(திருநாள் : அக்டோபர் 28)
மகா உன்னத வரங்களால் அர்ச்சியசிஷ்ட ததேயு என்னும் அப்போஸ்தலரை உயர்த்திய சர்வேசுரா, வரப்பிரசாத சகாயங் களின்றி எங்களால் ஆகும் நற்கிரியை களேது? தேவரீருக்காக மரண மட்டும் கீழ்ப்படிந்து வெகு சனங்களுக்கு உபதேசம் செய்த இந்த உம் அப்போஸ்தலருடைய திருமுகத்தைப் பார்த்து, எங்களைச் சூழ்ந்து வரும் சோதனைகளி லும், விக்கினங்களிலும் நாங்கள் திடன் கொண்டு, எல்லா வரங் களுக்கும் ஊறுணியாகிய உம்மைப் பின்பற்றி நடக்கச் செய்யும். எல்லாத் தின்மைகளும் முடிய நித்திய சுகம் அடைவோமென்று விசுவசிக்கிற கிறீஸ்தவர்களாகிய நாங்கள் மாய்கைகளினா லேயும், தந்திரங்களினாலேயும் மோசம் போகாமல் சுபாவத்தை ஜெயித்து, பெரிய புண்ணியங்களைச் செய்து, மோட்சமடையக் கிருபை செய்தருளும் சுவாமி.
ஆமென்.