(திருநாள் : டிசம்பர் 4)
எங்கள் ஆண்டவராகிய கர்த்தாவே! உமது பரிசுத்த கன்னியாஸ்திரீயும், வேதசாட்சியுமாகிய அர்ச்சியசிஷ்ட பார்பரம்மாளைத் துதிக்கிற நாங்கள், அவளுடைய மன்றாட்டின் உதவியை அடைந்து, இவ்வுலகத்தின் சகல சோதனை களையும் விட்டு நீங்கக் கிருபை செய்தருளும். இந்த மன்றாட்டுகளையெல்லாம் உம் திருக்குமாரன் திருமுகத்தைப் பார்த்துத் தந்தருளும்.
ஆமென்.
அடியோர்கள் சடுதியான மரணத்தில் நின்று காப்பாற்றி, இரட்சிக்கப்படத் தக்கதாக, அர்ச். பார்பரம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
பிரார்த்திக்கக்கடவோம்
ஜீவியர்களுக்கும், மரிக்கிறவர்களுக்கும் ஆறுதலாக அர்ச். பார்பரம்மாளைத் தெரிந்து நியமித்தருளிய எங்கள் ஆண்டவரும், சர்வேசுரனு மாகிய சேசுவே! அடியோர்கள் பாவ மரணத்தில் அகப்படாமல் பச்சாத்தாபம், அவஸ்தை நன்மை, அவஸ்தைப்பூசுதல் என்கிற தேவத்திரவிய அனுமா னங்களின் பலனைப் பெற்று எங்கள் மரண நேரத் தில் புண்ணியத்தில் ஸ்திரப்பட்டுப் பயமின்றி நித்திய பேரின்ப மகிமையில் சேரச் செய்யும். நாங்கள் உமது சிநேகத்திலே ஜீவிக்கவும், தேவரீ ருடைய திருப்பாடுகளின் பேறுபலன்களிலே எங்கள் நம்பிக்கை எல்லாம் வைக்கவும், அந்த அர்ச்சியசிஷ்டவளுடைய மன்றாட்டைக் கேட்டு எங்களுக்கு அனுக்கிரகம் செய்தருளும். நித்திய பிதாவே, எங்கள் ஆண்டவராகிய சேசு கிறீஸ்துவின் திருமுகத்தைப் பார்த்து இந்தக் கிருபையை எங்களுக்குச் செய்தருளும்.
ஆமென்.