சுவாமி கிருபையாயிரும்
கிறீஸ்துவே கிருபையாயிரும்
சுவாமி கிருபையாயிரும்
கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும்.
கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும்.
பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
இஸ்பீரீத்து சாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
அர்ச்சியசிஷ்ட தமதிருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
அர்ச். மரியாயே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
பரிசுத்த வெற்றி நாயகியே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
சர்வேசுரனுடைய ஊழியக்காரியாகிய அர்ச்சியசிஷ்ட தெரசம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
சேசுநாதர் சுவாமியின் ஞானப் பத்தினியாகிய அர்ச். தெரசம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
சர்வேசுரனுடைய கொடையாகிய அர்ச். தெரசம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
பாலிய பருவத்தில்தானே விசேஷித்து விளங்கிய அர்ச். தெரசம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
கீழ்ப்படிதலின் மாதிரிகையாகிய அர்ச். தெரசம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
தேவ சித்தத்துக்கு முற்றாக உம்மைக் கையளித்துச் சீவித்த அர்ச். தெரசம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
சமாதானத்தைச் சிநேகித்த அர்ச். தெரசம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
பொறுமையைச் சிநேகித்த அர்ச். தெரசம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
சாந்தகுணத்தைச் சிநேகித்த அர்ச். தெரசம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
தற்பரித்தியாகக் கிருத்தியங்களில் வீரத்துவங் காண்பித்த அர்ச். தெரசம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
மன்னிப்பளிப்பதில் உதாரகுணம் காண்பித்த அர்ச். தெரசம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
வறியவர்களின் உபகாரியாகிய அர்ச். தெரசம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
சேசுநாதர்சுவாமியில் விசேஷித்த அன்பு வைத்த அர்ச். தெரசம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
சேசுவின் திருமுகப் பக்தியை விசேஷ விதமாய் நேசித்த அர்ச். தெரசம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
தேவ நேச அக்கினியால் தகனிக்கப்பட்ட அர்ச். தெரசம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
எவராலும் கைவிடப்பட்டவர்களின் மத்தி யஸ்தியாகிய அர்ச். தெரசம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
ஜெபம் செய்வதில் கடைப்பிடிப்புள்ள அர்ச். தெரசம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
சர்வேசுரனிடத்தில் மிகவும் வல்லபம் படைத்த மத்தியஸ்தியாகிய அர்ச். தெரசம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
பரலோகத்திலிருந்து ரோஜா மலர் மாரி பொழிகின்ற அர்ச். தெரசம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
உலகத்தாரின் உபகாரியாகிய அர்ச். தெரசம் மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
கேட்கும் மன்றாட்டுகளையயல்லாம் பெற்றுத் தரும் அர்ச். தெரசம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
பரிசுத்த கற்பை சிநேகித்த அர்ச். தெரசம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
மனச் சம்மதமான தரித்திரத்தைச் சிநேகித்த அர்ச். தெரசம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
கீழ்ப்படிதலைச் சிநேகித்த அர்ச். தெரசம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
தேவ தோத்திர வாஞ்சை என்னும் அக்கினி மூண்டெரிந்து கொண்டிருந்த அர்ச். தெரசம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
தேவ சிநேக அக்கினி சொரிந்து சுவாலித்துக் கொண்டிருந்த அர்ச். தெரசம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
தேவ ஆசீர்வாதத்தின் புத்திரியாகிய அர்ச். தெரசம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
சர்வேசுரனை நம்பி நடப்பதில் மிகவும் விசேஷித்து விளங்கிய அர்ச். தெரசம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
அபூர்வ புத்தி சாதுரியம் விளங்கிய அர்ச். தெரசம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
உம்மை மன்றாடுகிறவர்களுக்கு ஏதோ ஒரு பதில் கொடுக்க ஒருபோதும் தவறாத அர்ச். தெரசம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
இரட்சணியத்தின் நிச்சயமான வழியைப் படிப்பிக்கிற அர்ச். தெரசம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
தேவ அன்பின் பலியாகிய அர்ச். தெரசம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி.
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமி.
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.
அர்ச்சியசிஷ்ட சேசுவின் சிறிய புஷ்பமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
பிரார்த்திக்கக்கடவோம்
சர்வேசுரா சுவாமி! உமது ஊழியக்காரியாகிய அர்ச். குழந்தை சேசுவின் தெரசம்மாளுடைய ஆத்துமத்திலே தேவ நேச அக்கினி மூண்டெரிந்து கொண்டிருக்கும்படி செய்தருளினீரே! நாங்களும் உம்மை நேசிக்கவும், மற்றவர்கள் உம்மை நேசிக் கும்படி செய்யவும் அநுக்கிரகம் பண்ணியருளும் சுவாமி.
ஆமென்.