அர்ச்சியசிஷ்ட தேவமாதாவின் மந்திரமாலை

மந்திரமாலை ஜெபிக்குமுன் ஜெபம்

எல்லோரும்:  ஆண்டவரே, உமது திருநாமத்தை வாழ்த்த என் … நாவைத் திறந்தருளும்.  சகலமான பொல்லாத வீண்புறத்தி விசாரங்களினின்று என்னிருதயத்தைப் … பரிசுத்தப்படுத்தும்.  நான் இந்த மந்திரமாலையைச் சரியான கவனத் தோடும், பக்தியோடும் ஜெபிக்கும்படிக்கும், தேவரீருடைய திருச்சமூகத்தில் நான் கேட்கும் மன்றாட்டை அடையும்படிக்கும், ஆண்டவரான சேசுக்கிறீஸ்துநாதரைப் பற்றி என் … புத்திக்குப் பிரகாசத்தையும் என் நேசத்துக்கு அக்கினியையும் கொடுத்தருளும் சுவாமி.  ஆமென்.

ஆண்டவரே! நீர் பூமியிலிருக்கும்போது எந்தக் கருத்தோடு சர்வேசுரனுக்குப் புகழ் புரிந் தீரோ, அந்தக் கருத்தோடு இச்செபத்தை நான் உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன்.

காலைத் தோத்திர ஜெபம்

முதல்: மாசற்ற கன்னிகையின் புகழ்ச்சியை யும் அவர்களுடைய மேலான நாமத்தையும்,

எல்: என் நாவே … களிகூர்ந்து வாழ்த்து வாயாக! (வாயில், நெஞ்சில் சிலுவை வரையவும்.)

மு: பரிசுத்த ஆண்டவளே! உமது கிருபை யுடைத்தான உதவியைத் தந்தருளும்.

எல்: மாசற்ற கன்னிகையே! சகல சத்துருக்க ளிடத்தில் நின்று என்னைக் காத்தருளும்.

மு: பிதாவுக்கும் சுதனுக்கும் இஸ்பிரீத்து சாந்துவுககும் மகிமையுண்டாவதாக.

எல்: ஆதியிலே இருந்தது போல இப்பொழு தும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக, ஆமென். அல்லேலூயா. (தபசு காலத்தில் அல்லேலூயா என்று சொல் வதற்குப் பதிலாக, “நித்திய மகிமைக்கு இராஜா வாகிய ஆண்டவரே, உமக்கே தோத்திரமுண்டாகக்கடவது” என்று சொல்லவும்.)

சங்கீத ஜெபம்

மு: பூலோகத்துக்கு ஆண்டவளே வாழ்க!  பரலோகத்துக்கு பிரகாசமுள்ள இராக்கினியே வாழ்க!  கன்னியர்களுக்கு மேலான கன்னிகையே வாழ்க!  குளிர்ந்த தாரகையே வாழ்க!

எல்: தெய்வ அனுக்கிரகத்தினாலும், திவ்விய ஒளியினாலும் நிரப்பப்பட்டு பூலோகத்துக்கு அதி காலையில் பிரகாசிக்கின்றீர்.  ஆண்டவளே!  துரிதமாய் வந்து கைகொடுத்துப் பாவத்தினின் றும் சத்துருக்களிடத்தினின்றும் எங்களைக் காத்தருளும்.

மு: பூலோகத்துக்கு மேலான ஆண்டவர் தம்முடைய ஏக புத்திரனாகிய வார்த்தையினால் பூமியையும் சமுத்திரத்தையும் வானத்தின் ஒளியுள்ள அணியணியான நட்சத்திரங்களையும் உண்டுபண்ணி,

எல்: அந்த ஏக பரிசுத்த வார்த்தையாகிய சுதனுக்கே, உம்மைச் சதா காலத்துக்கும் தாயாராக நியமித்து, குற்றம் கட்டி க்கொண்ட ஆதாமின் சந்ததியின் பாவத்தில் நின்று சர்வேசுரன் உம்மை நீக்கி, தமக்குப் பிரியமுள்ளவளாகத் தெரிந்து கொண்டார். ஆமென்.

மு: மனுக்குலம் மாசு கொள்ளுமுன் இந்தப் பரம நாயகியைச் சர்வேசுரன் தெரிந்து கொண்டார்.

எல்: அவர்களைத் தமது ஆலயத்தில் வாசஞ் செய்யச் செய்தார்.

மு: ஆண்டவளே என் மன்றாட்டைக் கேட்டருளும்.

எல்: என்னுடைய அபய சத்தம் உமது சந்நிதி மட்டும் வரக்கடவது.

பிரார்த்திக்கக்கடவோம்

எல்: அர்ச்சியசிஷ்ட மரியாயே, யாரையும் கைவிடாதவர்களும், புறக்கணியாதவர்களுமாகிய மோட்ச இராக்கினியே! எங்கள் ஆண்டவராகிய சேசுக் கிறீஸ்துவின் தாயே!  பூவுலகத்துக்கு ஆண்ட வளே!  உம்முடைய தயை விழியால் என்னை நோக்கி, என்னுடைய பாவங்களுக்கெல்லாம் பொறுத்தலைத் தந்தருளும்படி, உம்முடைய மாசற்ற உற்பவத்தை மிகுந்த பக்தியுடன் கொண்டாடுகிறபடியால், கன்னிகையாகிய நீர் பெற்றவருமாய், ஏக திரித்துவத்தோடு பரிபாலனஞ் செய்கிறவருமாய், ஜீவியருமாய், இராச்சிய பரிபாலகருமாயிருக்கிற, சேசுக்கிறீஸ்துநாத ருடைய தயையால், நித்திய பாக்கியமாகிய சம்பாவனையை இனி அடைவேனாக. ஆமென்.

மு: ஆண்டவளே, என் மன்றாட்டைக் கேட் டருளும்.

எல்: என்னுடைய அபய சத்தம் உமது சந்நிதி மட்டும் வரக்கடவது.

மு: ஆண்டவரை வாழ்த்தக்கடவோம்.

எல்: சர்வேசுரனுக்குப் புகழுண்டாகக் கடவது.

மு: மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமங்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் சமாதானத்தில் இளைப்பாறக் கடவது.

எல்: ஆமென்.

முதற் கணித ஜெபம்

மு: பரிசுத்த ஆண்டவளே! உமது கிருபை யுடைத்தான உதவியைத் தந்தருளும்.

எல்: மாசற்ற கன்னிகையே! சகல சத்துருக்க ளிடத்தில் நின்று என்னைக் காத்தருளும்.

மு: பிதாவுக்கும் சுதனுக்கும்... மற்றதும்...

எல்: ஆதியிலே... மற்றதும்... அல்லேலூயா.மீ

சங்கீத ஜெபம்

மு: ஞானமுள்ள கன்னிகையே வாழ்க! உச்சிதமாய் ஆசீர்வதிக்கப்பட்ட தாயே!  சர்வேசுரன் தங்குவதற்குப் பரிசுத்தமாய்க் கட்டப் பட்ட மாளிகையே! மேலான உன்னதமாய்ச் சித்தரிக்கப்பட்ட ஏழு செளந்தரிய ஸ்தம்பங் களால் அலங்கரிக்கப்பட்டவர்களே!

எல்: பூமியின்பேரில் விதிக்கப்பட்ட சாபத் தில் நின்று நீக்கப்பட்டு, உம்முடைய மாட்சிமை தங்கிய பிறப்புக்கு முன்னமேதானே பரிசுத்தமும் துப்புரவுள்ளவர்களுமாயிருக்கிறீர்.

மு: ஜீவியர்களின் தாயே, பரிசுத்தர்  நுழையும் வாசலே!  யாக்கோபின் நவநட் சத்திரமே! சம்மனசுக்களின் மகிமையான அரசியே!

எல்: காணப்பட்ட அணிவகுப்புள்ள வல் லபம் பொருந்திய சேனைகளைப் போல் அஞ்சத் தக்கவளே!  கிறீஸ்தவர்களின் இருதயத்தில் நின்று சகல பயத்தையும் அகற்றி, எங்களுடைய அடைக்கலமாகவும், எங்களுடைய இளைப் பாற்றியின் துறையாகவும் இரும். ஆமென்.

மு: அவர் அவளைப் பரிசுத்தமுள்ளவளாய் உண்டுபண்ணினார். 

எல்: அவர் அவளைத் தம்முடைய சகல சிருஷ்டிப்புக்கும் மேலாக உயர்த்தினார்.

மு: ஆண்டவளே என்... மற்றதும்

மூன்றாம் கணித ஜெபம்

மு: பரிசுத்த ஆண்டவளே! உமது கிருபை யுடைத்தான உதவியைத் தந்தருளும்.

எல்: மாசற்ற கன்னிகையே! சகல சத்துருக்க ளிடத்தில் நின்று என்னைக் காத்தருளும்.

மு: பிதாவுக்கும் சுதனுக்கும்... மற்றதும்...

எல்: ஆதியிலே... மற்றதும்... அல்லேலூயா.

சங்கீத ஜெபம்

மு: வாக்குத்தத்தத்தின் பெட்டகமே!  சால மோனின் உன்னத சிம்மாசனமே!  நடுக்கமுள்ள மானிடருக்குக் காண்பிக்கப்பட்ட நம்பிக்கையின் வானவில்லே!  ஒளியுற்ற காட்சியின் அடர்ந்த சோலையே!  ஆரோனுடைய செளந்தரியத் தண்டுகோலே!

எல்: கீர்த்திபெற்ற செதையோனின் துல்லிய கம்பளமே!  கடவுளின் திறக்கப்படாத வாசலே!  சம்சோன் என்பவரின் மதுரமான தேன்கூடே!  நாங்கள் சர்வேசுரனுக்கு மதுரமான சுகந்த மணமா யிருக்கும்படியாய் வேண்டிக் கொள்ளும்.

மு: மாசற்ற கன்னிகையே! நிர்ப்பாக்கிய நிலைமையாகிய பாவக்கறைப்பட்ட, ஏவாளின் சந்ததியின் குற்றத்தில் நின்று நீக்கப்பட்ட தாயே! நித்திய பிதாவின் ஏக சுதனான உமது குமாரன் எவ்வளவு சற்பாத்திரமுள்ளவராயிருக்கிறார்!

எல்: உம்மைச் சகல பாவக்கறையில் நின்று நீக்கும்பொருட்டு, விசேஷ அநுக்கிரகத்தை உமக்காக சேமித்து வைத்தார். ஆமென்.

மு: உன்னத ஸ்தலத்தில் நான் வீற்றிருக்கிறேன்.

எல்: என்னுடைய சிம்மாசனம் மேக மண்ட லத்தின் தூணுக்குள் இருக்கின்றது.

மு: ஆண்டவளே என்... மற்றதும் 

ஆறாம் கணித ஜெபம்

மு: பரிசுத்த ஆண்டவளே! உமது கிருபை யுடைத்தான உதவியைத் தந்தருளும்.

எல்: மாசற்ற கன்னிகையே! சகல சத்துருக்க ளிடத்தில் நின்று என்னைக் காத்தருளும்.

மு: பிதாவுக்கும் சுதனுக்கும்... மற்றதும்...

எல்: ஆதியிலே... மற்றதும்... அல்லேலூயா.

சங்கீத ஜெபம்

மு: எங்களுடைய இரக்கமுள்ள ஆண்டவ ரின் கன்னித்தாயே! ஆராதனைக்குரிய திரித் துவத்தின் ஆலயமே, வாழ்க!  சம்மனசுக்களின் சந்தோ­மே!  துப்புரவின் அழகிய குடிலே!

எல்: துன்பப்படுகிறவர்களின் இருப்பிடத் திற்கு ஆறுதலைக் கொண்டு வருகிறீர்.  மாசற்ற இன்பந்தருகிற தோட்டமே! பொறுமையின் வெற்றிக் குருத்தே! கற்பின் விருட்சமே!      பச்சாத்தாபமுள்ள பாவிகளின் தைலமே!
மு: வாக்குத்தத்தத்தின் நிலையமே!  குருத் துவத்துக்குரிய பாக்கியமே! ஜென்மப் பாவக் கறையில் நின்று நீக்கப்பட்ட பரிசுத்தமுள்ளவளே!  கடவுளின் நகரே!  மகா உன்னதமானவளே!  கீழ்த்திசையின் வாசலே!  சகல கிருபை யுடைத்தானவர்களே!  உம்மையே கொண்டாடுகிறோம்.

எல்: மகா ஆச்சரியமாய் ஆசீர்வதிக்கப்பட்ட மாசற்ற கன்னிகையே!  உம்முடைய பராமரிப் பான கண்காணிப்பில் நாங்கள் தஞ்சம் அடைகிறோம். ஆமென்.

மு: முட்செடிக்குள் லீலியயன்னும் புஷ்ப மிருக்கிறதுபோல்,

எல்: ஆதாமின் குமாரத்திகளுக்குள்ளே என் அன்புக்குரியவள் இருக்கிறாள்.

மு: ஆண்டவளே என்... மற்றதும் 

ஒன்பதாம் கணித ஜெபம்

மு: பரிசுத்த ஆண்டவளே! உமது கிருபை யுடைத்தான உதவியைத் தந்தருளும்.

எல்: மாசற்ற கன்னிகையே! சகல சத்துருக்க ளிடத்தில் நின்று என்னைக் காத்தருளும்.

மு: பிதாவுக்கும் சுதனுக்கும்... மற்றதும்...

எல்: ஆதியிலே... மற்றதும்... அல்லேலூயா.

சங்கீத ஜெபம்

மு: எங்களுடைய அடைக்கல நகரே   வாழ்க!  தாவீதின் உப்பரிகையே! அவருடைய வல்லமையின் படைக்கலங்களாலும், வெற்றிக் கொடிகளாலும் அலங்கரிக்கப்பட்டவளே வாழ்க!

எல்: அநுக்கிரகமும் கருணையும் நிறைந்த தாயே!  பயமும் கிலேசமும் படுகிற பாவிகளாகிய நாங்கள், உம்முடைய கெற்ப உற்பவத்தின் நேசத் தூய்மையான சுவாலையால் கொளுத்தப்பட்டு, உம்மை நோக்கி ஓடி வந்தோம்.  பறவை நாக மாகிய பசாசு உம்மால் நாணப்பட்டது.

மு: போர்க் கூடாரத்தில் அஞ்சாத யூதித்து என்பவளைப் போல, வீரமுள்ள கிரிகைகளினால் எங்கும் பேர் பெற்ற ஸ்திரீயே! அழகுள்ள ஒரு கன்னிகையால் வயது மிகுந்த தாவீதென்பவர் போ´க்கப்பட்டதைப் போல, நித்திய சுதனாகிய சர்வேசுரன் உம்முடைய கண்காணிப்பினால் பராமரிக்கப்பட்டார்.

எல்: இராக்கேல் என்பவள் எகிப்து தேசத்தின் போஷகனைப் பெற்றதைப்போல, ஸ்துதிக்கும் படியாக ஒரு இரட்சகரை இப்பிரபஞ்சத்துக்குத் தந்தீர். ஆமென்.

மு: என் நேசமுள்ளவளே, நீர் முழுமையும் அழகுள்ளவள்.

எல்: ஜென்மப் பாவத்தின் மாசு உம்மிடத்தில் ஒருபோதும் இருந்ததில்லை.

மு: ஆண்டவளே என்... மற்றதும்

வெஸ்பர்ஸ் என்னும் மாலை ஜெபம்

மு: பரிசுத்த ஆண்டவளே! உமது கிருபை யுடைத்தான உதவியைத் தந்தருளும்.

எல்: மாசற்ற கன்னிகையே! சகல சத்துருக்க ளிடத்தில் நின்று என்னைக் காத்தருளும்.

மு: பிதாவுக்கும் சுதனுக்கும்... மற்றதும்...

எல்: ஆதியிலே... மற்றதும்... அல்லேலூயா.

சங்கீத ஜெபம்

மு: சூரிய ஓட்டத்தின் பத்து ரேகைகள் பின் சென்ற அக்காஸ் என்பவருடைய சூரிய கடிகாரமே!

எல்: மாசற்ற கன்னிகையிடத்தில் நின்று சுபாவ நூலற வார்த்தையாகிய கடவுள் அவதரித் தார்.  மட்டில்லாத கடவுள் தாம் உண்டுபண்ணின சம்மனசுக்களைவிட அதிகமாய்த் தாழ்ந்து, மனுக் குலத்திற்கு மீட்பெல்லாம் கொடுத்து மோட் சத்தை மனுக்குலத்துக்கு அடைந்து கொடுத்தார்.

மு: மரியாயே, உம்மைச் சுற்றி பரம பிரகாசத் தின் நீதியுள்ள சூரியனானவர் தம்முடைய சோதியுள்ள கதிரை வீச, நீர் உம்முடைய கெற்ப உற்பவத்தினால் அவருடைய தேவ ஒளி கொண்டு உதய காலையைப் போல குளிர்ச்சியாய்ப் பிரகாசித்தீர்.

எல்: பாம்பின் ஜெயசீலியே! முட்செடி களுக்குள் லீலியயன்னும் புஷ்பத்தைப்போல, ஒளியுள்ள சந்திரனாக இருக்கிறீரென்று, சகல வர்ணிப்பும் உம்மை வர்ணிக்கின்றது. ஆமென்.

மு: வானத்தின் மாறாத ஒளியை உதிக்கச் செய்தேன்.

எல்: பூமி முழுவதும் மூடுபனியைப் போல மூடினேன்.

மு: ஆண்டவளே என்... மற்றதும்

மிகவும் இரக்கமுள்ள தாயே! உமது அடைக் கலமாக ஓடிவந்து, உம்முடைய உபகார சகாயங் களை இரந்து, உம்முடைய மன்றாட்டுகளின் உதவியைக் கேட்ட ஒருவனாகிலும், உம்மால் கைவிடப்பட்டதாக ஒருபோதும் உலகில் சொல்லக் கேள்விப்பட்டதில்லை என்று நினைத்தருளும்.  கன்னியருடைய இராக்கினியான கன்னிகையே! என் தயையுள்ள தாயே!  இப்படிப்பட்ட நம்பிக் கையால் ஏவப்பட்டு உம்முடைய திருப்பாதத்தை அண்டி வருகிறேன்.  பெருமூச்செறிந்து அழுது பாவியாகிய நான் உமது தயாளத்துக்குக் காத்துக் கொண்டு உமது சமூகத்திலே  நிற்கிறேன்.  அவதரித்த வார்த்தையின் தாயே!  என் மன்றாட்டைப் புறக்கணியாமல் தயாபரியாய்க் கேட்டு தந்தருளும். ‡ ஆமென். (300 நாள் பலன்)

கடைசி வேண்டுதல்

மு: ஆண்டவளே! நீர் எங்களுக்காக மன்றாடு கிற மன்றாட்டினால் உமது குமாரனாகிய சேசுக் கிறீஸ்துவின் கோபந் தணிந்து எங்களை சீர்படுத்துவாராக.

எல்: அவர் எங்கள் பேரிலுள்ள தம்முடைய கோபத்தை மாற்றுவாராக.

மு: பரிசுத்த ஆண்டவளே! உமது கிருபை யுடைத்தான உதவியைத் தந்தருளும்.

எல்: மாசற்ற கன்னிகையே! சகல சத்துருக்க ளிடத்தில் நின்று என்னைக் காத்தருளும்.

மு: பிதாவுக்கும் சுதனுக்கும்... மற்றதும்...

எல்: ஆதியிலே... மற்றதும்... அல்லேலூயா.

சங்கீத ஜெபம்

மு: வல்லபம் பொருந்திய கன்னிகையே, மகா பேர்பெற்ற தாயே, பிரகாசத்தின் நட்சத்திரங்களினால் முடிசூட்டப்பட்ட செளந்தரிய அரசியே,

எல்: மோட்சத்தின் உன்னத சிம்மாசனத்தில் சர்வேசுரனுடைய வலது பாரிசத்தில் நிற்க பேர் பெற்ற பீதாம்பரத்தினால் அலங்கரிக்கப் பட்டவளே, ஸ்தாபிக்கப்பட்ட சம்மனசுக்களைப் பார்க்கிலும் மகிமையில் உயர்ந்து, மாசற்ற தூய்மையும் மகா தெளிவுமுள்ளவளுமாயிருக் கிறீர்.

மு: கிருபையின் தாயே!  இனிய நம்பிக்கை உம்மிடத்தில் காணப்படுகின்றது.  உம்முடைய மன்றாட்டினால் கடவுள் பாவிகளை விடுதலை யாக்குவார்.

எல்: குளிர்ந்த ஒளியுற்ற சமுத்திர நட்சத் திரமே!  கப்பல் சேதம் அடைந்தவர்களின் கண் களைக் களிப்பிக்கும் துறையே!  திறக்கப்பட்ட வாசலும் பாவிகளின் தஞ்சமுமாகிய உம்மால், நாங்கள் பரலோக இராஜாவைக் கண்டு அர்ச்சிய சிஷ்டவர்களாகக் கடவோமாக.  ஆமென்.

மு: மரியாயே, உம்முடைய நாமம் பொழிந்த பரிமள தைலமாம்.

எல்: உம்முடைய ஊழியர்கள் உம்மை  மிகவும் நேசிக்கிறார்கள்.

மு: ஆண்டவளே என்...  


திருப்புகழ்

மு: வணக்கமான கன்னிகையே!  நாங்கள் சுத்த கருத்துடனே வேதப் பிரமாணத்துக்கேற்ற இந்த மணித்தியாலங்களை உமக்குப் பாத காணிக்கையாக வைக்கிறோம்.

எல்: அன்புள்ள கன்னிகையே!  பரதேசிகளா கிய நாங்கள் கிறீஸ்துநாதரைத் தரிசிக்குமளவும்,

மு: எங்களை நடத்தி மரண நேரத்தில் ஒத்தாசையாயிரும்.

எல்: ஜென்மப் பாவக் கணுவும், கர்மப் பாவப் பட்டையும் அணுகாத கிளையிதுவே. ஆமென்.

மு: கன்னிகையே உம்முடைய கெற்ப உற்பவத்தில் நீர் மாசற்றவராயிருந்தீர்.

எல்: நீர் பெற்ற குமாரனின் பிதாவினிடத்தில் எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பிரார்த்திக்கக்கடவோம்

சர்வேசுரா சுவாமி!  பரிசுத்த கன்னிகையின் மாசற்ற கெற்ப உற்பவத்தினால் உம்முடைய குமார னுக்கு உகந்த பீடமாய் அவர்களிருக்கச் செய்தீரே.  முன் நியமித்த உமது திருக்குமாரனின் மரணத் தினால் அவர்களைச் சகல பாவக்கறையில் நின்று இரட்சித்தது போல நாங்களும் பாவக் கறையில் லாமல் உம்மிடத்திற்கு வர உம்மோடும் இஸ்பிரீத்து சாந்துவோடும் ஏக சர்வேசுரனாயிருந்து இராச்சியபாரம்  செய்கிற உமது குமாரனாகிய சேசுக் கிறீஸ்துநாதர் சுவாமியின் திருமுகத்தைப் பார்த்து நீர் எங்களுக்கு அனுக்கிரகம் செய்தருள வேண்டு மென்று உம்மை மன்றாடுகிறோம். ஆமென்.

மு: அர்ச். கன்னிமரியாயின் மாசில்லாத கெற்ப உற்பவமானது,

எல்: எங்களுடைய தஞ்சமாகவும் காவலாகவும் இருக்கக்கடவது.

மந்திரமாலை முடிந்தபின்

எல்: மகா பூசிக்கத்தக்க ஏக திரித்துவத் திற்கும், சிலுவையில் அறையுண்ட நமது ஆண்ட வராகிய சேசுக்கிறீஸ்துநாதருடைய மனுUகத் துக்கும், ஒட்டலோக மாட்சிமை தங்கி ஒருபோ தும் கன்னிமை குன்றாத, முத்திப்பேறு பெற்ற மரியாயின் குறைவில்லாக் கன்னிமைக்கும், சகல அர்ச்சியசிஷ்டவர்களுடைய கூட்டத்திற்கும், சகல சிருஷ்டிகளினாலே ஸ்துதியும், தோத்திரமும், மகிமையும், புகழும், அநவரத காலமும் உண்டா கக் கடவது.  நமக்கோவென்றால் சதா காலமும் பாவ விமோசனம் உண்டாவதாக! ஆமென்.

மு: நித்திய பிதாவின் சுதனைத் தாங்கின கன்னிமரியாயின் உதரம் பாக்கியம் பெற்றது.

எல்: ஆண்டவராகிய கிறீஸ்துநாதர் பாலுண்ட கொங்கைகள் பாக்கியம் பெற்றன.

ஆமென்.