சேசுவின் திரு இருதயமே! நாங்கள் கட்டிக் கொள்ளும் துரோகங்களுக்குப் பரிகாரமாகவும், தேவரீர் திருப்பீடத்தில் ஓயாமல் உம்மைத்தானே பலியாக ஒப்புக்கொடுக்கும் சகல கருத்துக்களுக்காகவும், அடியேன் இன்று செய்யும் செபங்களையும் செயல்களையும் படும் துன்ப வருத்தங்களையும் அர்ச்சியசிஷ்ட கன்னி மரியாயின் மாசில்லாத திரு இருதயத்தின் வழியாக உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன்.
இந்த நாளுக்கும் இந்த மாதத்திற்கும் சபையாருக்குக் குறிக்கப்பட்ட சகல கருத்துக்களுக்காக விசேஷமாய் அவைகளை உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன். ஆமென்.
(100 நாள் பலன்)