சுவாமி கிருபையாயிரும்
கிறீஸ்துவே கிருபையாயிரும்
சுவாமி கிருபையாயிரும்
கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும்.
கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும்.
பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
இஸ்பீரீத்து சாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
அர்ச்சியசிஷ்ட தமதிருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
சம்மனசுக்களுடைய இராக்கினியான அர்ச்சியசிஷ்ட மரியாயே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
அர்ச்சியசிஷ்ட மிக்காயேலே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
சர்வேசுரனுடைய ஞானத்தால் நிறைந்திருக்கிறவரான அர்ச். மிக்காயேலே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
தாழ்ச்சியின் கண்ணாடியான அர்ச். மிக்காயேலே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
கீழ்ப்படிதலை ஏவுகிறவரான அர்ச். மிக்காயேலே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
தேவகுமாரனை உத்தம உத்தமமாய் ஆராதிக்கிறவரான அர்ச். மிக்காயேலே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
மகிமையாலும், பிரதாபத்தாலும் சூழப்பட்டவரான அர்ச். மிக்காயேலே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
ஆண்டவருடைய பரம சேனைக்குப் பராக்கிரமமுள்ள படைத்தலைவரான அர்ச்.மிக்காயேலே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
அர்ச். தமதிரித்துவத்தின் விருதை ஏந்தினவரான அர்ச். மிக்காயேலே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
மோட்ச இராச்சியத்தின் காவலாளியான அர்ச். மிக்காயேலே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
சமாதானத்தின் தூதரான அர்ச். மிக்காயேலே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
இஸ்ராயேல் சனத்துக்கு வழிகாட்டியும் தேற்றரவுமாகிய அர்ச். மிக்காயேலே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
யுத்த சபையின் கொத்தளமாகிய அர்ச். மிக்காயேலே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
உத்தரிக்கிற சபையின் தேற்றரவாகிய அர்ச். மிக்காயேலே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
ஒட்டலோக சபையின் மகிமையும் சந்தோஷமுமாகிய அர்ச். மிக்காயேலே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
சம்மனசுக்களுடைய பிரகாசத் தலைவராகிய அர்ச். மிக்காயேலே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
விசுவாசிகளுக்குக் கோட்டையான அர்ச். மிக்காயேலே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
சிலுவைக் கொடியின் கீழ் யுத்தம் பண்ணுகிறவர்களுக்கு உறுதியான அர்ச். மிக்காயேலே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
அந்நியோந்நிய பட்சத்தின் பந்தனமான அர்ச். மிக்காயேலே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
பதிதர்களின் எதிராளியான அர்ச். மிக்காயேலே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
மரண அவஸ்தைப்படுகிறவர்களுடைய ஆத்துமங்களின் நம்பிக்கையான அர்ச். மிக்காயேலே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
நித்திய தீர்ப்பை அறிவிப்பவராகிய அர்ச். மிக்காயேலே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
சகல ஆபத்துக்களிலும் உதவி செய்கிறவராகிய அர்ச். மிக்காயேலே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
ஆதிமுதல் தாழ்ச்சியினாலே சர்வேசுரனுடைய ஆதீனத்தைக் காப்பாற்றுகிறவரான அர்ச். மிக்காயேலே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
சம்மனசுக்களால் சங்கிக்கப்படுகிற அர்ச். மிக்காயேலே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
இஸ்பிரீத்துசாந்துவின் சாட்சியினாலே பெரியவரென்றும் பராக்கிரமம் உள்ளவரென்றும் உயர்த்தப்பட்ட அர்ச். மிக்காயேலே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
உம்முடைய மன்றாட்டினால் எங்களை மோட்சத்தில் பிரவேசிப்பிக்கிற அர்ச். மிக்காயேலே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
ஆத்துமங்களின் ஈடேற்றத்தை விசாரிக்க சர்வேசுரனால் நியமிக்கப்பட்ட அர்ச். மிக்காயேலே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
பிரதான தலைவர்களில் ஒருவராகவும் பெரிய தலைவராகவும் வேதாகமங்களில் புகழப்பட்ட அர்ச். மிக்காயேலே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
சர்வேசுரனுடைய மக்களுக்கு ஆதரவாகிற எங்கள் தலைவரான அர்ச். மிக்காயேலே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
எங்களை ஆதரிக்கிறவரான அர்ச். மிக்காயேலே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி.
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமி.
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.
எங்கள் ஆண்டவராகிய சர்வேசுரனிடத்தில், அர்ச். மிக்காயேலே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
பிரார்த்திக்கக்கடவோம்
சம்மனசுக்களுக்கும் மனிதர்களுக்குமுரிய உத்தியோகங்களை ஆச்சரியமான கிரமமாய் நடத்திக்கொண்டு வருகிற நித்திய சர்வேசுரா! தேவரீருக்கு மோட்சத்திலே இடைவிடாமல் பணிவிடை செய்கிறவர்களாலே இப்பூவுலகத்தில் எங்கள் சீவியத்தைக் காப்பாற்றும்படி தயவு செய்தருளும் சுவாமி. இந்த மன்றாட்டை எங்கள் ஆண்டவராகிய சேசுக்கிறீஸ்துநாதருடைய திருமுகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருள வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம்.
ஆமென் சேசு.