சுவாமி கிருபையாயிரும்
கிறீஸ்துவே கிருபையாயிரும்
சுவாமி கிருபையாயிரும்
கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும்.
கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும்.
பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
இஸ்பீரீத்து சாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
அர்ச்சியசிஷ்ட தமதிருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
அர்ச்சியசிஷ்ட மரியாயே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
மாசில்லாத அர்ச். ஞானப்பிரகாசியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
தேவமாதாவின் புதுமையினாலே பிறந்தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
பூலோக ஆவியை உட்கொள்ளுமுன்னே சேசுக்கிறீஸ்துநாதருடைய ஞானப் புத்திரனானவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
முந்தின வார்த்தையாக சேசு மரியாயே என்று உச்சரித்தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
புத்தியறிந்த கணமே உம்மை முழுமையும் சர்வேசுரனுக்கு ஒப்புக்கொடுத்தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
மிகுந்த தேவ வரப்பிரசாதமடைந்தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
தேவ வரப்பிரசாதத்தில் நிலைகொண்ட அர்ச்சியசிஷ்டவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
நீர் அடைந்த தேவ வரப்பிரசாதத்தை அர்ச்சிக்கப் பண்ணினவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
மேலாங்கிஷத்துக்குக் கீழாங்கித்தை உத்தம மேரையாய்க் கீழ்ப்படியப் பண்ணினவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
ஒன்பது வயதில்தானே உமது கற்பை தேவ மாதாவுக்குக் காணிக்கையாக ஒப்புக் கொடுத் தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
உத்தம மனஸ்தாபத்தினாலே சோபமடைந் தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
போசனத்தில் ஆச்சரியமான ஒறுத்தல் செய் தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
கடின தபசினால் விளங்கினவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
சரீரத்தை முழுதும் பகைத்தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
ஒருக்காலும் மோக விசாரப்படாத பரிசுத்தரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
கற்புக்கு விரோதமான சந்தோம் அணுகா தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
உள்ளிந்திரியங்களை தரும ஒழுங்கிலே நிலைப்பித்தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
பஞ்சேந்திரியங்களை அடக்கி மகா எச்சரிக் கையோடே காத்தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
சரீரமுள்ள சம்மனசென்கிற பெயர் பெற்றவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
சரீரம் இல்லாதவரென்றும் சொல்லப் பட்டவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
தேவமாதாவினால் சேசுசபைக்கு அழைக்கப் பட்டவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
உமக்குச் சொந்தமான துரைத்தனத்தைத் துறந்தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
உலக மகிமை பாக்கியத்தை முழுதும் புறக் கணித்தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
அரண்மனையில் உள்ளவர்களுக்குத் தரும ஒழுக்கம் படிப்பித்தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
வாலிபரை அறநெறியில் நடத்தி வழி காண்பித்தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
சுற்றத்தார் பேரிலே பற்றுதலற்றவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
சிந்தின இரத்தத்தைக் கொண்டு தகப்ப னுடைய மனதை இளகப் பண்ணி சந்நியாசியாக உத்தாரம் பெற்றவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
அர்ச். இஞ்ஞாசியாருக்குப் பிரியமுள்ள குமாரனானவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
மடத்திலே ஆறு வருடகாலம் பறக்கிற பட்சிக்கொத்த விரைவோடே ஞானக்காரியங் களில் விர்த்தித்தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
சேசுசபையின் கட்டளைகளைச் சாங்கோ பாங்கமாகச் செலுத்தினவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
மகா சிரவணமுள்ள அர்ச். ஞானப்பிரகாசியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
முழு தரித்திரத்தை அனுசரித்தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
கற்பினுடைய தார்ப்பரியமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
தியானத்தில் நெடுநேரம் செலவழித்தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
செபத்திலே அற்ப பராக்கில்லாதவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
எப்போதும் எவ்விடத்திலும் பரவசமாயிருந் தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
தேவ காரியங்களை எளிதாய் யோசித்தறிந் தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
ஞான நினைவை விடுகிறதிலே கஷ்டப்பட் டவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
தீராத வர்ம மனஸ்தாபங்களைத் தீர்த்தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
சமாதானத்தை வருத்துவிக்கிற அர்ச். ஞானப் பிரகாசியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
ழ்ச்சியில் உயர்ந்தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
மிகுந்த சாது குணமுள்ளவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
ஆச்சரியமான பொறுமையுள்ளவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
பிறர்மேல் மகா சிநேகம் வைத்தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
தேவசிநேக மிகுதியினாலே பக்திச்சுவாலக ருக்கு ஒப்பானவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
சேசுக்கிறீஸ்துநாதருடைய திருக்காயங்களின் பேரில் வெகு பக்தி வைத்தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
தேவ நற்கருணைக்கு உத்தம ஆராதனை செய்தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
தேவமாதாவினுடைய வியாகுலங்களின் பேரில் மிகுந்த இரக்கமுள்ளவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
சந்நியாசிகளுக்கு உன்னத படிப்பினையான வரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
அடுத்திருக்கிற மரணத்தை அறிந்து அகமகிழ்ந் தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
பிறர் சிநேகத்தினாலே பிராணனைச் செல வழித்தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
சேசுக்கிறீஸ்துநாதருடைய திரு இருதயத் திருநாளிலே பாக்கியமான மரணத்தை அடைந்த அர்ச்சியசிஷ்டவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
மாசில்லாத்தனத்தினாலே பரகதிக்குச் சென்ற வரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
ஆச்சரியமான தபசினாலே மிகுந்த மோட் சானந்தம் அடைந்தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
தேவசிநேக மிகுதியினால் உயர்ந்த பத்திராச னத்திலிருக்கின்றவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
பெலனும் உதாரமும் இரக்கமுமுள்ள அர்ச். ஞானப் பிரகாசியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
எண்ணிக்கையில்லாத பாவிகளுடைய மனதை திருப்பினவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
வியாதிக்காரரைக் குணமாக்குகிற ஞான சஞ்சீவியே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
கஸ்திப்படுகிறவர்களுக்கு ஆறுதலே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
இக்கட்டுகளை விலக்குகிறவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
மோக சேற்றிலே அசுத்தப்பட்டவர்களை கற்பினால் சுத்தமாக்குகிறவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
கற்பைக் காக்கிற அர்ச். ஞானப்பிரகாசியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
இக்காலத்திலே எண்ணிக்கையில்லாத அதிசயங்களைச் செய்கிறவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
உம்மைப் பிரார்த்திக்கிற சகலருடைய மன்றாட்டுகளை அடையச் செய்கிற அர்ச். ஞானப்பிரகாசியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி.
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமி.
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.
சேசுக்கிறீஸ்துநாதருடைய திருவாக்குத் தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரவான்களாகத் தக்கதாக, அர்ச். ஞானப்பிரகாசியாரே, எங்களுக் காக வேண்டிக் கொள்ளும்.
பிரார்த்திக்கக்கடவோம்
சர்வாதி கர்த்தராகிய சர்வேசுரா! தேவரீர் ஞானப்பிரகாசியாரை சிறுவயதில்தானே தெரிந்து கொண்டு அவர் ஓர் அற்பக் குற்றம் முதலாய் இல்லாதிருக்கவும், எல்லோரும் ஆச்சரியப்படத் தக்க கடின தபசு பண்ணவும் பரிபூரண ஆசீர் வாதம் கொடுத்தருளினீரே. அவருடைய பேறு பலன்களையும் மன்றாட்டுகளையும் பார்த்து, நாங்கள் இதுவரைக்கும் பாவிகளாய் இருந்தாலும் இனிமேலாகிலும் அவரைப் போலே பாவம் இல்லாதிருக்கவும், அவருடைய உத்தம தபசை நாங்கள் அனுசரித்து நடக்கவும், எங்களுக்கு அனுக்கிரகம் பண்ணியருள வேணுமென்று தேவ ரீரை மன்றாடுகிறோம். இந்த மன்றாட்டுக்களை யயல்லாம் எங்கள் ஆண்டவராகிய சேசுக்கிறீஸ்து நாதருடைய திருமுகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும் சுவாமி.
ஆமென்.