சுவாமி கிருபையாயிரும்
கிறீஸ்துவே கிருபையாயிரும்
சுவாமி கிருபையாயிரும்
கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும்.
கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும்.
பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
இஸ்பீரீத்து சாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
அர்ச்சியசிஷ்ட தமதிருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
அர்ச்சியசிஷ்ட மரியாயே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
சர்வேசுரனுடைய அர்ச்சியசிஷ்ட மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
கன்னியாஸ்திரீகளுக்குள்ளே உத்தம அர்ச். கன்னிகையே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
அர்ச். மிக்கேலே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
அர்ச். கபிரியேலே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
அர்ச். இரபேலே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
தூதரும் அதிதூதருமாயிருக்கிற சகல சம்மன சுக்களே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.
நவவிலாச சபையாயிருக்கிற சகல சம்மன சுக்களே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.
அர்ச். ஸ்நாபக அருளப்பரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
அர்ச். சூசையப்பரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
பிரதான பிதாக்களும் தீர்க்கதரிசிகளுமாகிய சகல அர்ச்சியசிஷ்டவர்களே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.
அர்ச். இராயப்பரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
அர்ச். சின்னப்பரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
அர்ச். பெலவேந்திரரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
அர்ச். யாகப்பரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
அர்ச். அருளப்பரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
அர்ச். தோமையாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
அர்ச். சின்ன யாகப்பரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
அர்ச். பிலிப்புவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
அர்ச். பர்த்தலோமேயுவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
அர்ச். மத்தேயுவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
அர்ச். சீமோனே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
அர்ச். ததேயுவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
அர்ச். மத்தியாசே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
அர்ச். பர்னபாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
அர்ச். லூக்காஸே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
அர்ச். மாற்குவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
அப்போஸ்தலரும் சுவிசேஷகருமாகிய சகல அர்ச்சியசிஷ்டவர்களே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.
எங்கள் ஆண்டவருடைய சீஷர்களாகிய சகல அர்ச்சியசிஷ்டவர்களே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.
மாசில்லாத சகல அர்ச். குழந்தைகளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.
அர்ச். முடியப்பரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
அர்ச். செய்யப்பரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
அர்ச். வின்சேந்தியுவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
பபியானும் செபஸ்தியானுமென்கிற அர்ச்சியசிஷ்டவர்களே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.
அருளப்பரும் சின்னப்பருமென்கிற அர்ச்சிய சிஷ்டவர்களே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.
கொஸ்மாவும் தமியானுமென்கிற அர்ச்சிஷ்ட வர்களே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.
செர்வாசியும் புரோத்தாசியுமென்கிற அர்ச்சியசிஷ்டவர்களே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.
வேதசாட்சிகளான சகல அர்ச்சியசிஷ்டவர்களே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.
அர்ச். சிலுவேஸ்திரியுவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
அர்ச். கிரகோரியுவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
அர்ச். அமிர்தநாதரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
அர்ச். அகுஸ்தீனுவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
அர்ச். இரோணிமுவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
அர்ச். மர்த்தீனுவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
அர்ச். நிக்கோலாஸே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
மேற்றிராணிமார்களும், ஸ்துதியர்களுமாகிய சகல அர்ச்சியசிஷ்டவர்களே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.
வேத வித்தியாபாரகரான சகல அர்ச்சியசிஷ்டவர்களே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.
அர்ச். அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
அர்ச். ஆசீர்வாதப்பரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
அர்ச். பெர்நார்துவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
அர்ச். சாமிநாதரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
அர்ச். பிரான்சீஸ்குவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
குருக்களும் ஆசிரியருமாகிய சகல அர்ச்சிய சிஷ்டவர்களே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.
சந்நியாசிகளும் தபோதனருமாகிய சகல அர்ச்சியசிஷ்டவர்களே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.
அர்ச். மரிய மதலேனம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
அர்ச். ஆகத்தம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
அர்ச். பிரகாசியம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
அர்ச். ஆக்னஸம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
அர்ச். கத்தரீனாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
அர்ச். அனஸ்தாசியே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
கன்னியாஸ்திரீகளும், விதவை ஸ்திரீகளு மாகிய சகல அர்ச்சியசிஷ்டவர்களே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.
ஆண்டவருடைய திரு அடியார்களான ஸ்திரீ பூமான்களாகிய சகல அர்ச்சியசிஷ்டவர்களே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.
தயாபரராயிருந்து எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும் சுவாமி.
தயாபரராயிருந்து எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமி.
சகல பொல்லாப்புக்களிலே நின்று, எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.
சகல பாவங்களிலே நின்று, எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.
உமது கோபத்திலே நின்று, எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.
அசுப்பில் வருகிற துர்மரணத்திலே நின்று, எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.
பசாசினுடைய சகல தந்திரங்களிலே நின்று, எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.
கோபம், பகை முதலான சகல துர்க்குணங் களிலே நின்று, எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.
மோக அக்கினியிலே நின்று, எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.
இடி, பெருங்காற்றிலே நின்று, எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.
பூமி அதிர்ச்சியாகிய அகோர ஆக்கினையிலே நின்று, எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.
கொள்ளை நோய், பஞ்சம், சண்டையிலே நின்று, எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.
நித்திய மரணத்திலே நின்று, எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.
தேவரீருடைய திரு மனுஷாவதாரத்தின் பரம இரகசியத்தைப் பார்த்து, எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.
தேவரீருடைய ஆகமனத்தைப் பார்த்து, எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.
தேவரீருடைய பிறப்பைப் பார்த்து, எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.
தேவரீருடைய திவ்விய பாலத்துவத்தைப் பார்த்து, எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.
தேவரீருடைய ஞானஸ்நானத்தையும் பரிசுத்த உபவாசத்தையும் பார்த்து, எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.
தேவரீருடைய சிலுவையையும் பாடுகளை யும் பார்த்து, எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.
தேவரீருடைய மரணத்தையும் அடக்கத் தையும் பார்த்து, எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.
தேவரீருடைய திவ்ய உத்தானத்தைப் பார்த்து, எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.
தேவரீருடைய திவ்விய ஆச்சரியமான ஆரோ கணத்தைப் பார்த்து, எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.
தேற்றரவு பண்ணுகிறவராகிய இஸ்பிரீத்து சாந்துவின் ஆகமனத்தைப் பார்த்து, எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.
நடுத்தீர்க்கிற நாளிலே, எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.
பாவிகளாயிருக்கிற நாங்கள் தேவரீரை மன்றாடுகிறோம். எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.
எங்கள் பாவங்களைப் போக்கியருள வேணு மென்று தேவரீரை மன்றாடுகிறோம். எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.
எங்களுக்குத் தயைபண்ணி இரட்சித்தருள வேணுமென்று தேவரீரை மன்றாடுகிறோம். எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.
நாங்கள் மெய்யான தவம்புரிய உதவி செய்ய வேணுமென்று தேவரீரை மன்றாடுகிறோம். எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.
தேவரீர் உமது அர்ச்சியசிஷ்ட சபையை ஆளவும் பாதுகாத்தருளவும் வேணுமென்று தேவரீரை மன்றாடுகிறோம். எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.
அர்ச்சியசிஷ்ட பாப்பு முதலான அதிசிரேஷ்ட ஆசாரியரையும் ஆகம சபைகளிலுட்பட்ட சகல குருக்களையும் சந்நியாசிகளையும் சத்திய வேத முறைமைகளில் தற்காத்தருள வேணுமென்று தேவரீரை மன்றாடுகிறோம். எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.
உமது அர்ச்சியசிஷ்ட சபையின் சத்துருக் களைக் கீழ்ப்படுத்த வேணுமென்று தேவரீரை மன்றாடுகிறோம். எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.
சத்திய வேத இராஜாக்களுக்கும் பிரபுக் களுக்கும் சமாதானத்தையும் சரியான ஒருமை யையும் தந்தருள வேணுமென்று தேவரீரை மன்றாடுகிறோம். எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.
சமஸ்தமான கிறீஸ்தவர்களுக்கும் சமாதானத் தையும் ஒற்றுமைப் பந்தனத்தையும் கட்டளை யிட்டருள வேணுமென்று தேவரீரை மன்றாடு கிறோம். எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.
தவறிப்போன சகலரையும் திருச்சபையின் ஒற்றுமைக்குத் திரும்பவும் அழைத்தருள வேணு மென்றும், சமஸ்த அஞ்ஞானிகளும் சுவிசேப் பிரகாசத்தைக் காணக் கிருபை புரிய வேணு மென்றும் தேவரீரை மன்றாடுகிறோம். எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.
தேவரீருடைய திருப்பணியில் அடியோரைத் திடப்படுத்திக் காப்பாற்ற வேணுமென்று தேவரீரை மன்றாடுகிறோம். எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.
எங்கள் மனது பரலோக ஆசையைப் பற்றி உயர வேணுமென்று தேவரீரை மன்றாடுகிறோம். எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.
எங்களுடைய உபகாரிகளுக்கு நித்திய நன்மையைப் பலனாகக் கட்டளையிட்டருள வேணுமென்று தேவரீரை மன்றாடுகிறோம். எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.
எங்கள் ஆத்துமங்களையும், எங்களுடைய சகோதரர், பந்துக்கள், உபகாரிகளுடைய ஆத்து மங்களையும் நித்திய நரக ஆக்கினையிலே நின்று இரட்சித்தருள வேணுமென்று தேவரீரை மன்றாடுகிறோம், எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.
பூமியிலே நல்ல பயிர் விளைவின் பலன் தந்து காப்பாற்ற வேணுமென்று தேவரீரை மன்றாடுகிறோம். எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.
மரணத்தை அடைந்த சமஸ்த விசுவாசிகளுக் கும் நித்திய இளைப்பாற்றியைக் கட்டளையிட்டருள வேணுமென்று தேவரீரை மன்றாடுகிறோம். எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.
எங்கள் வேண்டுதலை நன்றாகக் கேட்டருள வேணுமென்று தேவரீரை மன்றாடுகிறோம். எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.
சர்வேசுரனுடைய சுதனே, உம்மை மன்றாடுகிறோம். எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி.
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமி.
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.
சேசுவே, எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும்.
சேசுவே, எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும்.
சுவாமி கிருபையாயிரும்.
கிறீஸ்துவே கிருபையாயிரும்.
சுவாமி கிருபையாயிரும்.
பரலோக மந்திரம்.
இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றைக்கும் ஆண்டவருடைய திருநாமம் வாழ்த்தப்படக்கடவது.
பிரார்த்திக்கக்கடவோம்
சர்வ வல்லபரான நித்திய சர்வேசுரா! சீவியர்கள் மேலும் மரித்தவர்கள் மேலும் செங்கோன்மை செலுத்தி, விசுவாசத்தாலும் நற்கிரியைகளாலும் உமது பட்சமாவார்கள் என்று தேவரீர் முன்தெரிந்த சகலருக்கும் தயை யுள்ளவராயிருக்கிறீர். நாங்கள் யாராருக்காகச் செபித்து மன்றாடுகிறோமோ, அவர்கள் எல்லோரும் சரீர சம்பந்தத்தோடு இவ்வுலகில் இருக்கின்றவர்களாயினும் சரீரத்தை விட்டு மறுவுலகில் சென்றவர்களாயினும், சகல அர்ச்சிய சிஷ்டவர்களுடைய வேண்டுதலாலும் உமது நன்மைப் பெருக்கத்தின் கிருபாகடாட்சத்தாலும், பாவப் பொறுத்தலை அடையத்தக்கதாகத் தேவரீரைப் பிரார்த்திக்கிறோம். தேவரீரோடும், இஸ்பிரீத்துசாந்துவோடும் ஏக சர்வேசுரனா யிருந்து சதாகாலம் சீவியருமாய் இராச்சிய பரிபால கருமாயிருக்கிற உம்முடைய திருச்சுதனாகிய சேசுக்கிறீஸ்துநாதருடைய திருமுகத்தைப் பார்த்து இந்த மன்றாட்டைத் தந்தருளும் சுவாமி. ஆமென்.
சர்வ வல்லவரும் தயாபரருமாகிய சர்வேசுரன் எங்கள் மன்றாட்டுக்குக் காது கொடுத்தருளக் கடவாராக. ஆமென்.
மரித்த விசுவாசிகளின் ஆத்துமங்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் சமாதானத்தில் இளைப்பாறக் கடவது.
ஆமென்.