39.- இன்றையவரைக்குந்தேவத்திரவிய அநுமானங் கள் ஏதென்றும், அவைகளினால் நமக்கு வரும் பலன் ஏதென் றுங் காட்டின பின்பு, தேவத்திரவிய அவமானங்கள் மத் தனையென்று சொல்லக்கடவோம். இதில் முந்தி அறிய வேண்டிய தாவது: லுத்தேர் திருச்சபை இலக்ஷணமென் னும் புஸ்தகத்தின் கடைசியிலேயும், அவன் பிரிய சீஷனா கிய மேலந்தோனின் அப்போலோசியவென்னும் புஸ்தகத் தின் 7-ம் பிரிவிலேயும், கல்வீன் கற்பனைகளின் 4-ம் காண் டம் முதல் அதிகாரம் 9-ம் பிரிவு துவக்கி மூன்று பிரிவுகளி லேயும், மற்றப் பதிதர் எல்லாரும் மெய்யான திருச்சபை இலக்ஷணங்களைச் சொல்லும் போது தேவத்திரவிய அநுமானங்களின் விஷயத்தில் ஒத்த முறையோடு உணர்வாக நிற்பது மெய்யான திருச்சபைக்குப் பிரதான இலக்ஷணமென்று ஸ்தாபித்தார்கள்.
ஆகிலும் லுத்தேர் முதற்கொண்டு தேவதிரவிய அநுமானங்களின் விஷயத்தில் ஒரு நிலை கொள்ளமாட்டாமல் அந்தத் தேவத்திரவிய அநுமானங்கள் எத்தனையென்று முதலாய் நிச்சயமாகச் சொல்லமாட்டாமற் போனார்கள். ஆகையால் அவர்கள் தாமே சொன்ன இலக்ஷணத்தினால் அவர்கள் சபை மெய்யான திருச்சபை அல்லவென்று தாங்களே சொல்லக்கடவார்கள். அப்படியே லுத்தேர் 1520-ம் ஆண்டிலே தந்த பபிலோன் அடிமைத்தனமென்னும் புஸ்தகத்தின் துவக்கத்தில் எழுதினதாவது : வேதத்தில் எழுதப்பட்ட தன்மையால் ஒரு தேவத்திரவிய அநுமானம் மாத்திரம் உண்டென்றான். பிறகு எழுந் தள்ளிப் பின்பு மூன்று மாத்திரம்: ஞானஸ்நானம், நற்கருணை, பச்சாத்தாபம் இவைகளை ஒத்துக்கொள்ளச் சொன்னான்.
அந்தப் புஸ்தகத்தின் நடுவிலே தான் ஏழு தேவத்திரவிய அநுமானம் மறுக்கிறதில்லையென்று வேத உதாரணங்களால் மாத்திரம் ஏழும் ஒப்பிக்கப்படாதென்றான். அதில் தானே கடைசியில் உரியமுறையோடு பேசவேண்டுமாகில் ஞானஸ்நானம், நற்கருணையென்று இவ்விரண்டு மாத்திரந் தேவத்திரவிய அநுமானம் என்னப்படுமென்றான். இப்படி லுத்தேர் ஒருவன் ஒரு புஸ்தகத்தில் இந்த ஒரு விஷயத்தில் அத்தனை விபரீதங்களை எழுதி வைத்தான். அவன் பிரிய சீஷனாகிய மேலந்தோனோவெனில் முந்தி லுத்தே ரோடு ஞானஸ்நானம், நற்கருணையென்று இரண்டு மாத்திரம் உண்டென்றான். பிறகு அவனோடு பச்சாத்தாபத்தைக் கூட்டி அப்போலோசியவென்னும் புஸ்தகத்தின் 13-ம் பிரிவில் மூன்று உண்டென்றான்.
1536-ம் ஆண்டில் தந்த கிரந்தத்திலோவெனில் அம் மூன்றுக்குங் குருத்துவங் கூட்ட எனக்கு மிகவுஞ் சம்மதி தானே என்றான். மீளவும் 1538-ம் வருஷத்தில் அச்சுப் பதித்த அவன் புஸ்தகத்தில் விவாகத்தையுங் கூட்டினான். கடைசியில் லுத்தேர் செத்த இரண்டு வருஷத்திற்குப் பிறகு, 1648-ம் ஆண்டில் லிப்சேஞ்சிய கூட்டத்தில் அவனும் இருந்து கொண்டு கூடின பதிதர் எல்லாரும் ஏழு தேவத்திரவிய அநுமானங்கள் உண்டென்று ஸ்தாபித்தார்கள். அப்படியே மற்ற லுத்தேரானிகள் எல்லாருங் காட்டு வழி சாய்ந்த மாடுகளைப்போல ஒரு முகமாய்ப் போகாமல் திரிந்து, தாங்கள் சொன்ன அடையாளத்தைக்கொண்டு தாங்கள் கூடினது மெய்யான திருச்சபைக் கூட்டம் அல்ல வென்று காட்டினார்கள். தரங்கம்பாடிப் பதிதர் முதலாய் நற்கருணை ஆயத்தமென்னும் புஸ்தகத்தில் பச்சாத்தாபத் தைக் கூட்டினாற்போலப் பேசி, வேத சாஸ்திரமென்னுங் கிரந்தத்தில் ஞானஸ்நானம், நற்கருணையென்று இரண்டு தேவத்திரவிய அநுமானம் மாத்திரம் உண்டென்று எழுதி வைத்தார்கள்.
உரோமான் திருச்சபையோவெனில், சேசுநாதரால் ஸ்தாபிக்கப்பட்டதாகையால் இதிலேயும் வேறுபடாமல் எப்போதும் ஏழு தேவத்திரவிய அநுமானங்கள் உண் டென்று மிகாமலும், குறையாமலும் எல்லார் வாயிலும் ஒரு மொழியாய் எக்காலத்தும் ஒரு நிலையாய்ச் சொல்லிக் கொண்டு வந்ததறிவோம். ஏழு தேவத்திரவிய அநுமானங் கள் ஏதெனில், ஞானஸ்நானம், உறுதிப்பூசுதல், நற்கருணை, பச்சாத்தாபம், அவஸ்தைப்பூசுதல், குருத்துவம், மெய்வி வாகமென்று இவை ஏழுமென்க. ஆகிலும் ஏழு என்னுங் கணக்கும், தேவத்திரவிய அநுமானமென்னும் பெயரும் வேதாகமங்களில் எழுதப்பட்டது எங்கேயென்று பதிதர் கேட்கவுந் தேவையில்லை. நாம் அதை ஒப்பிக்கவுந் தேவை யில்லை. வேதத்தில் இரண்டு மூன்றென்றுங் கணக்கு இல் லாமலும், தேவத்திரவிய அநுமானமென்னும் பெயர் விவா கத்துக்கன்றி வேறொன்றிற்கும் இல்லாமலும் பதிதர் தாமே இரண்டு மூன்று தேவத்திரவிய அநுமானங்கள் உண் டென்று வேத உதாரணங்களால் ஒப்பிக்குந் தன்மையால் நாமும் ஒவ்வொன்றாய் ஆராய்ந்து எழும் உண்டென்று ஒப்பிக்கக் கடவோம்.
90.- இதில் நாமும் பதிதரும் ஒருப்படச் சொல்லுந் தன்மையாவது: ஒரு வேதச் சடங்கினைத் தேவத்திரவிய அநுமானமென்று சொல்லும்படிக்கு மூன்று குணங்கள் அதற்கு வேண்டியதாம். முதலாவது : புறத்தில் காணப் படும் அடையாளமுஞ் சடங்குமாக வேண்டும், 2-வது : அதினால் நமக்கு இஷ்டப்பிரசாதம் வருவது நிச்சயமாக வேண்டும். 3-வது: அதற்க தனை ஸ்தாபித்த ஆண்டவர் கட்டளை உண்டாகவேண்டும். இந்த மூன்று குணங்களையு டைய தெல்லாத்துக்குந் தேவத்திரவிய அநுமானமென் னும் பெயர் செல்லுமொழிய அதில் ஒன்றில்லாதாயின் அந்தப் பெயர் செல்லாதென்னக்கடவோம். இதிப்படியா கையில் நாம் சொன்ன ஏழு சடங்குகளுக்கெல்லாம் அம் முக்குணம் உண்டென்றும், அவைகளுக்கு மாத்திரம் உண் டென்றும் வேத உதாரணங்களினால் ஒப்பித்தால் நாம் சொன்ன ஏழு தேவத்திரவிய அநுமானங்கள் உண்டென் றும், அவைகள் அல்லாமல் வேறில்லை யென்றும் ஒப்பித் தாற்போல் ஆகுமல்லோ.
ஆகையால், முதலாது ஞானஸ்நானம். இதனை அர்ச். சின்னப்பர் எபெசியாருக்கு எழுதின 5-ம் அதிகாரம் 26-ம் வசனத்தில் தண்ணீரால் கழுவுதலென்றார். இதோ புறச் சடங்கு. பின்னையும் அர்ச். மாற்கு சுவிசேஷத்தின் 16-ம் அதிகாரம் 16-ம் வசனத்தில் சேசுநாதரை விசுவசித்து ஞானஸ்நானம் பெற்றவன் கரை ஏறுவானென்றார். இதோ இதனால் வரும் இஷ்டப்பிரசாதத்தின் நிச்சயம். மீளவும் அவர் தாமே அர்ச். அருளப்பர் சுவிசேஷத்தில் 3-ம் அதி காரம் 5-ம் வசனத்தில் தண்ணீராலும், இஸ்பிரீத்து சாந்து வினாலும் திரும்பிப் பிறவாதவன் கரை எறானென்றார். அர்ச். மத்தேயு சுவிசேஷத்தின் 28-ம் அதிகாரம் 19-ம் வசனத்தில் எங்கும் போய் எல்லாருக்கும் உபதேசஞ் சொல்லி ஞானஸ்நானங் கொடுங்களென்றார். இதோ ஸ்தா பித்த கட்டளை. இம்மூன்று குணங்கள் உண்டாகையால் ஞானஸ்நானந் தேவதிரவிய அநுமானமென்பது பதிதருக் குஞ் சந்தேகமில்லை.
91. - இரண்டாவது, உறுதிப்பூசுதல். அப்போஸ்தலர் நடபடியாகமத்தின் 8-ம் அதிகாரம் 14-ம் வசனத்தில் சமா ரிய பட்டணத்துப் பலர் ஞானஸ்நானம் பெற்ற செய்தி அப்போஸ்தலர் அறிந்து, எருசலேமிடத்திலிருந்து அர்ச். இராயப்பரும், அருளப்பரும் நெடு வழி நடந்து போய் அவர்கள் மேல் கை வைத்து, இஸ்பிரீத்து சாந்துவை அடைந்தார்களென்று எழுதி இருக்கிறதொழிய அடிக்கடி அப்போஸ்தலர் ஞானஸ்நானம் பெற்றவர்கள் மேல் கை வைத்து, இஸ்பிரீத்து சாந்து தவறாமல் எழுந்தருளி வந்த தென்று அந்த ஆகமத்தில் பல இடத்தில் எழுதி இருக்கிற தல்லோ ?
இதில் தலைமேல் வைத்த கை புறச்சடங்காமே. இஸ் பிரீத்து சாந்து தப்பாமல் எழுந்தருளினதினால் அதில் வரும் இஷ்டப்பிரசாதத்தின் நிச்சயமாமே. உள்ளே இஷ்டப்பிர சாதத்தைப் பயக்கும் வல்லமை புறத்தில் செய்யப்பட்ட ஓர் சடங்குக்கு ஆண்டவர் கட்டளையினால் வருமொழிய ஒருவராலும் வர அறியாதென்று பதிதருஞ் சொன்னதி னால் இதில் ஆண்டவர் ஸ்தாபித்த கட்டளை வெளியாமே. மீளவும் அப்போஸ்தலர் கை வைக்க இஸ்பிரீத்து சாந்து வருமென்று ஆண்டவர் ஸ்தாபியாதிருந்தால் எல்லாருக்கும் இஸ்பிரீத்து சாந்து வர அடிக்கடி அப்போஸ்தலர் தலைமேல் கை வைக்கிறது சர்வேசுரனை வீணாய்ச் சோதிக்கிறதாகை யால் பாவமாமே. இதற்கு அப்போஸ்தலர் சம்மதிக்கப் போகிறதில்லை. ஆகையால் இதற்கு சேசுநாதர் அப்போஸ் தலருக்குக் கட்டளை செய்தது நிச்சயந்தானே. இத்தன் மைக்கு இதிலேயுஞ் சொன்ன மூன்று குணங்களைக் கண்ட மையால் உறுதிப்பூசுதலும், தேவத்திரவிய அநுமானமென் பதும் நியாயந்தானே.
மீளவுஞ் சமாரிய பட்டணத்தாருக்கு வேறொருவன் ஞானஸ்நானங் கொடுத்திருக்க, அவனும் இந்தச் சடங்கி னைக் கூடச் செய்யாமல் அதற்கு மாத்திரம் இரண்டு அப் போஸ்தலர் நெடு வழி நடந்து போய்ச் செய்ததினால் இந் தத் தேவத்திரவிய அநுமானத்தை மேற்றிராணியாரொழிய வேறொருவருங் கொடுக்கப்படாதென்று திருச்சபையில் எப்போதும் நடந்த முறைமைதானே. ஆகிலும் நாம் எண் ணெய் கொண்டு பூசின முறைமை இதில் காணாததினால் சந் தேகப்படவுந் தேவையில்லை. அர்ச். சின்னப்பர் கொரிந்தியாருக்கு எழுதின இரண்டாம் நிருபத்தின் முதல் அதிகா ரம் 21-ம் வசனத்தில் இந்த முறையைத் தெளிவாக வைத் தார். கிறீஸ்துவின் முகாந்தரமாக எங்களை உங்களோடு கூட உறுதிப்படுத்தினவர் சர்வேசுரன் காமே, நம்மெல்லா ருக்கும் எண்ணெய் பூசினவர் அவர் தாமே. நம்மிடத்தில் தம் முத்திரைப் பதித்தவர் அவர் தாமே. நம் உயிரிடத்தில் இஸ்பிரீத்து சாந்துவின் அடைமானத்தைத் தந்தவர் அவர் தாமே யென்றார்.
இதோ உறுதிப்பூசுதலென்னும் பெயரும், எண்ணெய் பூசின சடங்கும் வரும், இஸ்பிரீத்து சாந்துவின் இஷ்டப் பிரசாதமும் இனி நாம் சொல்லிக் காட்டப்போகிறபடிக்கு இந்தத் தேவத்திரவிய அனுமானத்தினால் நமக்குப் பதிக் கப்பட்ட தேவ முத்திரையாக ஆத்துமத்தில் எழுதப்படும் அக்ஷரமும், இவையெல்லாம் ஒருப்படத் திருச்சபை செய் யும் முறையோடு இதில் வெளியாய் வேத சத்தியமாகக் காட்டப்பட்டதாமே. இதெல்லாம் இப்படியாகையில் வேதத்தில் எழுதப்பட்டதெல்லாம் உள்ளபடி அர்த்தத்தை திருகாமற் கொள்ள வேண்டுமென்று சொல்லிக்கொண்டு வரும் பதிதர் இந்தத் தேவத்திரவிய அநுமானத்தை மறுத் துத் தாங்கள் ஒத்துக்கொள்ளாமலென்ன. மீளவும் அப் போஸ்தலர் காலத்திலிருந்த அர்ச். தியொனிசியுஸென்பவர் துவக்கி விடாமல் வந்த வேதபாரகரெல்லாரும், தொதுலி யானும், சிப்பிறியானும், எரோணிமுசும், அகுஸ்தீனும், மற்றவரும் எண்ணெய் கொண்டு பூசி, மேல் கை வைத்து மேற்றிராணியார் இந்தத் தேவத்திரவிய அநுமானத்தைக் கொடுக்கும் முறை எப்போதுந் திருச்சபையில் நடந்த முறையாக எழுதி வைத்தார்கள்.
92. - மூன்றாவது, நற்கருணை. அர்ச். மத்தேயு சுவிசே ஷத்தின் 26-ம் அதிகாரம் 26-ம் வசனந் துவக்கி சேசுநா தர் அப்பத்தையும், பாத்திரத்தையும் கையில் ஏந்தித் தோத்திரஞ் செய்து, சிறிது வார்த்தை சொல்லித் திவ்ய நற்கருணை உண்டாக்கின முறை எழுதின தாமே. இதோ செய்ய வேண்டிய சடங்கு . பின்னையும் அர்ச். அருளப்பர் சுவிசேஷத்தின் 6-ம் அதிகாரம் 52-ம் வசனத்தில் இந்த அப்பத்தை உண்டவன் நித்திய சீவியத்தை அடைவா னென்று சேசுநாதர் திருவுளம்பற்றினார். இதோ வரும் இஷ்டப்பிரசாதத்தின் நிச்சயம். மீளவும் அதிற்றானே 54-ம் வசனத்தில் நம்முடைய மாம்ஸத்தையும், இரத்தத் தையும் உண்ணாதவன் சீவன் இல்லாதவனென்றார். ஆகை யால் நம்மோடு பதி தருஞ் சந்தேகமின்றி நற்கருணை தேவத் திரவிய அநுமானமென்று ஒத்துக்கொள்வார்கள்.
93. - நாலாவது, பச்சாத்தாபம். அர்ச். அருளப்பர் சுவிசேஷத்தின் 20-ம் அதிகாரம் 21-ம் வசனத்தில் சேசு நாதர் அப்போஸ்தலருக்குத் திருவுளம் பற்றின தாவது: பிதா நம்மை அனுப்பினபடி நாமும் உங்களை அனுப்புகிறோம் என்ற பின்பு, இதற்கு அர்த்தஞ் சொல்லுந் தன்மையால், நீங்கள் எவர்கள் பாவங்களைப் பொறுப்பீர்களோ அவர்களுக் குப் பொறுக்கப்படும். எவர்களுக்குப் பொறுக்கமாட்டீர்க ளோ அவர்களுக்கு பொறுக்கப்படாதிருக்கும் என்றார். இதில் தீர்வையிடும் முறையாகையால் புறச் சடங்கு உண் டாமே. பாவங்கள் பொறுக்கப்படும் என்றதனால் இஷ்டப் பிரசாதத்தின் நிச்சயமாமே. பிதா நம்மை அனுப்பினாற் போல நாமும் உங்களை அனுப்புகிறோமென்றது பிதாவின் கட்டளையினால் பாவங்களைப் பொறுக்க நாம் வந்தபடி நீங்க ளும் எம் கட்டளையினால் பாவங்களைப் பொறுக்கப் போங் கள் என்றதாகையால் இதுவே தேவ கட்டளையாமே.
ஆகையால் சொன்ன முக்குணங்கள் இதற்கும் உண் டாகி, இதுவுந் தேவத்திரவிய அநுமானம் என்று சொல் லக்கடவோம். ஆகிலும் இன்னஞ் சேசுநாதர் திருவுளம் பற்றின வார்த்தைக்கு அர்த்தம் வெளியாகும்படிக்கு அறிய வேண்டியதாவது : சேசுநாதர் தாம் பாடுபட்டு அடைந்த பலனினாலேயும், தமக்குள்ள தேவ வல்லமையினாலேயும், மனிதர் பாவங்களை எல்லாம் பொறுக்கும்படிக்குத் தம் பிதாவாகிய சர்வேசுரனால் அனுப்பப்பட்டார் என்றது நிச்சயந்தானே. அப்படியே அவர் பாடுபட்டுப் பாவங்கள் எல் லாம் பொறுக்கப்படும்படிக்கு வேண்டினதின் மேலும் உத் தம மேரையால் அளவில்லாத பலன்களை அடைந்தார். ஆகி லும் அப்படித் தாம் அடைந்த பலன் உலகமெங்கும், நாடோறும், உலகம் முடியந்தனையும், அதற்குப் பாத்திரமா யிருக்கும் பேர்களுக்கு மாத்திரந் தேவத்திரவிய அநுமா னங்களை எத்தனக் காரணங்களாகக்கொண்டு கொடுக்க வேண்டுமென்று ஸ்தாபித்தார்.
ஆகையால் மோக்ஷத்துக்கு எழுந்தருளிப்போக நாள் கிட்டின போது, தமது இடமாக உலகெங்கும் அப்போஸ் தலரும், அவர்கள் வழியாக வருங் குருக்களும் போய்த் தேவத்திரவிய அநுமானங்களைக் கொண்டு தாம் அடைந்த பலனை மனிதருக்கு உதவியாகச் செலவழித்துப் பாவங் களைப் பொறுக்கும் உத்தியோகத்தைக் கொடுத்தார். ஆத லால் பிதா தம்மைப் பாவங்களைப் பொறுக்க அனுப்பினாற் போல, தாமும் அவர்களை அனுப்பின தாகச் சொன்னார். பாவங்களைப் பொறுக்க உண்டாக்கின தேவத்திரவிய அது மானங்கள் இரண்டுண்டாம்: ஞானஸ்நானம், பச்சாத்தாபம். இவைகளில் ஞானஸ்நானம் முந்தின காகையால் முழுத் தயைவகையால் கொடுக்கச் சித்தமாகி இதில் பாவ தோஷ மும், அபராதக்கடனும் முழுதும் பொறுப்பதல்லாமல் இந் தத் தேவத்திரவிய அதுமானத்தைக் கொடுக்க எல்லாருக் கும் உத்தாரங் கொடுத்தார்.
இந்த நன்றியறியா தவர்கள் ஞானஸ்நானம் பெற்ற பின்பு, செய்த பாவங்களைத் தயையோடு கூடின நீதிவகை யால் பொறுக்கப் பச்சாத்தாபத்தை ஸ்தாபித்தார். இத னால் அப்போஸ்தலருக்குச் சொல்லி, அவனவன் செய்த பாவங்களை நன்றாய் விசாரித்துப் பொறுக்கத்தகுவதைப் பொறுக்கவும், பொறுக்கத்தகா கதைப் பொறுக்கா திருக்க வும் அவர்களுக்கு உத்தியோகங் கொடுத்தார். அப்படியே பச்சாத்தாபந் தீர்வை வகையால் உண்டாக்கப்பட்ட தேவத் திரவிய அநுமானமாகக்கொள்ள இதில் பாவ தோஷத்தைப் பொறுத்து, நித்திய அபராதக் கடனை முழுதும் பொறுக் காமல், நித்திய அபராதக் கடனாக இன்னம் நிற்கச் சித்த மானார். இதுவுந் தவிர இந்தத் தீர்வையிட எல்லாருக்கும் உத்தாரங்கொடாமல் இதற்கு அப்போஸ்தலரையும் அவர் களோடு சகல குருக்களையும் ஸ்தாபித்தார்.
அப்படியே அர்ச். சின்னப்பர் கொரிந்தியாருக்கு எழு தின 2-ம் நிருபம் 5-ம் அதிகாரம் 18-ம் வசனத்தில் இந்தத் தேவத்திரவிய அநுமானத்தைக் குறித்துச் சொன்னதா வது : மறுவுறவாக்கும் உத்தியோகத்தை எங்களுக்கு ஆண் டவர் தந்தார் என்றார். எல்லாருக்குந் தந்தார் என்னாமல் எங்களுக்குத் தந்தார் என்றதினால் குருக்களுக்கொழிய, இதில் பாவங்களைப் பொறுக்கும் வல்லமை ஒருவருக்கும் இல்லை என்று சொல்லக்கடவோம். இதில் லுத்தேர் எப் போதுந் தன்னோடு ஒத்தவனாய் மதி கெட்ட பித்தனைப் போல் பேசி ஆணும், பெண்ணும் எல்லாரும் பாவசங்கீர்த் தனங் கேட்டுப் பாவங்களைப் பொறுக்கவல்லவர் என்றதும் போதாமல், 1534-ம் ஆண்டில் அச்சில் பதித்த தனிப் பூசை விலக்கச் செய்த புஸ்தகத்தில் பசாசு முதலாய் மனித ரூபமாகத் தோன்றி, இந்தத் தேவத்திரவிய அநுமானத்தை முடித்துப் பாவங்களைப் போக்க வல்லதென்றான்.
மற்றப்படி இந்தத் தேவத்திரவிய அநுமானத்தைக் கொடுக்கும் உத்தியோகத்தை அர்ச். சின்னப்பர் மறுவுற வாக்கும் உத்தியோகம் என்றது ஏதெனில், ஆண்டவருக்கு ஆகாமல் பழம் பகையாகிய சென்மப் பாவத்தோடு பிறந்த யாவரும், ஞானஸ்நானம் பெற்ற மாத்திரத்தில் ஆண்டவ ரோடு உறவாகி, அவருக்குப் பிள்ளைகளாவது நிச்சயந் தானே. அதன்பின்பு செய்த சாவான பாவத்தால் அந்த உறவு போக்கினவன் மறுபடி ஆண்டவர் உறவு அடையப் பச்சாத்தாபமென்னுந் தேவத்திரவிய அநுமானம் உண்டாக் கப்பட்டதினால், அதில் பாவங்களைப் பொறுத்து மறு உற வினைக் கட்டுவிக்கும் உத்தியோகம், மறு உறவாக்கும் உத்தி யோகம் என்றார்.
மீளவுஞ் சேசுநாதர் ஆண்டவராயிருக்க, எல்லாத்தை யும் அறிந்தவராயிருக்க, நமக்குத் தரும் பலன் தாம் அடைந்த பலனாயிருக்கத் தம் சித்தத்தின்படியே பாவசங் கீர்த்தனமில்லாமலும், பாவங்களைப் பொறுக்க வல்லவர் தாமே. அப்படி மதலேனம்மாளுக்கும், நல்ல கள்ளனுக் கும், பலருக்கும் பொறுத்தாரென்று அறிவோம். குருக்க ளோவெனில், சேசுநாதர் பலன்களைக்கொண்டு பொறுத்த தினாலேயும், அவர் வைத்த மனிதராக மாத்திரம் அந்த வல் லமை அடைந்ததினாலேயும், சேசுநாதர் கட்டளையிட்டபடி பாவங்களைப் பொறுக்கலாமொழிய, அவர் கட்டளையை மீறிச் செய்தால் அவர்களுக்குக் குற்றமாவதல்லாமல் நமக் குப் பாவப்பொறுத்தலாவதில்லை. சேசுநாதர் கட்டளை யிட்ட வகையோவெனில், தீர்வையிடும் முறையாகக் கொள்ள, அவர்கள் தப்பாத தீர்வையிடும்படிக்கு நன்றாய் அவனவன் செய்த பாவங்களை அறிந்து ஆராயவேண்டிய தல்லோ?
பல பாவங்களுக்காகவெனில், புறச் சாட்சியில்லாமை யால் அவனவன் தன் பாவங்களை ஒளியாமல், குருக்களுக் குச் சொல்லியல்லோ அறிவிக்கக் கடவான். இல்லா தாயின் குருக்கள் இந்தப் பாவம் பொறுக்கலாம், அது பொறுக்க லாகாதென்று தீர்வையிடுவதற்கு இடமில்லை. ஆகையால் இதில் சேசுநாதர் பாவசங்கீர்த்தனத்தைக் கட்டளையிட் டார் என்று சொல்லக்கடவோம். இந்தக் கட்டளையின்படி அர்ச். லூக்காஸ் என்பவர் அப்போஸ்தலர் நடபடி யாகமத் தின் 19-ம் அதிகாரம் 18-ம் வசனத்தில் எழுதின தாவது, அநேக கிறீஸ்துவர்கள் வந்து, தாங்கள் செய்த பாவங்க ளைச் செல்லிப் பாவசங்கீர்த்தனஞ் செய்துகொண்டு வந்தார் கள் என்றார். மீளவும் அர்ச் அருளப்பர் முதல் நிருபத் தின் முதல் அதிகாரம் 9-ம் வசனத்தில் சொன்ன தாவது: நாமே பாவசங்கீர்த்தனஞ் செய்தால் ஆண்டவர் தாம் தந்த வார்த்தைப்பாடுகளைச் செலுத்தும் நீதிபரனாகக்கொள்ள நம்முடைய பாவங்களைப் பொறுப்பார் என்றார்.
கடைசியில் தீர்வையிடும் முறையால் இந்தத் தேவத்தி ரவிய அநுமானம் உண்டாக்கப்பட்டமையால், இதில் ஆண் டவர் வைத்த மனிதராக நின்ற குருக்கள் கேட்ட பாவங்க ளுக்குத் தக்கதாய் ஓர் அபராதத்தைக் கட்டளையிட்டுத் தீர் வையிடவும், இட்ட அபராதத்தை நாமே தீர்க்கவுங் கடன் றானே. அபராதமில்லாவிட்டால் சகாய நன்றி செய்தார் கள் என்னலாமொழியத் தீர்வையிட்டார்களென்று சொல் லக்கூடாதே. இப்படி செய்த பாவங்களைத் தீர்க்கும் மருந் தாகவும், இனிச் செய்யாதபடிக்குக் காக்கும் வேலியாகவும், ஆண்டவர் கட்டளையிட்ட பாவசங்கீர்த்தனம் லுத்தேர் முதற்கொண்டு இந்நாட் பதிதர் முழுதும் மறுக்கமாட்டா மல் உண்டென்று சொன்ன பின்பு, முன் போட்டு அழிந்த அணை அறுத்தோடும் ஆறுபோலத் தடையொன்றின்றிப் பெருகின பாவ வெள்ளத்தில் தாங்கள் முழுகும்படிக்குப் பாவசங்கீர்த்தனமென்னும் பெயரிருக்க அது பாவத்துக் குச் செய்யுந் தடையும், நமக்குத் தரும் பலனுமில்லாததா கப் பல அபத்தங்களை நியமித்தார்கள். அதாவது :
இந்தத் தேவத்திரவிய அநுமானத்தில் ஆண்டவர் கட் டளையிட்ட முறை தீர்வையிடும் முறையல்லவென்றும், இதில் குருக்கள் பாவங்களைப் பொறுப்பவரல்லவென்றும், ஆண்டவர் முன் அவனுக்குத் தந்த பாவப்பொறுத்தலை இவர்கள் நமக்கு அறிவிப்பவர் மாத்திரம் என்றும், இனி நன்னெறியில் நாமே இடறாதொழுக உறுதி சொல்பவ ரென்றுஞ் சொல்லி, அதனால் அவனவன் செய்த பாவத் தைக் குருக்கள் அறியவுந் தேவையில்லை, மற்றவர்கள் அவர் களுக்குச் சொல்லவுந் தேவையில்லை என்பார்கள். அப்ப டியே தரங்கம்பாடியில் அச்சுப் பதித்த நற்கருணை ஆயத்த மென்னும் புஸ்தகத்தில் பல இடத் தெழுதினதாகக் கண்டோம்.
ஆகிலும் குருக்கள் இதில் பாவங்களைப் பொறுப்ப வரல்லவராகி, முன் ஆண்டவர் பொறுத்ததை அறிவிப்பவர் மாத்திரமானால், குருக்கள் பாவத்தைப் பொறுத்தோமென்று சொல்லுமுன்னே அந்தப் பாவம் பொறுக்கப்பட் டிருந்ததென்று சொல்லத்தகுமே. இப்படியாகில் நீங்கள் பொறுத்த பாவம் பொறுக்கப்பட்டிருந்ததென்னாமல், பொறுக்கப்படுமென்று சேசுநாதர் முன் சொல்லிக்காட் டின உதாரணத்தில் சொல்லுவானேன் ? பொறுக்கப்படு மென்றதினால் அப்போது தானே குருக்கள் பாவங்களைப் பொறுத்து, இட்ட தீர்வை ஆண்டவர் ஏற்றுக்கொண்டு தாமும் பொறுக்கிறார் என்று சொல்லக்கடவோம்.
மீளவுந் தீர்வையிட உத்தியோகத்தை இதில் குருக்க ளுக்குக் கொடாதே போனால், பாவங்களைப் பொறுக்கவும், பொறுக்காதிருக்கவுந் தந்த உத்தியோகமாவதென்ன ? இதுவுந் தவிர நீங்கள் பாவங்களைப் பொறுத்தால், பொறுக் கப்படுமென்று தெளிவாக சேசுநாதர் திருவுளம்பற்றின வசனமுள்ள அர்த்தத்தின்படியே கொள்ளாமல், பொறுப்ப தென்ற சொல் அறிவிப்பதென்றதாகக் கொள்ளுவானேன். வேதத்தில் எழுதப்பட்டதெல்லாந் தேவ வாக்கியங்களா கையால் ஓர் அக்ஷரங் குறைக்கவும், ஏற்றவும், திருகவும், மாற்றவும் நினைப்பதே தோஷமென்றும், அவைகளை முகத் தில் தோன்றின அர்த்தத்தோடு தலை பணிந்து ஒத்துக் கொள்ளக்கடவோமென்றும், பரம ஞானிகளைப்போல சொல்லிக்கொண்டு திரிகிறவர் இந்தப் பதிதர் தானே யல்லோ .
ஆகிலும் பொறுத்தல் என்பதும் அறிவித்தல் என்ப தும் பொறுத்தல் என்னுஞ் சொல்லுக்கு முகத்தில் தோன் றும் அர்த்தமோவென்ன? தானே தனக்கு இரு கண்களைப் பிடுங்கினாலும், தடவியாயினுங் காணப்படும் இந்த அபத் தத்தைப் பதிதர் மாத்திரங் காணாமலென்ன ? அவர்கள் அதைக் காணாததற்குள்ள நியாயம் நாமே சொல்லிக்காட்டு வோம். திருச்சபையில் சேசுநாதர் ஸ்தாபித்த முறைகளுக் குள்ளே நிறைவேற்றுதற்கரிய முறையிதுவே. குறையின்றி நிறைவேற்றினால், பாவங்கள் வராதபடிக்கு எல்லாத்திலும் மிகவும் உதவின முறையிதுவே.
ஆகையால் உயிரைக் கொன்று, பொருளைப் பறிக்குங் கள்ளனுக்கு இராச நீதி பொருந்தாதது போலவும், பாயுங் குதிரைக்குக் கடிவாளம் பொருந்தாதது போலவும், மதத்தைப் பொழியும் யானைக்கு அதனைத் தூணிற் கட்டின சங்கிலியும், நெற்றியில் நிறுத்தின அங்குசமும், பொருந்தாதது போலவும், அகன்ற வழியைத் தேடிச் சகல பாவங்களுக்கு ஒரு தடையில்லாதபடிக்குத் திருச்சபையினின்று பிரிந்த பதிதடுக்கெல்லாம் பாவசங்கீர்த்தனம் பொருந்தாமல், அதனை எல்லாரும் பகைத்து, மறுத்தது நியாயந்தானே. மற்றபடி பாவங்களை விட்டு, நன்னெறியொழுக ஆசையுள்ள யாவரும் அதற்கு இதுவே உத்தம வழியென்று ஆவலோடு தேடுவார்கள்.
அப்படியே நுரெம்பெர்க் பட்டணத்தார் லுத்தேர் மயக்கத்தில் அகப்பட்டுப் பாவசங்கீர்த்தன முறையை விட் டவுடனே அங்கே முன் காணாத அக்கிரமக் காம வகையும், தீராத பகை , பழி, கோபமும், மாறாத நிந்தை, களவு, கொலை மற்றப் பாவங்களும் ஒருங்குடன் திரண்டு கூடி, வெள்ளமாய் எங்கும் மூடினதைக் கண்டு, தாமே தம்மைப் பொறுக்க மாட்டாமல், நெடு நாள் வருந்தின பின்பு லுத்தேர் திறந்த வழியால் வந்து, மூடின கேடுகள் விலகும் உபாயங்களை நெடிதாய்த் தேடினபின்பு, பாவசங்கீர்த்தனம் ஒன்றே மீள வும் ஸ்தாபித்து, அதுவே அணையாக வைத்தால் வந்த கேடுகள் விலகிப் போய், பழையபடி மெய், தயை, தானம், கற்பு , நிறை, நீதி, நட்பு, தவம், மாட்சி மற்றப் புண்ணியங் கள எல்லாம் மீண்டும் வழங்குமென்று நிச்சயித்து தங் களை அக்காலத்தில் ஆண்ட இராயனாகிய ஐந்தாங் கற்லென் பவர் அண்டையில் ஸ்தானாபதிகளை விட்டுத் தங்களுக்கு வந்த கேடுகளும், அக்கிரமங்களும் விரிவாகச் சொல்லி, அதற்கு அவர் இரங்கிக் கட்டளையிட்டு, பாவசங்கீர்த்தன முறையை மீளவும் ஸ்தாபிக்கச் செய்யும்படி மன்றாடினார்கள்.