்போஸ்தலர்களுடைய பக்திப் பற்றுதலின் சுவாலையானவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

திரளான வேதசாட்சிகளின் பிதாப்பிதா வானவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

வேத சாஸ்திரிகளுக்கு உத்தம வழி ஏற்படுத் தினவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உத்தம ஸ்துதியர்களுடைய படிப்பினையே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

எண்ணிறந்த ஸ்துதியர்களுடைய பிதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உத்தமமாய் ஸ்துதிக்கிறவர்களுடைய பிரதிப் பாதையே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

கன்னியாஸ்திரீகளுடைய துணையே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

கடின தபசின் கண்ணாடியே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சந்நியாசத்தை சிநேகித்தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சகல அர்ச்சியசிஷ்டவர்களுடைய பேரின்ப பாக்கியத்துக்குப் பங்காளியாக பாத்திரமான வரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.

பிரார்த்திக்கக்கடவோம்

சர்வேசுரா சுவாமி! தேவரீருடைய திருநாமத்தின் தோத்திரம் உத்தம மேரையாய் பரம்பத் தக்கதாக அர்ச்சியசிஷ்ட இஞ்ஞாசியாரைக் கொண்டு யுத்தம் பண்ணுகிற உமது திருச்சபையை நவமான படையினாலே திடப்படுத்தினீரே. அவருடைய மன்றாட்டின் ஒத்தாசையினாலும், சுகிர்த மாதிரிகையினாலும், நாங்கள் பரலோகத்தில் பேறுபெற்ற நித்திய ஆனந்த பாக்கியத்தை அநுபவிக்கத்தக்கதாக எங்களுக்கு அனுக்கிரகம் பண்ணியருளும். சதாகாலம் சீவியருமாய் இராட்சியபாரம் பண்ணுகிற வருமாயிருக்கிற ஆண்டவரே.

ஆமென்.