81.- மீளவும் அர்ச். சின்னப்பர் கொரிந்தியருக்கு எழுதின முதல் நிருபம் 3-ம் அதிகாரம் 10-ம் வசனந் துவக்கி எழுதினதாவது: சர்வேசுரன் எனக்குத் தந்த வரப்பிரசாதங்களினால் அறிந்த சிற்பாசாரியன் அடி அஸ்திவாரமிட்டேனல்லோ? நானிட்ட அஸ்திவாரஞ் சேசுகிறீஸ் துதானே. இந்த அஸ்திவாரமொழிய, எவராலும் வேறே இடவும்படாது. ஆகையால் மற்றவர் இந்த அஸ்திவாரத் தின்மேலே வேலை நடத்திக்கொண்டு வருவது சரிதானே. ஆகிலுந் தான் நடத்தின வேலை ஏதென்று அவனவன் பார்க்கக்கடவான். இந்த அஸ்திவாரத்தின் மேலே பொன், வெள்ளி, நவமணிகளைக்கொண்டு வேலை செய்தாலும்; மாம், வைக்கோல், செத்தைகளைக்கொண்டு வேலை செய்தாலும் தானே இனி வெளியாகும்.
அதேனென்றால் இது எல்லாவற்றையும் அக்கினியால் விளங்கும் ஆண்டவருடைய நாள் வெளியாக்குமே. அன்று தானே அவனவன் செய்த வினை எப்படிக்கொத்ததென்று அக்கினிதானே சோதித்துக் காட்டுமே. அன்று யாதாம் ஒருத்தன் வேலை அழியாதிருந்தால் அவனே பலன் அடை வான். வேறே யாதாம் ஒருத்தன் வேலை வெந்து அழிந் தால் சேதப்படுவானாயினும், அந்த வேலை செய்தவன் நெருப்பிலே நடந்தவனாகக் கரை ஏறுவான் என்று அர்ச். சின்னப்பர் இவை எல்லாந் திருவுளம்பற்றினார். அர்ச். சின்னப்பர் எழுதினதிலே சிலவைகள் எவருக்குங் கண்டு பிடிப்பதற்கு அரிதாமென்று அர்ச். இராயப்பர் எழுதினா ரல்லோ ? அவைகளுள் இப்போது சொன்ன வசனம் மிகவும் அரியதென்று அர்ச். அகுஸ்தீன் எழுதி வைத்தார். ஆகி லும் வே தபாரகர் எல்லாரும் இதிலே சொன்னதை ஆராய்ந்து அந்த வசனத்துக்குரிய அர்த்தத்தைக் காட்டப் பிரயாசப்படுவோம்.
ஆகையால் கொரிந்தியருக்கு உறுதிப்படும்படிக்கு உணர்ச்சிகளைச் சொல்ல அர்ச். சின்னப்பர் காட்டின உவமையாவது: முன் போட்டிருந்த நல்ல அஸ்திவாரத்தின் மேல் ஒருவன் நவமணிகளைப் பொன்னாலும், வெள்ளியா லும், இசைபடச் சேர்த்து சூழச் சுவர்களைக் கட்டி மேலே அவைகளால் வடிவாக மூடி , தான் உள்ளே வாழ்ந்திருக்க, வேறொருவன் அப்படிப்பட்ட நல் அஸ்திவாரத்தின் மேலே மரங்களால் சுவர்களை செய்து, வைக்கோலால் மூடி, தான் உள்ளே இருக்கச் செய்த இருவகை வீட்டில் ஒருவன் நெருப்பை வைத்தால், முன் சொல்லப்பட்டவன் வீடு அழி யாமலும், தான் வருந்தாமலும் வீற்றிருப்பானல்லோ ? மரத்தால் செய்யப்பட்ட வீடோவெனில், வெந்து அழிந்து முழுதுஞ் சேதமாய்ப் போகிறதுந் தவிர, அதிலே இருந்த வன் சாகாதபடிக்குச் சூழப்பற்றின நெருப்பிலே பாய்ந்து, நெருப்பினை மிதித்தோடி அங்கங்கே வெந்து போய் வருந் தின பின்பு பிழைப்பானொழிய, மற்றப்படி அல்லவென்று அர்ச். சின்னப்பர் உவமையாக மனிதருக்குச் சம்பவிக்குந் தன்மையைக் காட்டினார்.
ஆகிலும் இதில் அவர் சொன்னபடி அஸ்திவாரஞ் சேசுநாதர் தாமே. அவர் திருவுளம் பற்றின வேதந்தானே. அஸ்திவாரமிட்டவரோவெனில், அப்போஸ்தலர்களும் அவர்கள் வழியாகச் சத்தியவேதத்தைப் போதிக்குங் குருக்களும். இப்படி இவர்கள் சொன்ன உபதேசத்தினால் விசுவாசத்தோடு சத்தியத்தை கைக்கொண்டு, ஞானஸ் நானம் பெற்ற யாவரும் தங்களிடத்துச் சகல புண்ணியங் களுக்கு அஸ்திவாரமாக சேசுகிறீஸ்து நிற்பது நிச்சயந் தானே. அதன் பிறகு அந்த அஸ்திவாரத்தின் மேல் வீட் டைக் கட்டுகிறவர் ஆரெனில், அக்கியானிகளுமல்ல, பதித ருமல்ல. அவர்கள் கிறீஸ்துவை அநுசரியாததினாலும், இவர்கள் கிறீஸ்துவின் மெய்யான வேதத்தினின்று பிரிந்த தினாலும், அந்த அஸ்திவாரத்தை விட்டு நிலைகொள்ளாத மணல்மேலே வேலை செய்தவர்கள் என்னப்படுவார்கள். ஆகையால் அக்கியானிகளும், பதிதர்களும், பொறுமை காட்டினாலும், தானங் கொடுத்தாலும், தவஞ் செய்தாலும், பலன் ஒன்றின்றி அவை எல்லாம் அஸ்திவார மில்லாமை யால் தானே அழிந்து விழும் பொய்யான தருமங்களாகும் என்று வேத உதாரணங்களால் அறிகிறோம்.
ஆகையால் சேசுநாதர் ஸ்தாபித்த மெய்யான திருச் சபையில் உட்பட்டிருந்தவர் மாத்திரம் அந்த அஸ்திவாரத் தின் மேலே வீட்டைக் கட்டினவர் என்று சொல்லத்தகுமே. இவர்களுக்குள்ளேயும் விசுவாசம், நம்பிக்கை, பத்தி, பொறுமை, தவம், தானம் மற்றச் சுகிர்த நல்லறங்களை விடாமல், நன்னெறியில் நடந்து கொண்டவர் எல்லாரும் பொன் மணி வெள்ளிகளைக்கொண்டு அழியாத அரண்மனை களைக் கட்டினவராவார்கள். நெருப்புமுகத்தில் அழியும் மர வீட்டைக் கட்டி, வைக்கோலால் மூடினவர் யாரெனில், அவர்கள் கடைசியிலே நெருப்பு வழியாகப் போய், வருந் திக் கரை ஏறிப் பிழைப்பார்கள் என்று அர்ச். சின்னப்பர் சொன்னதனால் காமம், கோபம், ஆங்காரம் மற்றச் சாவான பாவங்களோடு செத்தவர்களல்ல என்று சொல்லக்கட வோம். அதேதெனில், சாவான பாவத்தைக் கொண்டு செத்தவன் முடியாத நரகத்தில் விழுந்து எந்நாளுங் கரை ஏற மாட்டான் என்று இந்நாட் பதிதர்களும் நம்மோடு சொல்லுகிறார்கள்.
ஆகையால் சேசுகிறீஸ்துவாகிய அஸ்திவாரத்தின் மேல் மரத்தாலும் வைக்கோலாலும் வீட்டை கட்டினவர் யாரெனில், சத்தியவேகத்தை அனுசரித்து, சாவான பாவங்களுக்கு இடங்கொடாமல், செவ்வழியில் இடறி அடிக்கடி அற்பப் பாவங்களைக் கட்டிக்கொண்டு வருகிறவர் என்று சொல்லக்கடவோம். ஆகிலும் இது ஞான வீடா கையால், அந்த அஸ்திவாரத்தின் மேல் அவனவன் செய்த வேலை இப்போது கண்ணாற் காணப்படாமல் , பூவுலகிற் செய்த அற்பத் தீவினை எல்லாஞ் சுட்டழிக்கும் நெருப்பி னால் விளங்கும். அதெப்படியெனில், தனித்தீர்வை நாளில் அவனவன் செய்த தீவினையும், நல்வினையுங் கர்த்தர் நீதி அக்கினிபால் சோதித்து ஆராய்ந்து, ஓர் அற்பக் குற்றக் கலப்பின்றி, பொன்னும் மணியுமாக நின்ற நல்வினை செய் தவர்கள் பலனை அடைய , மரமும் வைக்கோலுமாக வெந்து அழிந்து அற்ப தீவினை செய்தவர்கள், அந்த வினையால் ஒரு பிரயோசனமும் அடையாமல், அவைகள் முழுதும் வேகக் காண்பார்கள். தாங்களோவெனில் சாவான பாவமின்றி, இஷ்டப்பிரசாதத்தோடு செத்ததினால் கரை ஏறுவார்கள்.
ஆயினும் முன்னே நெருப்பிலே நடந்து போனாற் போல உத்தரிக்கிற ஸ்தலத்தில் அநேக நாள் வருந்தின பின்பு கரை ஏறுவார்களொழிய, மற்றபடியல்ல. இதுவே அர்ச் சின்னப்பர் திருவுளம் பற்றின தற்குரிய அர்த்தமாமே. ஆகையால் இந்நாட் பதிதர் வேண்டாமென்றாலுஞ் சாவான பாவங்களொழிய தேவ இஷ்டப்பிரசாதத்தைப் போக்கடி யாத அற்ப பாவங்கள் உண்டென்றும், அந்தப் பாவங்க ளோடு செத்தவன் உத்தரிக்கிற ஸ்தலத்தில் கிடந்து நெருப் பினால் சுத்தனாகி, மோக்ஷ கரை ஏறுவான் என்றும் வேதத் தில் சொல்லப்பட்டது நிச்சயந்தானே. இப்படியே அர்ச். தெயொபிலும், எரோணிமுசும், அகுஸ்தீனும், தேயோ தொரெத்து மன்றி, முதல் 500 வருஷத்தில் பதிதர் சொன் னபடி திருச்சபை வழுவாதிருக்கையில் வழங்கின அநேக வேதபாரகர், இந்த அர்ச். சின்னப்பர் வசனத்துக்கு அர்த் தஞ் சொல்லி, உத்தரிக்கிற ஸ்தலம் உண்டென்று ஸ்தாபித் தார்கள்.
82:- இது அளவின்றி விரியுமென்று அஞ்சி, உத்த ரிக்கிற ஸ்தலம் உண்டென்று ஒப்பிப்பதற்குள்ள இத்தகை ப்பட்ட பற்பல வேத உதாரணங்களை எடுத்துக்காட்டாமல் சொன்னது போதுமென்றிருக்கிறோம். இதுவுந் தவிர, வே தத்தில் இதற்கு உதாரணங்கள் இல்லாதாயினும், முன் சொன்னபடி அப்போஸ்தலர் நாளில் இருந்தவர்கள் துவக்கி இந்நாள் வரைக்கும் வழங்கின வேதபாரகர் எல்லாரும், செத்தவர்களுக்காக வேண்டிக்கொள்வது திருச்சபை முறைமை என்று எழுதி, அதனை மறுத்தவர் ஒருவரும் இல்லாமையால், அப்போஸ்தலர் படிப்பினையால் துவக்கித் திருச்சபையில் வழங்கின முறை இது என்று சொல்லக்க டவோம். ஆயினும் உத்தரிக்கிற ஸ்தலம் இல்லா தாயின் செத்தவர்களுக்காகச் செய்த வேண்டுதல் அபத்தமாமே.
ஆகையால் செத்தவர்களுக்காக வேண்டுவது அப்போ ஸ்தலர் படிப்பினையால் வந்த திருச்சபை முறையாகக் கொள்ள, உத்தரிக்கிற ஸ்தலம் உண்டென்று அப்போஸ் தலர் படிப்பித்த விசுவாசமாமே. இந்த முறையின் பழமை உச்சிப்பகலினும் விளங்கினதினால், கண் மூடின பதிதரும் அதனைக் கண்டு, மறுக்கமாட்டாமற் போனார்கள். அப்ப டியே பதிதனாகிய பெதுருமாற்தீர் என்பவன் முன் சொன்ன அர்ச். சின்னப்பர் அதிகாரத்திற்கு வியாக்கியானஞ் செய்த புஸ்தகத்தில் எழுதின தாவது: திருச்சபை எப்போதுஞ் செத்தவர்களுக்காக வேண்டிக்கொண்ட முறையை எங்க ளுக்குச் சொல்லி வருகிறார்கள். இது மெய்தானே என் றான். கல்வீனோவென்றால், கற்பனைகளின் 3-ம் காண்டம் 5-ம் அதிகாரம் 10-ம் பிரிவிலே சொன்ன தாவது: இதற்கு முன்னே 1300 வருஷந் துவக்கிச் செத்தவர்களுக்கு வேண் டிப் பிரார்த்தித்துக்கொள்ளுவது நடந்த முறைதானே.
ஆகிலும் முன்னிருந்த எல்லாரும் இடறித் தப்பித மாய் நடந்ததை சொல்லுகிறேன் என்றான். அப்படியே அப்போஸ்தலர் நாள் முதற்கொண்டு சகல நூலினுந் தேர்ந்து, சகல வரத்திலும் விளங்கி , தவத்தில் வழுவா மல் இருந்த வேதபாரகர் எல்லாரும் ஒருவரும் மறுத்துச் சொல்லாமல், ஒரு மொழியாய்த தெளிந்து, நிச்சயமாகச் சொன்னது தப்பிதமாகிக் கல்வீன் லுத்தேர் ஒவ்வொரு வன் தன்னோடு ஒவ்வாமல் சொன்னது மாத்திரம் சத்திய வேதமாமோ? மீளவுங் கர்த்தர் திரு அவதாரஞ் செய்த 354-ம் ஆண்டில் இருந்த அயெரி என்பவன் மாத்திரஞ் செத்தவர்களுக்காகச் செய்த வேண்டுதல் பலன் இல்லா தது என்றான். ஆகிலும் உடனே அவனைப் பதிதன் என்று அக்காலத்திலிருந்த வேதபாரகர் கண்டித்துத் தள்ளினார்கள்.
அப்படியே லுத்தேருக்குப் பிரியமான சீஷனாகிய பிலிப்பு மேலந்தோன் என்பவன் எப்பொலோசிய என் னும் புஸ்தகத்திலே 12-ம் பிரிவில் எழுதி வைத்ததாவது: செத்தவர்களுக்காகச் செய்த வேண்டுதல் பலன் இல்லா தது என்று அயெரி என்பவன் சொன்னதாக எப்பிப்பானி என்பவர் சொல்லி, அவனைக் கண்டிக்கிறார். நாங்களும் இதிலே அயெரி என்பவனோடு கூடினதல்லவென்றான். ஆகையால் லுத்தேரானிகளும் செத்தவர்களுக்காக வேண் டுவது நல்லதென்றும், அந்த வேண்டுதல் செத்தவர்களுக்கு உதவியாகுமென்றும், அயெரியோடு கூடாதபடிக்குச் சொல்லக்கடவார்கள். அதன் பின்பு உத்தரிக்கிற ஸ்தலம் இல்லை என்று வெட்கமில்லாமல் சொல்லுவானேன் ? ஆகி லும் இன்று சொன்னதை நாளை மறுத்து, விபரீதமாய்ச் சொல்வது எப்போதும் பதிதர்களுக்குள்ள முறைதானே.
லுத்தேர் என்பவன் ஒவ்வாத விபரீதங்களைக் கூசா மல் சொல்லுகிறதில் மாத்திரம் எப்போதுந் தன்னோடு ஒத் தவனாகிக் காற்று முகத்தில் ஆடின கொடியைப் போலவும், கள்ளுண்ட வெறியால் பிதற்றின பித்தனைப்போலவும், பொங்கின அலையோடு தளம்பிச் சுழலா நிற்குஞ் சுக்கானில் லாத படகு போலவும், தன் நினைவில் ஒரு நிலை காணாமல் இதிலேயுஞ் சொன்ன விபரீதங்கள் மெத்த உண்டாம். முந்தி முந்தி லிப்பிசிக் தர்க்கத்தில் லுத்தேர் சொன்னதா வது : உத்தரிக்கிறஸ்தலத்தை உறுதியாய் விசுவசிக்கிறவனு மாய், அது உண்டென்று நன்றாய் அறிந்தவனுமாய் இருக் கிற நான், வேதத்தில் இதற்கேற்ற உதாரணங்கள் உண் டென்று எளிதாய் ஒத்துக்கொள்ளுகிறேன் என்றான்.
அதன் பிறகு, விபரீதமாய்ச் சொல்லி, உத்தரிக்கிற ஸ்தலம் உண்டென்று வேத உதாரணங்களினால் ஒப்பிக்கப் படாதென்றான். 2-வது. அங்கே கிடக்கும் ஆத்துமங்கள் இனி கரை ஏறுவதென்று அறியார்கள் என்றான். 3-வது. அங்கே இருக்குந்தனையுந் தங்கள் பலன் வளரவுங் குறைய வுஞ் செய்ய வல்லவை என்றான். 4-வது. ஓயாமல் அங்கே அந்த ஆத்துமங்கள் சாவான பாவங்களைச் செய்து கொண்டு வருவது என்றான். 5-வது. திருச்சபை வேண்டுதலினால் தம் வேதனை குறைந்து சீக்கிரமாய் மோக்ஷத்திற் சேரும் ஆத்துமங்களுக்கு மோக்ஷ பாக்கியமுங் குறையுமென்றான். இது எல்லாம் விபரீதமாய்ச் சொன்ன தப்பிதங்களாயினும், உத்தரிக்கிறஸ்தலம் உண்டென்றும், முந்தி நிச்சயித்த தல்லோர் இது எல்லாஞ் சொல்லுவதற்கு இடம் உண்டா கும்படியே உத்தரிக்கிறஸ்தலம் உண்டென்று உரோமான் திருச்சபையை விட்டுப் பிரிந்த பின்பும் லுத்தேர் நெடுநாள் நிச்சயமாய்ச் சொன்னபோதிலும், உரோமான் திருச்ச பைக்கு விரோதமாக மோக்ஷமும், நரகமும் அல்லாமல் உத் தரிக்கிறஸ்தலம் ஒன்றில்லை என்று தனிப் பூசை விலக்கும் புஸ்தகத்தில் எழுதிச் சலஞ் சாதித்து, வெட்கமில்லாமல் ஸ்தாபித்தான்.
அப்படியே இந்நாட் பதிதர் எல்லாரும் இந்த தேவ சத்தியத்தை மறுத்து லுத்தேரோடு ஒத்தவர்களாய் உத்த ரிக்கிறஸ்தலம் இல்லை என்கிறார்கள். இதற்குச் சொல்லும் நியாயம் ஏதெனில், அர்ச். மத்தேயுஸ் எழுதின சுவிசேஷத் தின் 25-ம் அதிகாரம் 46-ம் வசனத்தில் சேசுநாதர் திரு வுளம் பற்றின தாவது: பாவிகள் முடியாத ஆக்கினை அநுப விக்கப் போய், நல்லவர்கள் நித்திய சீவியத்தை அடைவார் கள் என்றார். அப்படிப் பற்பல இடத்தில் வேதத்தில் எழு தப்பட்டமையால் மோக்ஷமும் நரகமுமொழிய, செத்த வர்கள் சேரும் வேறு இடம் இல்லை என்பார்கள். ஆகிலும் அதில் சேசுநாதர் நடுத்தீர்க்கிற காலத்து வர்த்தமானத் தைச் சொல்லிக்கொண்டு வந்ததினால் அவர் திருவுளம் பற் றின் வாக்கியத்தால் நடுத்தீர்வைக்குப் பிறகு, மோக்ஷமும் நரகமுமொழிய, உத்தரிக்கிற ஸ்தலம் இல்லை என்று சொல் லத்தகும்.
ஆகிலும் நடுத்தீர்வைக்கு முன்னே உத்தரிக்கிற ஸ்த லம் உண்டென்று வேத உதாரணங்களால் ஒப்பித்தோ மல்லோ ? மீளவும் பதிதர் சொல்லும் நியாயமாவது: அர்ச். லூக்காஸ் சுவிசேஷத்தின் 23-ம் அதிகாரம் 43-ம் வசனத் தில் நல்ல கள்ளனுக்கு சேசுநாதர் திருவுளம்பற்றின தா வது: இன்று நம்மோடு மோக்ஷத்தில் இருப்பாய் என்றார். மரண பரியந்தம் பாவியாய் நடந்த கள்ளன் சாகும் போது மாத்திரம் மனந்திரும்பி உத்தரிக்கும்படிக்கு அபராதக் கடன் அவனுக்கு இல்லாதபோது எவர் உத்தரிக்கிற ஸ்தலத்தில் கிடக்கக்கடவார்கள்? என்றார்கள்.
ஆகிலும் அப்போஸ்தலர் முதலாய் சேசுநாதரைக் கைவிட்டபோது அந்தக் கள்ளன் அவரை அறிந்த விசுவா சமும், எல்லாருங் கேட்க அவரைத் துதித்த துணிவும், தன் பாவங்களுக்காகப் பட்ட உத்தம மனஸ்தாபமிகுதியும், கடின மரணத்தை அனுபவித்த பொறுமையும், தாழ்ச்சியும், மற்றப் புண்ணியங்களும் ஒருங்குடன் அந்த நல்ல கள்ளனி டத்தில் இருந்த உத்தம மேரையால் சேசுநாதர் அவனு டைய பாவ தோஷங்களைப் பொறுத்ததுமன்றி, அபராதக் கடனை முழுதும் பொறுத்து அன்று தானே அவனுக்கு மோக்ஷத்தைத் தந்தார். ஆகிலும் எல்லாப் பாவிகளுக்கும் இப்படியாகும்படிக்கு எல்லாரிடத்திலும் இப்படிப்பட்ட புண்ணியங்களும் அந்தப் புண்ணியங்கள் இருக்க மேலான தன்மையும், எப்போதுங் கிடைக்குமோ வென்ன?
இதுவுந் தவிர, முன் நான் சொன்னபடி பொது முறையால் ஆண்டவர் என் பாவ தோஷத்தைப் பொறுக்கும் பொழுதில் அபராதக் கடனை முழுதும், எப்போதும் பொறுப்பவரல்ல. ஆகிலும் விசேஷ தயையால் ஓரோரிடத் தில் தமது அளவில்லாத நீதி ஞானத்தின்படியே ஒருத்த னுக்கு அபராதக் கடன் எல்லாம் ஒருமித்துப் பொறுத்தா லுமென்ன? ஆண்டவர் ஒருமுறை ஒருவருக்கு இரங்கிச் செய்த விசேஷ சகாயம் எவருக்குஞ் செய்யத்தகும் முறை என்னலாமோ? ஒரு முறை அற்புதமாய்ச் சம்பவித்தது எப்போதும் முறையோடாகுமென்றால், ஒரு முறை ஒரு கழுதை பேசினதைக் கண்டால் மற்றக் கழுதைகளும் பேசு மென்று பதிதர் நினைப்பார்களாக்கும். அப்படியானால் மோயீசன் எழுதின 4- ம் ஆகமத்து 22- ம் அதிகாரம் 28-ம் வசனத்தில் ஒரு கழுதை வாய் திறந்து பேசிப் பலாம் என்பவனுக்கு உணர்ச்சிகளைச் சொல்லி அவன் சாகாதபடிக்கு அவன் உயிரைக் காத்ததென்று வாசித்ததினால் பதி தர் எல்லாருந் தங்களுக்கு ஒரு கழுதையைத் தேடித் தங்க ளுக்கு அதுவே மந்திரியாகவும், தம் உயிர்க் காவலாகவும் வைத்துக்கொள்ளக் கடவார்கள்.
இன்றைவரைக்குஞ் சுலபமாய் இங்கே நான் சொல் லிக் காட்டின நியாயங்களைச் சலஞ் சாதியாமல் ஆராய்ந்து பார்க்கில் உத்தரிக்கிற ஸ்தலமும் உரோமான் திருச்சபை சொன்னபடி உண்டென்பது வேதத்தில் ஊன்றிச் சந்தேக மற விளங்கி விசுவசிக்கத் தகுஞ் சத்தியமென்று நல்லறிவு டைய யாவரும் எளிதாய்க் கண்டு சொல்லக்கடவார்கள். ஆகிலும் இன்னம் உத்தரிக்கிற ஸ்தலம் இல்லை என்று யாதா மொருத்தன் சாதித்தால் அவனுக்கு நரகமேயொழிய, உத் தரிக்கிற ஸ்தலம் இல்லை என்பது நிச்சயந்தானே.