திவ்விய குழந்தை சேசு பிரார்த்தனை

சுவாமி கிருபையாயிரும்
கிறீஸ்துவே கிருபையாயிரும்
சுவாமி கிருபையாயிரும்

கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும்.

கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும்.

பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

இஸ்பீரீத்து சாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

அர்ச்சியசிஷ்ட தமதிருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

நித்திய பிதாவின் திருக்குமாரனாகிய திவ்விய பாலனே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

கன்னிமரியாயின் குமாரனாகிய திவ்விய பாலனே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

மனிதனாய் அவதரித்த தேவ குமாரனாகிய திவ்விய பாலனே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உம்முடைய தேவ பிதாவின் ஞானமா யிருக்கிற திவ்விய பாலனே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உம்முடைய மாதாவின் துப்புரவான திவ்விய பாலனே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உம்முடைய பரம பிதாவின் சாயலாயிருக்கிற திவ்விய பாலனே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உம்முடைய மாதாவை சிருஷ்டித்தவராகிய திவ்விய பாலனே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உம்முடைய பிதாவின் பிரகாசமாயிருக்கிற திவ்விய பாலனே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உம்முடைய மாதாவின் மகிமையான திவ்விய பாலனே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உம்முடைய தேவ பிதாவுக்குச் சரிசமானமா யிருக்கிற திவ்விய பாலனே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உம்முடைய மாதாவுக்குக் கீழ்ப்படிந்தவரான திவ்விய பாலனே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உம்முடைய பரமபிதாவின் சந்தோஷமாயிருக்கிற திவ்விய பாலனே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உம்முடைய மாதாவுக்கு பொக்கிஷமாயிருக்கிற திவ்விய பாலனே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உம்முடைய பிதாவின் வரமாயிருக்கிற திவ்விய பாலனே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உம்முடைய தாயின் காணிக்கையான திவ்விய பாலனே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

இஸ்பிரீத்துசாந்துவினால் உற்பவித்த திவ்விய பாலனே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உண்மையான மனிதனும், உண்மையான தேவனுமாயிருக்கிற திவ்விய பாலனே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

பாவிகளான மனுமக்களை மீட்கப் பாவியின் வேஷங் கொண்ட திவ்விய பாலனே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

அர்ச். எலிசபெத்தம்மாளுடைய உதரத் திலிருந்த ஸ்நாபக அருளப்பரைச் சுத்திகரித்த திவ்விய பாலனே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

அர்ச். கன்னிமரியம்மாளின் உதரத்தில் ஒன்பது மாதம் அடங்கியிருந்த திவ்விய பாலனே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

கன்னி மகிமை கெடாதவர்களின் கனியாகிய திவ்விய பாலனே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

மாட்டுக்கொட்டிலில் பிறந்து முன்னிட்டியில் கிடத்தப்பட்டுத் தரித்திரத் துணிகளால் சுற்றப்பட்ட திவ்விய பாலனே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

மனிதர் பாவங்களினிமித்தம் தொட்டிலில் அழுது கொண்டிருந்த திவ்விய பாலனே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

தாழ்மையில் மகிமையுள்ள திவ்விய பாலனே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

சற்பிரசாதத்தின் பொக்கிஷமான திவ்விய பாலனே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

பரிசுத்த சிநேகத்தின் ஊற்றான திவ்விய பாலனே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உம்முடைய பரிசுத்த மாதாவினாலும் விரத்தரான சூசையப்பராலும் அத்தியந்தபக்தி வணக்கத்தோடே நமஸ்கரிக்கப்பட்ட திவ்விய பாலனே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

பிறந்தவுடனே சம்மனசுக்களால் அறிவிக்கவும் ஆராதிக்கவும்பட்ட திவ்விய பாலனே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

ஏழைகளான இடையர்களுக்கு உம்மை வெளிப்படுத்தின திவ்விய பாலனே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

சம்மனசுக்களுக்கும் மனிதர்களுக்கும் கர்த்தா வான திவ்விய பாலனே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

மனுஷ சுபாவங்கொண்டதினால் எங்க ளுக்குச் சகோதரரான திவ்விய பாலனே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

பிதாவாகிய சர்வேசுரனையும் மனிதரையும் சமாதானப்படுத்தப் பிறந்த திவ்விய பாலனே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

தரித்திரராய்ப் பிறந்து உலக செல்வம் ஆடம்பர வெகுமானங்களை அகற்றின திவ்விய பாலனே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

துன்ப அந்தஸ்தில் பிறந்து இன்பங்களை வெறுத்த திவ்விய பாலனே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

விருத்தசேதனத்தில் எங்களுக்காக அன்போடு இரத்தத்தைச் சிந்தின திவ்விய பாலனே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

கிழக்கில் தோன்றின புதிய நட்சத்திரத்தால் உம்மை வெளிப்படுத்தினவரான திவ்விய பாலனே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

மூன்றுராஜாக்கள் உம்மை ஆராதிக்க வருவ தற்காக அவர்களுக்குப் பக்தியையும் தைரியத் தையும் ஏவினவரான திவ்விய பாலனே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

மூன்று ராஜாக்கள் பொன் தூபவர்க்கம், வெள்ளைப்போளமாகிய மூவித காணிக்கைகளை ஒப்புக்கொடுத்து ஆராதித்த திவ்விய பாலனே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

பொன்னால் அரசனாகவும், தூபவர்க்கத்தால் தேவனாகவும், வெள்ளைப்போளத்தால் மனிதனாகவும் எண்பிக்கப்பட்ட திவ்விய பாலனே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உம்முடைய தாயாரால் காணிக்கையாக ஒப்புக்கொடுத்து மீட்டுக்கொள்ளப்பட்ட திவ்விய பாலனே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உம்மைத் தமது கரத்தில் ஏந்தின மகாத்துமா வாகிய சிமியோன் உள்ளத்தைச் சந்தோ­த்தால் நிரப்பின திவ்விய பாலனே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

தீர்க்கதரிசியாகிய அன்னம்மாளென்பவ ளால் புகழவும் இரட்சகரென்று யூதர்களுக்கு அறிவிக்கவும்பட்ட திவ்விய பாலனே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

ஏரோதரசனுடைய கொடிய பகைக்குத் தப்பித்துக்கொள்ள எகிப்து தேசத்துக்குக் கொண்டு போகப்பட்ட திவ்விய பாலனே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

ஏரோதனுடைய கொடுமையால் கொல்லப் பட்ட குழந்தைகளுக்கு இரட்சணியமாயிருந்த திவ்விய பாலனே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

எகிப்து தேசத்தில் பிரவேசித்தபோதே பொய்த் தேவர்களுடைய விக்கிரகங்களைத் தாழ விழுவித்து, பலவிதமான அற்புதங்களைச் செய் தருளின திவ்விய பாலனே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

எகிப்து தேசத்தில் ஏழு வருடம் பரதேசி யாய்ச் சஞ்சரித்த திவ்விய பாலனே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உம்முடைய தேவ பிதாவின் திருவுளத்துக்கு  அன்போடு கீழ்ப்படிந்து எகிப்தினின்று நாசரேத் தூருக்குவந்த திவ்விய பாலனே,

பரம பிதாவின் கட்டளைகளை ஆச்சரியத் துக்குரியவிதமாய் அனுசரித்த திவ்விய பாலனே,

உம்முடைய தேவபிதாவின் தோத்திர ஊழியத் திற்காக உமது நேச மாதாவுக்கும் அர்ச். சூசையப் பருக்கும் மறைவாய் ஜெருசலேமில் மூன்றுநாள் தங்கின திவ்விய பாலனே,

எல்லோரும் ஆச்சரியப்படும்படி சாஸ்திரி களுக்கு வேத சத்தியங்களைத் தெளிவித்துக் கொண்டிருக்கிறபோது மூன்றாம் நாள் அவர்கள் நடுவில் தேவாலயத்திலே தாய் தந்தையரால் காணப்பட்ட திவ்விய பாலனே,

தாய் தந்தையருக்குத் தாழ்ச்சியோடு கீழ்ப் படிந்திருந்த திவ்விய பாலனே,

உலக ஜனங்கள் மிக்க ஆவலோடு எதிர் பார்த்துக் கொண்டிருந்த திவ்விய பாலனே,

பாலர்களுக்கு மாதிரிகையாயிருக்கிற  திவ்விய பாலனே,

சம்மனசுக்களுக்குத் தலைமையாயிருக்கிற திவ்விய பாலனே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

சகல அர்ச்சியசிஷ்டவர்களுக்கும் முந்தின பலனாயிருக்கிற திவ்விய பாலனே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

தயாபரராயிருந்து எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும் சுவாமி.

தயாபரராயிருந்து எங்கள் பிரார்த்தனை யைக் கேட்டருளும் சுவாமி.

ஆதாமென்பவருடைய மக்களின் நிர்ப் பாக்கிய ஸ்திதியினின்று, எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

பசாசின் அடிமைத்தனத்தினின்று, எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

உலக கெடுதியினின்று, எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

மோக அக்கினியினின்று, எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

ஆங்கார கெம்பீரத்தினின்று,  எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

புத்திக் குருட்டாட்டத்தினின்று, எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

துர்மனதிலே நின்று, எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

தேவரீருடைய பரிசுத்த உற்பவத்தைப் பார்த்து, எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

தேவரீருடைய தாழ்மையான பிறப்பைப் பார்த்து, எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

தேவரீர் சிந்தின கண்ணீர்களைப் பார்த்து, எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

தேவரீருடைய வருத்தமான விருத்தசேதனத் தைப் பார்த்து, எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

தேவரீர் மூன்று ராஜாக்களுக்கு உம்மை வெளிப்படுத்தின கிருபையைப் பார்த்து, எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

தேவரீர் தேவாலயத்தில் காணிக்கையான பக்தி வணக்கத்தைப் பார்த்து, எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

தேவரீரின் ஆச்சரியத்துக்குரிய கீழ்ப்படி தலைப் பார்த்து, எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

தேவரீர் அநுபவித்த தரித்திரத்தைப் பார்த்து, எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

தேவரீர் பட்ட கஸ்திகளைப் பார்த்து, எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

தேவரீர் மனுமக்களுக்காக மரணமடைய விரும்பின ஆவலைப் பார்த்து, எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

தேவரீர் இவ்வுலகில் செய்த பரிசுத்த சஞ்சாரத்தையும் சம்பாஷணைகளையும் பார்த்து, எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

தேவரீருடைய பக்திநிறைந்த செபத் தியானங்களைப் பார்த்து, எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

தேவரீர் பெரியோர்கள் மட்டில் காண்பித்த வணக்கத்தைப் பார்த்து, எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

உமக்குக் கைத்தாதையான சூசையப்பரோடு  தேவரீர் செய்த பிரயாச வேலைகளைப் பார்த்து, எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

தேவரீருடைய திவ்விய பாலத்துவத்தைப் பார்த்து, எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.

திவ்விய பாலனாகிய சேசுவே, எங்களை இரட்சித்து ஆசீர்வதித்தருளும்.

பிரார்த்திக்கக் கடவோம்.

எங்கள் ஆண்டவரும் இரட்சகருமாகிய சேசுவே! தேவரீர் சிறு குழந்தையாய்ப் பிறந்த உமது தெய்வீகத்தையும் நீரெடுத்த மனுUகத் தையும் சிறுமையான ஸ்திதியில் தாழ்த்த திருவுள மானீரே.  உமக்கே தோத்திரமுண்டாகக் கடவது.  உமது பாலத்துவத்தில் உமக்கு உண்டாயிருந்த திவ்விய ஞானத்தையும் பலவீனத்தில் வல்லமை யையும் தாழ்ச்சியில் மகிமையையும் நாங்கள் அறிந்து இப்பூலோகத்தில் தாழ்த்தப்பட்டவ ராகிய உம்மை ஆராதித்தபின்பு மோட்சத்திலே நீர் அடைந்திருக்கிற மகிமைப் பிரதாபத்தைத் தரிசிக்கவும் நித்திய பேரின்பத்தை அநுபவிக்கவும் கிருபை செய்தருளும் சுவாமி.  

ஆமென்.