சுவாமி கிருபையாயிரும்
கிறீஸ்துவே கிருபையாயிரும்
சுவாமி கிருபையாயிரும்
கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும்.
கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும்.
பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
இஸ்பீரீத்து சாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
அர்ச்சியசிஷ்ட தமதிருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
உற்சாக நம்பிக்கை ஊட்டும் உயர் திருநாமம் உடைத்தான சதா சகாய மாதாவே, எனக்கு சகாயமாக வாரும் சகாய மாதாவே.
ஜென்மப் பாவமில்லாமல் உற்பவித்த பரிசுத்த மரியாயே, எனக்கு சகாயமாக வாரும் சகாய மாதாவே.
நான் சோதனையில் அகப்பட்டுத் தத்தளிக் கும் ஆபத்தான வேளையில் அதனை ஜெயங் கொள்ளும்படி, எனக்கு சகாயமாக வாரும் சகாய மாதாவே.
எங்களுடைய முழுமனதுடன் சேசுவை நேசிப்பதற்கு, எனக்கு சகாயமாக வாரும் சகாய மாதாவே.
நான் யாதொரு பாவத்தில் விழும் நிர்ப்பாக் கியத்துக்கு உள்ளாவேனாகில் அதிலிருந்து உடனே எழுந்திருக்கும்படி, எனக்கு சகாயமாக வாரும் சகாய மாதாவே.
பசாசின் ஊழியத்தில் ஈடுபடும்படியான தகாத வளையில் நான் சிக்கிக் கொள்ளுவேனாகில் அத்தளையைத் தகர்த்தெறியும்படி, எனக்கு சகாயமாக வாரும் சகாய மாதாவே.
பக்தி உருக்கமில்லாமல் வெதுவெதுப்பான சீவியம் சீவிப்பேனாகில் நான் விரைவில் ஞான உஷ்ணம் கொள்ளும்படி, எனக்கு சகாயமாக வாரும் சகாய மாதாவே.
நான் அடிக்கடி தேவதிரவிய அனுமானங் களைப் பெறுவதிலும், கிறீஸ்தவ பக்திக்குரிய கடமைகளை பக்தியாய் செய்யும்படி, எனக்கு சகாயமாக வாரும் சகாய மாதாவே.
வியாதியின் வருத்தத்தால் தளர்ந்த என் இருதயம் பலவீனமாய் இருக்கும்போது, எனக்கு சகாயமாக வாரும் சகாய மாதாவே.
என் சீவியத்தில் வரும் துன்ப சோதனை வேளைகளில், எனக்கு சகாயமாக வாரும் சகாய மாதாவே.
என்னுடைய சுபாவ துர்ச்செய்கைகளோடு நான் போராடும் வேளைகளிலும், புண்ணிய வாழ்க்கையில் கடைசி வரைக்கும் நிலை நிற்கும் படி நான் செய்யும் முயற்சிகளிலும், எனக்கு சகாயமாக வாரும் சகாய மாதாவே.
என்னைப் பாவத்தில் வீழ்த்த பசாசுக்கள் செய் கிற துஷ்டத்தனத்தினாலும் தந்திரத்தினாலும் என் பலம் குறைந்து போகும்போது, எனக்கு சகாயமாக வாரும் சகாய மாதாவே.
என் மரண வேளையில் என் ஆத்துமம் என் சரீரத்தைவிட்டுப் பிரிய போராடும்போது, எனக்கு சகாயமாக வாரும் சகாய மாதாவே.
உம்மை நான் எப்பொழுதும் நேசித்து, பூஜித்து, சேவித்துப் பிரார்த்திக்கும்படி ஓ! என் தேவ தாயாரே, என் கடைசிநாள் பரியந்தம், என் கடைசி மூச்சு பரியந்தம், எனக்கு சகாயமாக வாரும் சகாய மாதாவே.
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி.
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமி.
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.
பிரார்த்திக்கக்கடவோம்
சர்வ வல்லவரும், தயாள சமுத்திரமுமாகிய சர்வேசுரா சுவாமி! மனுக்குலத்திற்கு துணை புரிய ஆசீர்வதிக்கப்பட்ட கன்னிமரியாயை உமது ஏக குமாரனுக்குத் தாயாராக்கத் திருவுளமானீரே! பரிசுத்த கன்னிமரியாயின் வேண்டுதலால் அடியோர்களின் பாவநோய் தீர்ந்து, பரிசுத்தமான இருதயத்தோடு உம்மை சிநேகித்து சேவிக்கும் வரத்தை எங்கள் ஆண்டவராகிய சேசுகிறீஸ்துவின் வழியாக எங்களுக்குக் கட்டளையிட்டருளும்படி தேவரீரை மன்றாடுகிறோம்.
ஆமென்.