(திருநாள் : ஆகஸ்டு 16)
அர்ச். ஆரோக்கியநாதரே! வியாதியஸ்தரைச் சொஸ்தப் படுத்தத்தக்கதாக கொள்ளை நோய் பரவியிருந்த ஊர்களுக் குத் தேவரீர் தேவசிநேக உற்சாகத்தால் வருந்திப் பிரயா ணம் செய்தீர். உமக்கே அந்த வியாதி நேரிட்டவிடத்தில் உமது நம்பிக்கைத் தோழனா யிருந்த துஷ்ட மிருகத்தால் தேற்றரவு அடைந்தீர். இத்துன்ப காலத்தில் தேவரீர் எங்கள் பேரில் இரங்கி எங்களுக்காக மன்றாடி உதவி புரிந்தருளும். இப்போது எங்கள் மேல் வந்திருக்கும் இந்தப் பயங்கரமான தேவ கோபாக்கினையை முழுதும் அகற்ற, இரக்கமுள்ள திவ்விய இரட்சகரிடத்தில் எங்களுக்காக மனுப் பேசியருளும். நிர்ப்பாக்கியமான கொள்ளை நோய் பரவின இருண்ட ஸ்தலங்களில் தேவரீர் ஐந்து வரு காலம் ஜீவித்த சுகிர்தத்தாலல்லவோ கொள்ளை நோய்களைச் சொஸ்தப்படுத்த அற்புத வரம் அடைந்தீர். “அர்ச். ஆரோக்கியநாதருடைய சலுகையை இரந்து மன்றாடுகிற நோயாளிகள் யாவரும் அந்தக் கொடிய வியாதியினின்று சொஸ்தமடைவார்கள்” என்ற வாசக வாக்குறுதி யடங்கிய சீட்டை ஒரு சம்மனசானவர் கொண்டு வந்து மரித்த உமது திருச்சரீரத்தின் மேல் வைத்ததை தேவரீர் தயவாய் நினைவுகூர்ந்தருளும்.
ஓ! இரக்கம் மிகுந்த அர்ச்சியசிஷ்டவரே, முழு மன நம்பிக்கையோடே நாங்கள் சரணமாக ஓடி வந்தோம். எங்களைக் கைவிடாதேயும் காவலரே!
ஆமென்.
சேசுக்கிறீஸ்துநாதருடைய திருவாக்குத்தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரவான்களாகத்தக்கதாக, அர்ச். ஆரோக்கியநாதரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
பிரார்த்திக்கக்கடவோம்
சர்வேசுரா சுவாமி! அர்ச். ஆரோக்கியநாத ருடைய உதவியை இரந்து மன்றாடுகிற யாவரும் கொள்ளை நோய் முதலிய கொடிய வியாதி களால் எள்ளளவேனும் பயப்பட வேண்டியதில்லையென்று ஒரு சம்மனசினால் அந்த அர்ச்சியசிஷ்டவருக்குத்தானே தெரியப்படுத்தத் திருவுளமானீரே. அந்த அர்ச்சியசிஷ்டவருடைய சுகிர்த மன்றாட்டினாலே ஆத்தும சரீர சகல ஆபத்துகளினின்று நாங்கள் இரட்சிக்கப்படும் பொருட்டுக் கிருபை புரிந்தருளும். இந்த மன்றாட்டுக்களையயல்லாம் எங்கள் ஆண்டவரான சேசுக்கிறீஸ்துநாதருடைய திருமுகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும்.
ஆமென்.