அர்ச். கன்னிமரியம்மாள் தமது திருக் குமாரனின் பாடுகள் நிமித்தமாக அநுபவித்த ஏழு வியாகுலங்களைத் தியானிப்போம்.
முதலாம் வியாகுலம்
இந்த முதல் இரகசியத்திலே அர்ச். கன்னி மரியம்மாளுக்குச் சிமியோன் சொன்ன தீர்க்கதரிசனத்தால் தமது திருக்குமாரனுடைய மரணத்தையும் மனுஷருடைய சேதத்தையும் அறிந்து, அவர்கள் தமது இருதயத்தில் வியாகுல வாளால் ஊடுருவப்பட்டார்களென்று தியானிப்போமாக. 1 பர. 7 அருள். 1 திரி.
இரண்டாம் வியாகுலம்
இந்த இரண்டாம் இரகசியத்தில் அர்ச். கன்னி மரியம்மாள் தமது திருக்குமாரனை ஏரோது என்பவன் கொல்லத் தேடுகிறதை அறிந்து, அவரை எடுத்துக் கொண்டு எகிப்து தேசத்துக்கு ஓடிப்போய் ஏழு வருமளவும் மகாதுக்கம் அநுபவித்தார்களென்று தியானிப்போமாக. 1 பர. 7 அருள். 1 திரி.
மூன்றாம் வியாகுலம்
இந்த மூன்றாம் இரகசியத்திலே அர்ச். கன்னி மரியம்மாள் தமது திருக்குமாரனோடு தேவாலயத்திற்குப் போனவிடத்தில் மூன்றுநாள் தேடியும் காணாமல் போனபடியினாலே தமது ஆத்துமத்தில் மிகுந்த வியாகுலப்பட்டார்களென்று தியானிப்போமாக. 1 பர. 7 அருள். 1 திரி.
நான்காம் வியாகுலம்
இந்த நான்காம் இரகசியத்திலே அர்ச். கன்னி மரியம்மாள் தமது திருக்குமாரன் கபால மலையில் மரணமடைய சிலுவை சுமந்து போகையில், அவரை எதிர்கொண்டு மினவினபோது வாக்குக் கெட்டாத வியாகுலப்பட்டார்களென்று தியானிப்போமாக. 1 பர. 7 அருள். 1 திரி.
ஐந்தாம் வியாகுலம்
இந்த ஐந்தாம் இரகசியத்திலே அர்ச். கன்னி மரியம்மாள் தமது திருக்குமாரன் சிலுவையில் அறையுண்டு அவர் சகலராலும் கைவிடப்பட்டு ஓர் ஆறுதலுமில்லாமல் மரணமடைகிறதைக் கண்டு துக்க சாகரத்தில் அமிழ்ந்தி மனோவாக்குக் கெட்டாத வியாகுலப்பட்டார்களென்று தியானிப்போமாக. 1 பர. 7 அருள். 1 திரி.
ஆறாம் வியாகுலம்
இந்த ஆறாம் இரகசியத்திலே அர்ச். கன்னி மரியம்மாள் தமது திருக்குமாரனுடைய திருச் சரீரத்தைச் சிலுவையினின்று இறக்கி தமது மடிமேல் வளர்த்தி அதிலுள்ள காயங்களை உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கையில் சொல்லக் கூடாத வியாகுலம் அநுபவித்தார்களென்று தியானிப் போமாக. 1 பர. 7 அருள். 1 திரி.
ஏழாம் வியாகுலம்
இந்த ஏழாம் இரகசியத்திலே அர்ச். கன்னி மரியம்மாள் தமது திருக்குமாரனுடைய சரீரத்தைக் கல்லறையில் அடக்கம் பண்ணின பின்பு அவரது மரணத்தையும் திருப்பாடுகளையும் தமது தனிமையையும் நினைத்து மட்டில்லாத துயரம் அனுபவித்தார்களென்று தியானிப்போமாக. 1 பர. 7 அருள். 1 திரி.