மனுமக்களின் தந்தையே, இந்தப் பிள்ளை களை எனக்குக் கொடுத்து என் வசத்தில் வைத்து உமக்கு ஏற்கையாய் நடக்கவும் செய்தீரே. இந்தப் பரிசுத்த ஊழியத்தையும் பராமரித்துப் பாது காக்கும் காரியத்தையும் நிறைவேற்ற எனக்கு உதவி யாக உமது ஞான வரத்தைத் தந்தருளும். நான் அவர்களுக்கு எதைக் கொடுக்க வேண்டியதோ அதையும் எதை நிறுத்த வேண்டியதோ அதையும் கற்பியும். எப்போது கண்டிக்க வேண்டுமோ, அப் போது கண்டிக்கவும், எப்போது அரவணைக்க வேண்டியதோ அப்போது அரவணைக்கவும் செய் வீராக. இன்னமும் சாந்த குணத்தில் என்னைப் பலப்படுத்தியருளும். அவர்கள் பேரில் கவலையும் ஜாக்கிரதையுமுள்ளவனாயிருக்கவும், அந்தப் பிள்ளைகளுக்கு இளக்காரம் கொடுக்கிறதிலும், அதிகமாய்த் தண்டிக்கிற மூடத்தனத்திலுமிருந்து என்னை விடுவித்தருளும். வார்த்தையாலும், நடத்தையாலும் அவர்களை ஞானத்திலும், பக்தியிலும் கூர்மையாய் நடத்த எனக்கு உதவி செய்யும். அதனால் மோட்ச வீடாகிய பரம இராச் சியத்தில் பிதாவோடும், இஸ்பிரீத்துசாந்து வோடும் இராச்சியபாரம் செய்து நாங்கள் அளவறுக்கப்படாத நித்திய பேரின்ப பாக்கி யத்தை அனுபவிக்கச் சேர்த்துக் கொள்ளும்.
ஓ! மோட்சவாசிகளுடைய பிதாவே! என் பிள்ளைகளை உம்மிடத்தில் ஒப்புவிக்கிறேன். நீர் அவர்களுடைய கடவுளாகவும் தகப்பனாகவு மிரும். எனது இரட்சணியத்துக்கு வேண்டிய ஞான வரங்களைத் தந்தருளுவதுடன் என் வசத்தில் வைத்திருக்கும் பிள்ளைகள் இவ்வுலக தந்திரங் களை ஜெயிக்கவும் சத்துராதியின் உள்ளிந்திரிய வெளியரங்க சோதனைகளை எதிர்க்கவும் பசாசின் கண்ணிகளினின்று அவர்களை விடுவிக்கவும் தயை புரியும். அவர்கள் இருதயத்தில் உமது வரப்பிர சாதத்தைப் பொழிந்து இஸ்பிரீத்துவின் கொடை களைக் கொடுத்தருளும். அந்த அருளினால் அவர்கள் எங்கள் ஆண்டவரான சேசுக்கிறீஸ்து நாதரிடத்தில் உயரவும் கடவார்கள். அப்படியே அவர்கள் விசுவாசத்தோடு உமக்கு ஊழியம் செய்தபின் உம்மோடும் இஸ்பிரீத்துசாந்து வோடும் இராச்சியபாரம் செய்கிற, எங்கள் ஆண்டவரான சேசுக்கிறீஸ்துநாதருடைய பேறு பலன்களின் மூலமாய் மோட்ச இராச்சியத்திலே உமது சமூகத்தில் வந்து ஆனந்த பாக்கியத்தை அடையக்கடவார்கள்.
ஆமென்.