1858-ம் ஆண்டு லூர்து பதியில் மாதா அர்ச். பெர்னதத்தம்மாளுக்கு 18 முறை காட்சி யளித்தார்கள். ஜெபமாலையைக் கையில் ஏந்திய வர்களாய் “நாமே அமலோற்பவம்” என்று கூறி னார்கள். இறுதிக்கால விசுவாச மறுதலிப்பு களிலும், திருச்சபையின் அக வேத கலாபனை களிலும், உலகத்தின் ஆபத்துக்களிலும் நம் கேடயமும், இரட்சிப்பின் துறையுமாக இருப்பது நம் அமலோற்பவத் தாயே ஆவார்கள்.