ஓ அமலோற்பவத் தாயே! இதோ பாவி யாகிய நான் (அவரவர் பெயர் சொல்லவும்) ஞானஸ்நானத்தில் கொடுத்த வார்த்தைப்பாட்டை, உமது கரங்களில் புதுப்பித்து உறுதிப்படுத்துகிறேன். பசாசையும் அதன் கிரிகைகளையும், ஆரவாரங்களையும் விட்டுவிடுகிறேன். நித்திய ஞானமாகிய சேசு கிறீஸ்துநாதருக்கு என்னை முழுவதும் கையளித்து, என் ஜீவிய கால முழுவதும் எனக்கு நேரிடும் துன்பங்களையும் அவருடைய பாடுகளோடு ஒன்றித்து, முன்னை விட இன்னும் அவருக்கு அதிகப் பிரமாணிக்கமாய் இருப்பதாக வாக்களிக்கிறேன்.
சகல மோட்சவாசிகளுக்கு முன் உம்மை என் அன்னையாகவும் ஆண்டவளாகவும் தெரிந்து கொள்கிறேன். உமது அடிமையாக, என் ஆத்துமத் தையும், சரீரத்தையும், என் உள்ளிந்திரியங்களையும், ஐம்புலன்களையும் என் ஜீவிய கால முழுவதும் நான் செய்யும் நற்செயல்களையும், பலன்களையும், உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன். என்னையும், எனக்குச் சொந்தமான யாவற்றையும், இப்பொழு தும் எப்பொழுதும் கடவுளின் அதிமிக தோத்திரத் திற்காக, உமது பிரியப்படி, நீரே முழு உரிமையுடன் ஆண்டு நடத்த கையளிக்கிறேன். ஆமென்.
மரியாயின் மாசற்ற இருதயமே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
மரியாயின் மாசற்ற இருதயமே பாவிகளுக்காக வேண்டிக் கொள்ளும்.
மரியாயின் மாசற்ற இருதயமே இந்தியாவுக்காக வேண்டிக் கொள்ளும்.