நமது ஆண்டவருக்கும் நமக்குமிடையில் விளங்கும் ஆழ்ந்த ஐக்கியத்தை நமக்குத் தெளிவாக எடுத்துக் காண்பிக்க அவரே முந்திரிகைச் செடிக்கும் அதன் கொடிக்குமிடையே இருக்கும் ஐக்கியத்தை உதாரணமாகக் கையாளுகிறார்; ''நான் திராட்சைச் செடி, நீங்கள் அதன் கொடிகள்' என்று அவரே கூறியுள்ளார் (அரு. 15. 5.)
இதனை நன்கு விளங்க வைப்பதற்கு, அப்போஸ்தலரான அர்ச். சின்னப்பர் மற்றுமொரு சிறந்த உதாரணத்தைத் தருகிறார். கிறிஸ்துவின் இதே கருத்தை சர்வேசுரன் தம் வாழ்வில் நமக்கு மிகவும் நெருங்கிய விதத்தில் பங்கு தருகிறார் என்ற உண்மையை மனித சரீரத்தில் சிரசுக்கும் ஏனைய உறுப்புகளுக்குமிடையே விளங்கும் ஐக்கியத்தை உதாரணமாகத் தருகிறார். கிறீஸ்துவை சிரசுக்கும், மனிதர்களை ஏனைய உறுப்பு களுக்கும் ஒப்பிடுகிறார்.
மனித சரீரத்தைப் பாருங்கள். பல உறுப்புகளைக் கொண்டுள்ளது. அவற்றில் சில , உயிர் நிலையானவை, உயிர் வாழ இன்றியமையாதவை, சில அவ்வளவு அத்தியாவசிய மானவை அல்ல. தலை, இருதயம், நுரையீரல்கள், உயிர் நிலையான உறுப்புகள் - அதாவது மனிதன் உயிர் வாழ்வதற்கு அவை இருந்தாக வேண்டும். கை, கால்களிலுள்ள விரல்கள், கரங்கள், பாதங்கள் முதலியன உயிர் நிலையானவை அல்ல.
அவைகள் இல்லாமல் உயிர் வாழலாம்; ஆனால் நல்ல விதமாய் வாழ முடியாது. அவை உயிர் நிலையானவையா யிருந்தாலும், மற்றப்படியிருந்தாலும், இவ்வுறுப்புகள் அனைத்தையும் இயக்கிச் செயல்படச் செய்வது தலை மட்டுமே.
(1) சகல புலன் உணர்வுகளுக்கும் இருப்பிடமாக சிரசு விளங்குகிறது. சரீரத்தின் மற்ற பாகங்களுக்கு ஸ்பரிசம் உணர்வு மட்டுமே உண்டு. சரீரத்திலுள்ள நரம்புகள் எல்லாம் சிரசிலிருந்து புறப்பட்டு, மற்றப் பாகங்களை அடைந்து, அவைகளுக்கு உணர்வையும் செயல்படும் சக்தியையும் தருகிறது (எண் 37).
(2) சரீரத்தின் கம்பீரமுள்ள (அரச) கோட்டை போன்று சிரசு விளங்குகிறது. மேலான ஆற்றல் படைத் துள்ள தலை, ஏனைய உறுப்புகளைத் தன் கண்காணிப்பில் வைத்து, அவற்றைச் செயல்படச் செய்து, அவற்றை வழிநடத்துகிறது (எண் 36). அதே போல், கிறிஸ்துவே சகல ஞான ஆற்றல்களுக்கும், சக்திகளுக்கும் இருப்பிடமாயிருக் கிறார்; அவரிடமிருந்தே அவருடைய அங்கங்கள், அதாவது அவருடைய திருச்சபையில் இருப்பவர்கள் தங்களுக்குத் தேவையான ஞான பலத்தை அடைகின்றனர்.
(3) தம்மில் நிறைந்திருக்கும் தெய்வ உயிரைத் தம் அங்கங்களுக்கு அளித்து, அதன் மூலம் அவர்கள் சுபாவத் திற்கு மேலான வரப்பிரசாத ஜீவியத்தில் உணர்வு பெறவும், செயல்படவும் சக்தி தருகிறார். அதனால்தான் அர்ச். அருளப்பர், "அவருடைய சம்பூரணத்திலிருந்து அருளுக்கு மேல் அருளைப் பெற்றுக் கொண்டோம்'' என்கிறார் (அரு.1:16). அவர்மேல் விசுவாசம் கொண்டவர்களின் உள்ளங்களை ஒளிபெறச் செய்யும் ஞான ஒளி அவரிட மிருந்தே வருகிறது. அவர்களைப் பரிசுத்தப்படுத்தும் சகல வரப்பிரசாதமும் அவரிடமிருந்தே வருகிறது. இவ்வாறு, அவர் தம் சரீரத்தின் பற்பல அங்கங்களையும் இயக்கிச் செயல்பட வைக்கிறார்.
அர்ச். சின்னப்பர் கிறிஸ்துவின் சரீரம் எனக் குறிப்பிடும் படிப்பினையின் சாரம் இதுவே. இதனையே கிறீஸ்துவின்ஞான சரீரம் எனவும் குறிப்பிடுகிறோம்.
இதுவே சர்வேசுரன் தம் வாழ்வினின்று நமக்கு வாரி வழங்கத் தெரிந்து கொண்ட தெய்வீகத் திட்டம். விசுவாசிகள் அனைவரையும் உடலாகவும், தன்னையே அதன் சிரசாகவும் அமைத்துத் தம் திருச்சபையை உயிருள்ள ஞான சரீரமாக அமைத்துள்ளார். மனித சரீரம் உயிருள்ள பொருளா யிருப்பது போல், கிறிஸ்துவும் அவரில் விசுவாசம் கொண் டுள்ளவர்களும் தெய்வீக உயிரைக் கொண்டுள்ள ஞான சரீரமாக விளங்குகின்றனர். சர்வேசுரனிலும், கிறிஸ்துவிலும் உள்ள உயிர், அதன் அங்கங்கள் அனைத்திலும் மேவி நிற்கின்றது. நாம் மட்டும் தெய்வ வாழ்வில் பங்குகொள்ளப் பேராவலுடன் இருந்தால், சர்வேசுரன் தம் வாழ்வில் ஏராளமாய்ப் பங்கு அருள்வார் என்பது இதிலிருந்து தெளி வாகிறது. மேலும் சர்வேசுரனுடைய அதிசய அமைப்பான ஞான சரீரம் கடவுளின் நியமனத்தில் எவ்விதம் இடம் கொண்டுள்ளது என்பதையும் ஓரளவு கண்டு கொள்கிறோம்.
✠ காலத்தால் அழிந்துகொண்டிருக்கும் கத்தோலிக்க இலக்கியங்கள், புத்தகங்கள், செபங்களை பாதுகாப்பதே இந்த இணையதளத்தின் நோக்கம் ✠ கத்தோலிக்கத்தின் பாரம்பரியம் காப்போம் ✠
- 🏠 முகப்பு பக்கம்
- திருப்பலி
- திவ்விய நற்கருணை
- பரிசுத்த வேதாகமங்கள்
- வேதாகமங்கள் அப்ளிகேஷன்
- தேவமாதா
- புத்தக அப்ளிகேஷன்
- YouTube
- கூகிள் பிளே ஸ்டோர்
- தேவமாதா சர்வதேச வானொலி
- வானொலி அப்ளிகேஷன்
- ஆலயம் அறிவோம்
- செபங்கள்
- தவக்காலம்
- புனிதர்கள்
- பாடல்கள்
- ஞானோபதேசம்
- Kilachery Parish
- இசைத்தட்டு
- English Books
- Disclaimer
- Contact Us
- Donation
போதகம் 4 எவ்வாறு சர்வேசுரன் தம் பரிபூரண வாழ்வில் நாம் பங்குபெறச் செய்கிறார்? தொடர்ச்சி
Posted by
Christopher