அர்ச். மரிய மதலேனம்மாளை நோக்கி ஜெபம்

(திருநாள் : ஜு லை 22)

அர்ச். மரியமதலே னம்மாளே!  சேசுக்கிறீஸ்து நாதருக்குப் பிரியப்பட்டவளே, உத்தம மனஸ்தாபத்தினுடையவும் தியானத்தினுடையவும் ஆசையுள்ள சிநேகத்தினுடையவும் பாத்திரமே, உமது கண்ணீரால் சேசுநாதரின் பாதத்தைக் கழுவி அதிகமாய் சிநேகித்ததினால் அவர் உம்மை மிகவும் நேசித்து மகிமையாலும் சங்கையாலும் உமக்கு முடி தரித்ததினால் நான் உம்மை வாழ்த்துகிறேன். ஓ! சேசுக்கிறீஸ்துநாதருடைய நேசகியே! உமது மன்றாட்டினால் இறந்துபோன உம் சகோதரனான லாசர் என்பவர் உயிரோடு எழுப்பப்பட வரமடைந்தீரே. நான் எப்போதும் பரிசுத்தமான ஜீவியத்தின் அலங்காரத்தில் உயரும்படி எனக்காக மன்றாடும்.  என் ஆத்தும விரதமாகிய பச்சாத்தாபத்தின் கண்ணீரை உம்மைப் போல அவருடைய பாதத்தில் சிந்தவும் உம்மைப் போல பாவப் பொறுத்தலின் வாக்கியத்தைப் பெறவும் செய்தருள வேண்டுமென்று நீர் சேசுக் கிறீஸ்துநாதரிடத்தில் ஏராளமாய் பெற்றுக் கொண்ட வரப்பிரசாதத்தைக் கொண்டு உம்மை மன்றாடுகிறேன்.  உமது வனவாசத்தாலும் நீர் அவரோடு செய்த ஆச்சரியமான சம்பா­னை யாலும் நான் தனி வாச ஆசையையும், பரிசுத்த தியானத்தின் இஸ்பிரீத்தையும் அடையச் செய் தருளும்.  மதுரமுள்ள மரியமதலேனம்மாளே!  உத்தம மனஸ்தாபப்படுகிறவர்களுடைய நம்பிக் கையே, உம்மைத் தெரிந்து கொண்டவர்களு டைய ஆனந்தமே, மோட்சத்தின் அலங்காரமே, சேசுக்கிறீஸ்துநாதருடைய நேசகியே, உமது புண்ணியங்களைக் கண்டுபாவிக்க எனக்கு வேண்டிய தைரியத்தை உமது வேண்டுதலினால் எனக்குப் பெற்றருளும். 

ஆமென்.