அதிதூதரான அர்ச். மிக்கேலே, எங்கள் போராட்டத்தில் எங்களைத் தற்காத்தருளும். பசாசின் துர்க்கருத்தையும், அதன் சற்பனைகளையும் அகற்றி எங்களுக்குத் துணையாயிரும். தாழ்மையான எங்கள் மன்றாட்டைக் கேட்டு சர்வேசுரன் பசாசுக்குக் கற்பிப்பாராக. நீரும் மோட்ச சேனைக்குத் தலைமையானவரே, ஆத்துமங்களை அழிக்கிறதற்கு உலகத்தில் சுற்றித் திரியும் பேயையும், மற்ற துஷ்ட அரூபிகளையும் தேவ வல்லமையின் பலத்தால் நரகத்தில் தள்ளுவீராக.
ஆமென்.