சுமார் 1934ம் வருடத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள புன்னக்காயல் ஊரில் காலரா நோய் தாக்கம் ஊரே முடங்கி கிடந்தது அப்போது உள்ள காலத்தில் அந்த ஊரில் மருத்துவமனை கிடையாது நாட்டு மருந்து தான் உண்டு!
அப்போது புன்னக்காயலில் கோவா மிஷன் திருச்சபையை சார்ந்து இருந்தது ஆங்கிலயே குருவானவர் தான் இருந்தார். ஊரே காலராவிற்கு பயந்து யாரும் வெளியே வர பயந்து போய் வீட்டுக்குள்ளயே முடங்கி கிடந்தனர். அந்த சமயத்தில் அந்த ஆங்கிலய குருவானவர் துணிந்து நற்கருணை பாத்திரத்தை எடுத்துக் கொண்டு எல்லோரையும் சந்திக்க வேண்டும் சந்தித்து ஆண்டவரின் திருவுடலை எல்லோருக்கும் கொடுக்க வேண்டும் அப்போது எல்லோரும் நலமடைவார்கள் என்று குருவானவர் புறப்பட்டார்.
ஆலய உபதேசியாருக்கே மிகுந்த அச்சம் நமக்கு காலரா வந்து விடுமோ என்று. அந்த குருவானவர் மிகவும் தைரியமாக நம்மோடு உயிருள்ள ஆண்டவர் இருக்கிறார் ஏன் பயப்படுகிறீர்கள் என்று அவரை தைரியப்படுத்தி அழைத்து சென்றார்.
ஒவ்வொரு வீட்டிலும் போய் நற்கருணை கொடுத்துக் கொண்டு வந்தார். அப்போது காலரா நோயாளி ஒருவருக்கு நற்கருணை நாவில் கொடுத்தார் அப்போது அவர் வாந்தி எடுத்து விட்டார் உடனே திவ்ய நற்கருணை அப்படியே வெளியே வந்தது உடனே குருவானவர் தனது கையில் எடுத்து தன் வாயில் போட்டுக் கொண்டார். உடனே உபதேசியார் குருவானவரிடம் வேண்டாம் என்று தடுத்தார்.
ஆனால் அதற்கு குருவானவரோ நான் உட்கொண்டது ஆத்ம சரீரத்தோடு உள்ள ஆண்டவரை உட்கொள்கிறேன் எனக்கு ஒன்றும் ஆகாது என்று சொன்னார். அன்று முதல் திவ்ய நற்கருணை நாதர் பக்தி புன்னக்காயலில் அதிகமாக பரவியது.
இந்த சாட்சியம் மதிப்பிற்குரிய அப்பா டாக்டர் ராஜா பிஞ்ஞேரே அவர்களுக்கு அவர்கள் தந்தை திரு. மனுவேல் சூசை பிஞ்ஞேரே அவர்கள் வாழ்ந்த காலத்தில் நடந்த சம்பவமாக சொன்ன சாட்சியம்.
ஆம் கிறிஸ்து இயேசுவில் பிரியமுள்ள சகோதர சகோதரிகளே! அன்று காலரா நோய் உள்ள ஒருவர் திவ்ய நற்கருணை கொடுக்கும் போது வாந்தி எடுத்தார் அய்யோ காலரா நோய் உள்ளவர் என்று துளி கூட நினைக்காத ஆங்கிலேய குருவானவர் ஆத்ம சரீரத்தோடு ஆண்டவர் இருக்கிறார் என்று விசுவாசம் கொண்டார் அவருக்கு ஒன்றும் ஆகவில்லை ஆனால் இன்றைய காலகட்டத்தில் நாவில் திவ்ய நற்கருணை கொடுத்தால் நமது கையில் கொரோனோ வந்து விடுமோ என்ற பயம் எங்கு போனது கத்தோலிக்க விசுவாசம் திவ்ய நற்கருணை நாதர் பக்தி ????
அப்பா டாக்டர் ராஜா பிஞ்ஞேயிரோ 9840714318 சென்னை , பெசன்ட் நகர்
பரிசுத்த தமத்திருத்துவத்திற்கே மகிமை உண்டாவதாக !!! பரிசுத்த திருக்குடும்பமே துணை