1- வது, புகழப் புகழ அமிர்தமான சேசுவே, தேவரீர் நாம் உலகத்தில் நெருப்புப் பற்றுவிக்க வந்தோமென்று திருவுளம்பற்றினீரே; உலக ஆசையால் குளிர்ந்திருக்கிற எங்கள் இருதயங்களை உமது தேவ அக்கினியால் எரிக்க நல்ல நேரத்திலே எங்கள் தேசத்தில் வந்திருப்பீராக. உமது திரு நாமம் சதாகாலமும் புகழப்படுவதாக. அருள்...
2-வது. புகழப் புகழ அமிர்தமான சேசுவே, தேவரீர் நாம் உலகத்தின் பிரகாசமென்று திருவுளம்பற்றினீரே; மரண நிழலிலும், பாவ அந்தகாரத்திலும் அமிழ்ந்தியிருக்கிற எங்களைப் பிரகாசிப்பிக்க நல்ல நேரத்திலே எங்கள் தேசத்தில் வந்திருப்பீராக. உமது திருநாமம் சதாகாலமும் புகழப்படுவதாக. அருள்...
3-வது. புகழப் புகழ அமிர்தமான சேசுவே, தேவரீர் நாம் சகலத்திலும் மாதிரியயன்று திருவுளம்பற்றினீரே; எங்கள் கிரியைகளின் ஆதியந்தம் எல்லாம் உமது திருச்சித்தப்படி நடப் பிக்க நல்ல நேரத்திலே எங்கள் தேசத்தில் வந்திருப் பீராக. உமது திருநாமம் சதாகாலமும் புகழப் படுவதாக. அருள்...
4-வது. புகழப் புகழ அமிர்தமான சேசுவே, தேவரீர் நாம் உத்தம கொடி முந்திரிகையயன்று திருவுளம்பற்றினீரே. எங்களை நற்கிளைகளாக இந்தத் திவ்விய கொடியில் சேர்த்து, உத்தம பழங் களைக் காய்க்கப் பண்ண நல்ல நேரத்திலே எங்கள் தேசத்தில் வந்திருப்பீராக. உமது திருநாமம் சதாகாலமும் புகழப்படுவதாக. அருள்...
5-வது. புகழப் புகழ அமிர்தமான சேசுவே, தேவரீர் நாம் நல்ல இடையனென்று திருவுளம் பற்றினீரே; கெட்டுப்போன பிரஜைகளாயிருக்கிற எங்களை உமது பட்டியின் வழியிலே நடப்பிக்க நல்ல நேரத்திலே எங்கள் தேசத்தில் வந்திருப் பீராக. உமது திருநாமம் சதாகாலமும் புகழப் படுவதாக. அருள்...
6-வது. புகழப் புகழ அமிர்தமான சேசுவே, தேவரீர் நாம் ஆட்டுப்பட்டியின் வாசலென்று திருவுளம்பற்றினீரே; உமது மந்தைகளின் சொந்த ஆடு களாகிற எங்களை உமது மோட்ச பட்டியில் உட்படுத்த நல்ல நேரத்திலே எங்கள் தேசத்தில் வந்திருப்பீராக. உமது திருநாமம் சதாகாலமும் புகழப்படுவதாக. அருள்...
7-வது. புகழப் புகழ அமிர்தமான சேசுவே, தேவரீர் நாம் பரமண்டலத்தில் நின்று இறங்கின ஜீவிய அப்பமென்று திருவுளம் பற்றினீரே; இந்தத் திவ்விய அப்பத்தின் போஜனத்தினால் எங்களைப் பலப்படுத்தி நடப்பிக்க நல்ல நேரத்திலே எங்கள் தேசத்தில் வந்திருப்பீராக. உமது திருநாமம் சதாகாலமும் புகழப்படுவதாக. அருள்...
8-வது. புகழப் புகழ அமிர்தமான சேசுவே, தேவரீர் நாமே வழியும் உண்மையும் சீவியமுமா யிருக்கிறோமென்று திருவுளம்பற்றினீரே; எங்களை இந்தத் திவ்விய வழியிலே உண்மை யானபடி நித்திய ஜீவியத்துக்கு நடப்பிக்க நல்ல நேரத்திலே எங்கள் தேசத்தில் வந்திருப்பீராக. உமது திருநாமம் சதாகாலமும் புகழப்படுவதாக. அருள்...
9-வது. புகழப் புகழ அமிர்தமான சேசுவே, தேவரீர் நாம் உலகத்தில் போரை உண்டாக்க வந்தோமென்று திருவுளம்பற்றினீரே; எங்கள் இச்சைகளின் பேரில் நிஷ்டூரப் போர் பொரு வித்து, உம்மோடும் புறத்தியாரோடும் நற்சமா தானமாய் எங்களை நடப்பிக்க நல்ல நேரத்திலே எங்கள் தேசத்தில் வந்திருப்பீராக. உமது திருநாமம் சதாகாலமும் புகழப்படுவதாக. அருள்...
அனந்த சர்வேசுரன் தமது ஈடேற்றுகிற வரை அறியச் செய்தார். ஜனங்களின் முன்னால் தமது நீதியைப் பிரத்தியட்சமாக்கினார்.
பிரார்த்திக்கக்கடவோம்.
அனந்த கிருபை நிறைந்த சர்வேசுரா, தேவரீர் உண்மையான சோதியின் பிரகாசத்தினால் அந்த இராத்திரியைப் பிரகாசிக்கச் செய்தருளினீரே. இந்தத் திவ்விய சோதியின் இரகசியங்களை இவ்வுலகத்திலே நாங்கள் அறியச் செய்த பிரகாரம், அதன் ஆனந்த மகிழ்ச்சிகளை மோட்சத்தில் அனுபவிக்கத் தயவுபண்ணியருள வேண்டு மென்று உம்மையே மன்றாடுகிறோம்.
ஆமென்.