67.- இதுவரைக்குஞ் சொன்ன நியாயங்களைக் கொண்டு ஒப்பித்தபடி, ஒருநாளாகிலும் வழுவாது நின்ற திருச்சபை உரோமான் திருச்சபையென்று நாம் இங்கே காட்டக்கடவோம். உரோமான் திருச்சபையென்னும் போது உரோமாபுரியில் மாத்திரம் இருக்குந் திருச்சபை என்போமோ? அல்ல. உரோமாபுரியில் சேசுநாதர் ஸ்தானத்திலிருந்து திருச்சபைத் தலைவராக அர்ச். இராயப்பர் துவக்கி இந்நாள் மட்டுந் தொடர்ந்து வந்த அர்ச். பாப்புக ளுக்குக் கீழ்ப்படிந்து, பூவுலகெங்கும் பரம்பி நிற்குந் திருச்சபைதானே உரோமான் திருச்சபையென்று கொள்ளக் கடவோம்.
இப்படிப்பட்ட உரோமான் திருச்சபை மெய்யான திருச்சபையென்றும், பொதுவாய் நிற்குந் திருச்சபை யென்றும் ஒப்பிப்போம். அதெப்படியென்றால், இது வரைக்குஞ் சொன்னபடி மெய்யான பொதுத் திருச்சபை, உலகம் முடியு மட்டும் ஒருக்காலும் வழுவாமல் நிற்குந் திருச்சபை அல்லோ . எப்போதும் எங்கும் வழுவாமல் நின்ற சபை உரோமான் திருச்சபையொழிய, வேறொரு சபையுமில்லை. ஆகையால் உரோமான் திருச்சபை மாத்தி ரம் மெய்யான திருச்சபையென்றும், பொதுவாய் நிற்குந் திருச்சபையென்றுஞ் சொல்லக்கடவோம். உரோமான் திருச்சபையன்றி வேறொரு சபை வழுவாமல் நின்றதென் றால், அப்படிப்பட்ட சபையைப் பதிதர் தாமே காட்டக் கடவார்கள். தம் சபை வழுவாமல் எப்போதும் நின்ற தென்பார்களோ? ஆகிலுந் தம் சபை தாங்கள் சொல்லு கிறபடியே , இருநூறு வருஷத்திற்கு முன்னே மாத்திரம் லுத்தேர் தலைவனாகத் துவக்கின சபையாகையால், எப் போதும் வழுவாது நின்ற சபையென்று சொல்லமாட்டார்கள்.
உரோமான் திருச்சபையோவெனில், வழுவாது நின் றது எப்படியென்று கேட்பீர்களாகில், சேசுநாதர் உண்டு பண்ணின திருச்சபைக்கெல்லாம் அர்ச். இராயப்பரைத் தலைவராக ஸ்தாபித்தார். அவர் தமது இராசாங்கம் உரோ மாபுரியில் வைத்துத் தாமே அதிலே வேதசாட்சியாகப் பாடுபட்டார். அவருக்குப் பிறகு, விடாத தொடர்போடு இந்நாள் வரைக்கும் அர்ச். பாப்புகள் ஒருவர்க்கு ஒருவர் பின் சென்று, திருச்சபைக்கெல்லாந் தலைவராக நின்றார் கள். அவர்களுக்குளளே வழுவினவர் ஆரென்றும், எக்கா லத்தில் வழுவினாரென்றும் எந்தத் தப்பறைத் திருச்சபைக் குப் படிப்பித்து வழுவி, அதனைக் கெடுத்ததென்றும் பதி தர்தாமே காட்டக் கடவார்கள். காட்டமாட்டாமற்போனால், அர்ச். பாப்புகளோடு திருச்சபையும் விசுவாசத்தில் வழு விக்கெட்டதென்பானேன்?
68 - இதற்குப் பதிதர் சொல்லும் மறுமொழியா வது: அர்ச். பாப்புக்களும், அவர்களோடு திருச்சபையும் ஒருவரும் அறியாமல் நாள் வட்டத்திலே வழுவிக்கெட்ட தாகி, அந்தக் கேடு ஆயிரம் வருஷமாக ஒருவருங் கண்டு பிடியாமல், கடைசியிலே லுத்தேர் அதனைக் கண்டுபிடித்து, எல்லாருக்கும் அறிவித்து, வழுவின திருச்சபையைப் பழைய நிலையில் நிறுத்தினான் என்றார்கள். ஆகிலும் ஆயி ரம் வருஷமாக உலகமெங்குங் கண்ணுடையவன் ஒருவ னும் இல்லாமல், காணாத கேடு லுத்தேர் மாத்திரம் அர்ச். பாப்பு மேல் வைத்த பகையாகிய விளக்கெரிக்க கண்டு தீர்த் தானல்லோ, நல்லது தானே. அந்தக் குறையெல்லாந் துடைத்து நிறுத்தின திருச்சபைக்குத் தலைவராக ஆரை லுத்தேர் வைத்தான. அர்ச். இராயப்பர் ஸ்தானத்தில் ஒருவர் வேண்டி இருக்கையில் அவர் எங்கே? நாம் கீழ்ப் படிந்து வணங்கும் அர்ச். பாப்புவன்றி வேறொரு சபையி லாயினும் பொதுத் தலைவன் ஒருவன் உண்டென்று காட் டமாட்டார்கள்.
69.- இதற்குப் பதிதர், இராச நீதிக்கு அஞ்சிக் கிணற்றில் குதித்துவிடும் பெருங்கள்ளனைப்போலவும், சூரியன ஒளிக்குப் பயந்து மெலிந்தோடிப் பொந்துகளில் ஒளிந்துக் கூவப் பயப்படுங் கோட்டான் போலவுஞ் , சொன் னதற்கு அஞ்சி மறுமொழி இல்லாமையால், அதிலேயும் பெரிதோர் அபத்தத்தைச் சொல்லிப் பிதற்றுவதாவது: சேசுநாதரொழியத் திருச்சபைக்குத் தலைவர் ஒருவரும் இல்லை. ஒருவருந் தேவையில்லை என்பார்களாயினும், சேசு நாதர் இங்கே சீவித்தகாலத்தில் இது மெய்யாயினும், தாம் மோக்ஷத்தில் ஏறின பின்பு, காணப்பட்ட திருச்சபையி னால் காணப்படாத தலைவராக அகன்றதனால், அவரை அல் லாதே காணப்படுந் தலைவர் தேவையில்லையென்பவன் மதி கெட்டவன்றானே. நாலுபேருள்ள வீடும், நாலுவீடுள்ள ஊரும், நாலு ஊருள்ள நாடும் ஒருதலையின்றி ஒழுங்கோடு நடக்கவும், முறையோடு நிற்கவுமாட்டாமையால், உலக மெங்கும் பரம்பின திருச்சபைக்கு மாத்திரங் காணப்பட்ட ஒரு தலை தேவையில்லையோ?
சேசுநாதர் தாமே கம் திருச்சபைக்குத் தம்மிடமாகக் காணப்பட்ட தலை வேண்டுமென்று, இராயப்பரை நோக்கி: என் ஆடுகளை மேய்ப்பாயாகவென்று, அவரைத் தம் மந்தை ஆடுகளுக்கு முந்தின இடையனாகவும், தம் திருச்சபைக்கு முந்தின தலைவராகவுங் கட்டளை இட்டாரல்லோ ? இராயப் பர் இறந்துபோன பின்பு திருச்சபைக்குக் காணப்பட்ட மறு தலைவேண்டாம் என்பார்களோ? ஆகிலும் நாளுக்கு நாள் திருச்சபை வளர்ந்தமையால், நாளுக்கு நாள் அதிக மாய்க் காணப்பட்ட தலைவர் வேண்டியதென்று எல்லாருஞ் சொல்லக்கடவோம். அப்படிப் பதிதர் தாமே முதல் 500 வருஷமாகத் திருச்சபை அவர்கள் சொன்னபடி வழுவாது நின்றபோது, இடை விடாமல் இராயப்பரைத் தொடர்ந்து வந்து, அவர் இராசாங்கத்திருந்து ஆண்ட அர்ச். பாப் புகள் அவர் உத்தியோகத்தையும் உடையவராகிக், காணப் பட்ட திருச்சபைக்குக் காணப்படுந் தலைவராக நின்றார்க ளென்று சொல்லவேண்டி இருக்கும்.
70.- அப்படியே 431-ம் ஆண்டில் எபெசியென்னும் நகரிடத்துக் கூடின திருச்சபைக்கு , அர்ச். பாப்புவினாலே தம்மிடமாக அனுப்பப்பட்டவர்களுக்குள்ளே ஒருவர் பிலிப்பென்பவர் எல்லாரும் அறியச் சொன்ன தாவது: அப் போஸ்தலர்மாருக்கு முதல்வனும், பொதுத் திருச்சபைக்கு அஸ்திவாரமும், தலையுமாகிய அர்ச். இராயப்பர் தம்மைத் தொடர்ந்து வந்த அர்ச். பாப்புகளிடத்தில் இன்னம் ஆள வும், இங்கே சந்தேகங்களைத் தீர்க்கவும், இனியும் எப்போ தும் ஆளத்தக்கதாகவும், ஒருவருக்குஞ் சந்தேகமற, எல் லாருக்கும் எக்காலத்திலும் நிற்பது நிச்சயந்தானே. அப் படியே, அர்ச். இராயப்பரைத் தொடர்ந்து இப்பொழுதி ருக்கும் அர்ச். பாப்பு செலென் தீனென்பவர், எங்களை இந்தத் திருச்சபைக் கூட்டத்திற்கு அனுப்பினாரென்றார். அதற்குக் கூடியிருந்த திருச்சபை எல்லாம் ஒரு மொழியா கச், செலெஸ்தீனாகிய அர்ச். பாப்புவை மிகவும் புகழ்ந்து தோத்திரஞ் செய்தார்கள்.
இதிலே இறந்த அர்ச். இராயப்பர் இன்னம் அர்ச். பாப்புகளிடத்தில் ஆண்டு நிற்பார் என்பதற்கு அர்த்த மேதெனில், சேசுநாதர் அவருக்கு முன் தந்த தலைமையும், உத்தியோகமும், வல்லமையும் மாறாமல் மற்ற அர்ச். பாப்பு களிடத்தில் இப்பொழுது உண்டென்றும், இனி எப்போ தும் இருக்குமென்றும் அதற்கு அர்த்தமாமே. ஆகையால் அர்ச். இராயப்பர் திருச்சபைத் தலைவராக நின்றாரென்றும், அவரைத் தொடர்ந்து வந்த மற்ற அர்ச். பாப்புகள் அவ ரைப்போல் ஆண்டு, தலைவர்களாக நின்றார்களென்றும், எப்போதும் நிற்பார்களென்றும், பதிதர் சொன்னபடி திருச்சபை வழுவாத நாளில் எல்லாருக்கும் நிச்சயமாயிருந் ததே. ஆகையால் முதல் தலையாகிய சேசுநாதரன்றித் திருச்சபையில் 500 வருஷமட்டுங் காணப்பட்ட தலையும் பூவுலகில் இருந்ததென்று பதிதர்தாமே சொல்ல வேண்டி யிருக்கையில், அதன் பிறகு இப்படிப்பட்ட காணப்படுந் தலை திருச்சபைக்குத் தேவையில்லை என்பதென்ன
71. இதிலே பதிதர் சொல்லுந் தன்மையாவது: அர்ச். சின்னப்பர் உரோமாபுரிக்கு எழுதின நிருபம் 12-ம் அதிகாரம் 5-ம் வசனத்தில் எழுதின தாவது: நாம் ஒருங் குடன் கூடிக் கிறீஸ்துவினிடத்தில் ஓர் உடலாகி, நமக் குள்ளே பல உறுப்புகளுமாக நிற்கிறோமென்றார். ஆகை யால் சேசுநாதர் திருச்சபையென்னும் உடலுக்குத் தலை யொழிய மற்றவர்கள் அர்ச். இராயப்பரும், பாப்புகளும் முதலாய் வேற்றுமையின்றித் தலையாயிராமல் உறுப்புகளாக நிற்பார்களென்பது நிச்சயமாமே என்று பதிதர் சொல்லு கிறார்கள். ஆகிலும் அந்த வசனத்தைச் சொன்னவுடனே, அர்ச். சின்னப்பர் எழுதினதாவது : இதிலே நாம் அடை யும் வரப்பிரசாதங்களால் வேற்றுமை உண்டாமென்று தீர்க்கத்தரிசன மாதிக்கந் தயை பத்தி மற்ற வாப்பிரசாதங் களைச் சொல்லிக்கொண்டு வருகிறார்.
ஆகையால் அதிலே அர்ச். சின்னப்பர் திருச்சபையில் வருந் தேவ வரப்பிரசாதங்கள் எல்லாஞ் சேசுநாதராகிய தலையினின்று வருவதொழிய வேறொருவராலும் வர அறி யாமல், இந்த வகையால் சேசுநாதர் மாத்திரந் திருச்சபைத் தலையென்றும், மற்றவர்கள் அர்ச். இராயப்பரும், அர்ச். பாப்புகளும் முதலாய்ச் சேசுநாதரால் வரப்பிரசாதங்களை அடையும் உறுப்புகளென்றுஞ் சொல்லிக் காட்டினார். இது நாமுஞ் சொல்லுந் தன்மையால்லோ? தேவ வரப்பிரசாதங் கள் நமக்கு அர்ச். இராயப்பராலேயாகிலும், மற்ற அர்ச். பாப்புகளாலேயாகிலும் வராதென்றும், இந்த வகையால் அர்ச். இராயப்பரும், மற்ற அர்ச். பாப்புகளுந் திருச்சபைத் தலைவர் அல்லவென்றும், எல்லாரும் வேற்றுமையின்றிச் சேசுநாதர் தரும் வரங்களால் இரட்சிக்கப்படும் உறுப்புக்க ளென்றும், வலிய நாமுஞ் சொல்லுகிறோமே. இந்தத் தலைமை சேசுநாதருக்கு மாத்திரமாகி அவர் ஸ்தானத்தி ருந்து காணப்பட்ட முறையோடு நம்மைப் படிப்பித்தலும், நடத்தலும் அர்ச். இராயப்பருக்கும், மற்ற அர்ச். பாப்புக ளுக்கும் சேசுநாதர் தந்த தலைமையென்று சொல்லத்தகும்.