25. வழக்கமாய் கடவுளைச் சிநேகிப்பதற்கு நாம் செய்ய வேண்டிய தென்ன ?
குறிப்பிட்ட வேளைகளில் அவரை ஆராதித்து வணங்கி (வழிபாடு செய்து) எப்போதும் அவருடைய கட்டளைகளை அனுசரித்து வருவதே அவரைச் சிநேகிப்பதற்கான வழி யாகும்.
26. அவரை ஆராதிப்பது எப்படி?
வியப்புடன் அவரைப்பற்றிச் சிந்தித்து. துதித்து கொண்டாடி, அவர் நமக்குச் செய்துவரும் நன்மைகளுக்காக அவருக்கு நன்றி செலுத்தி, நமக்குத் தேவையான உதவி சகாயங்களை அவரிடமிருந்து மன்றாடு தலாகும்.
27. இவ்விதம் நாம் எப்போது செய்தல் தகுதியாகும்?
பிறரோடு சேர்ந்து சில சமயங்களில் பகிரங்கமாகவும், வேறு சமயங்களில், தனித்து நாமாகவும் செய்வதுண்டு.
28. பகிரங்கமான ஆராதனை எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்?
எந்த வகையில் அது தகுந்ததும், உண்மையானதும், கடவுளுக்குப் பிரியமானதும் என்று நாம் நம்புகிறோமோ, அந்த முறையில் அதைச் செய்தல் வேண்டும்.
29. தனி ஆராதனை எப்போது செய்யவேண்டும்?
நாம் நித்திரையை விட்டு எழுந்திருக்கும் போதும். படுக்கப்போகும் போதும், துன்பம் சோதனை நேரிடும் சமயங் களிலும் இறைவனை ஆராதித்து, ஜெபித்தல் வேண்டும்.
30, நாம் நெடுநேரம் ஜெபம் செய்தல் அவசியமா?
இல்லை. கவனக் குறைவாகவும், பழக்கத்தை முன் னிட்டு நெடுநேரம் ஜெபிப்பதைவிட, கவனத்தோடும், சிநேகப்பற்றுதலோடும், சிறிது நேரம் கடவுளைப்பற்றி தியானிப்பது சிறந்த ஜெபமாகும்.
31. நமது ஜெபங்களில் நாம் சொல்லத்தக்கது என்ன ?
நமது ஜெபங்களில் பின்வருமாறு சொல்லலாம் :
(1) என் சர்வேசுரா! நீர் சர்வ நன்மைத்தனமுள்ள வரும், எனக்கு நன்மை புரிகிறவருமாயிருக்கிறதனால், உம்மை நான் விசுவாசித்து, நம்பி. சகலத்தையும் விட உம்மையே நேசிக்கிறேன்.
(2) ஆ! என் தேவனே, நான் உம்மை ஆராதித்து வணங்கி நமஸ்கரிக்கிறேன். எனக்குத் தேவையான காரி யங்களை எனக்குத் தந்தருளும்.
(3) ''காலையில், விசேஷமாய் இந்த நாளில் நான் என் கடமையைச் செய்து, சகல சோதனைகளையும் ஜெயித்து பாவத்தை விலக்கும்படி எனக்கு உதவி செய்யும்" - என்று சொல்லுதல் சிறப்புடைமையாகும்.
இரவில் சொல்லத்தக்கது:- 'இன்று எனக்குச் செய்த உபகாரங்களுக்கு நன்றியறிந்திருக்கிறேன்''
பாவத்தில் தவறி விழுந்துவிட்டால் :- ''என் பாவங் களுக்காகத் துக்கப்படுகிறேன். இனிமேல் அவற்றைச் செய்வதில்லையென்று பிரதிக்கினை பண்ணுகிறேன். நான் செய்த பாவங்களை மன்னித்து, இனிமேலாக அவற்றைச் செய்யாதபடி எனக்கு உதவி புரிந்தருளும்" என்பதைச் சேர்த்துச் சொல்லலாம்.
(4) பாவச் சோதனை நேரிடும்போது:- ''நான் உனக்கு உகந்த பிள்ளையாயிருக்க உதவி புரியும் ; இந்தப் பாவத்தில் விழாதபடி, என்னைத் தற்காத்தருளும் " - என்று மன்றாடி, உன் மனதை உறுதிப்படுத்தி, பாவத்திற்குக் காரணமானதை விட்டுவிலகி, வேறு ஏதாவது செய்வதில் ஈடுபட வேண்டும்.
நித்திரை போகுமுன் உள்ளப் பரிசோதனை செய்வது மிகவும் பிரயோஜனமானது. நம்மிடமுள்ள தீய மாட்டங் களின் மேல் வெற்றி கொள்ளவும், தீய வழக்கங்களை நீக் கவும், புண்ணியக் கிரிகைகளைச் செய்யவும், நமது தினசரி அலுவல்களைச் சரிவரச் செய்து வரவும், இந்தப் பயிற்சி மிகவும் சிறந்த வழியாகும். ஆகிலும் நாம் செய்த குற்றங் குறைகளைக் கண்டுபிடிப்பது மட்டும் போதாது. உள்ளப் பரிசோதனையால் மெய்யான பலன் அடைய வேண்டுமாகில் நம்மிடம் இருப்பதாக, நாம் கண்டுணர்ந்த குற்றங்களை அரு வருத்து. அவற்றை இனி மேல் செய்வதில்லை யென்கிற உறுதியான தீர்மானம் செய்து கொள்ள வேண்டும்.
32. கடவுளுக்குக் கீழ்ப்படிந்து ஊழியம் செய்ய வேண்டும் என்கிற கடமை எதில் அடங்கியுள்ளது?
சகல பாவங்களையும் விலக்கிக் கடவுளுக்கும், பிறருக்கும் நமக்கும் உரித்தானதைச் செய்வதில் இந்த கடமை அடங்கி இருக்கிறது.
33. கடவுளைப் பற்றிய அறிவு என்பதின் அர்த்தமென்ன?
(1) இறைவனது தன்மை , இலட்சணங்கள்.
(2) அவருக்கும், நமக்கும் உள்ள உறவு; இதுவரை அவர் நமக்குச் செய்திருப்பவை, இப்போது நமக்கு செய்து வருபவை, நாம் இறந்தபின் நமக்கு அவர் அளிக்க இருக் கும் சம்பாவனை.
(3) நமக்கு அவர் கொடுத்திருக்கும் ஜீவியத் திட்டம் அதை அனுசரிக்க அவர் காட்டியுள்ள வழிவகைகள், அவற் றைச் செயல்படுத்தும்போது நமக்கு அதில் உதவி செய்ய அவர் நியமித்துள்ள ஆட்கள், அதை அனுசரியாவிட்டால் நமக்கு வரும் நஷ்டம், அனுசரித்தால் நாமடையும் லாபம் முதலியவைகளைப் பற்றி நாம் திட்டவட்டமாகவும், தெளி வாகவும் தெரிந்து கொள்ள வேண்டியவைகளே கடவுளைப் பற்றிய அறிவு எனப்படும்
34. கடவுள் நமக்குக் கொடுத்துள்ள ஜீவியத் திட்டம் யாது?
அறமுறைக்கும் நல்லொழுக்கத்துக்கும் அடிப்படை யான பத்து விதிகளைக் கொடுத்துள்ளார். இவைகள் பத்து கற்பனைகள் என்று சொல்லப்படும். அவையாவன;
(1) கடவுள் ஒருவரே, பல கடவுள் இருக்கக்கூடாது.
(2) இறைவனின் திருநாமத்தை வீணிலே உபயோ கம்செய்து. ஆணையிடல், பொய்ச் சத்தியம் செய்தல் கூடாது.
(3) கடவுளுக்காகவும். அவரது ஆராதனை முதலிய வற்றிற்காகவும் குறிப்பிட்ட நாட்களை ஒதுக்கி, அவற்றில் இறைவனது சேவைக்கானவற்றைச் செய்து வர வேண்டும்.
(4) மாதா பிதாவை சங்கித்து வணங்க வேண்டும்.
(5) கொலை செய்யக் கூடாது.
(6) மோக பாவம் செய்யக் கூடாது.
(7) திருடக் கூடாது.
(8) பொய்ச்சாட்சி சொல்லக் கூடாது.
(9) பிறன் மனைவியை விரும்பக் கூடாது.
(10) பிறர் உடைமையை விரும்பக் கூடாது.
35. கடவுள் நமக்குக் காட்டியுள்ள வழிவகைகள் யாவை?
(1) பெரியோர்களின் அறவுரை, அறிவுரைகளும்
(2) உண்மையை விளக்கும் நூல்கள். (3) நம்முடன் வாழும் நல்லோரின் நன்மாதிரிகை முதலியன.
36. நமக்கு உதவி செய்யும்படி இறைவன் நியமித்துள்ள மக்கள் யாவர்?
(1) மெய்மறைப் போதகர்கள்.
(2) துறவிகள், (கன்னியர், சந்நியாசிகள்)
(3) ஒழுக்க நலம் வாய்ந்த பெற்றோர், ஆசிரியர்கள்.
(4) நீதியும், நேர்மையுள்ள நாட்டுத் தலைவர்கள்
(5) நமது நன்மையைத் தேடும் நண்பர்கள்
ஆகியவர்களை இறைவன் நமக்கு உதவி செய்யும்படி நியமித்துள்ளார்.
37. கடவுளை நேசிப்பது என்றால் என்ன?
இறைவனது சட்டத்தை நுணு நுணுக்கமாக அனுசரிக்க ஆர்வத்துடன் விரும்புதல், அதை அனுசரியாதபோது, அதற்காக வருந்துதல், அனுசரிக்கும் போது மன நிறைவு கொள்ளுதல் ; அவரைப்பற்றியும், அவர் படைத்துள்ள பொருட்களைப் பற்றியும், அவரது செயல்களைப்பற்றியும் அவரை மற்றவர்கள் சங்கித்து வழிபடுதலைக் காணும் போதும் கிழ்ச்சி அடைவது; அவரது ஆசீரையும், நெருங்கி ஒன்றிக்கும் நிலையையும் பெற முயற்சிப்பது. கடைசியாக அவரை முகமுகமாய் தரிசித்துப் பேரின்பமடைய துடிக்கும் உள்ளத்தோடு ஆசிப்பது ஆகியவை கடவுளை நேசிப்பவர்களிடம் காணக்கூடிய குணங்களாகும்.
38. கடவுளை சேவிப்பது என்றால் என்ன?
கடவுளது சேவையில் தன்னை முழுவதும் அர்ப்பணிப் பது. நாம் அவரை அறிந்துள்ளவரை அவரை ஆராதிப்பது. அவரிடமிருந்து பெற்றுக்கொண்ட நன்மைகளுக்கு நன்றி கூறுவது. நமக்குத் தேவையானதை, பிள்ளைக்குரிய வாஞ்சையுடனும், பணி வனபுடனும் அவரிடம் கேட்பது: அவரைப் பிறர் அறிந்து சிநேகிக்க ஆவலுடன உழைப்பது; அவரது சட்டத்தை நுணு நுணுக்கமாய் தானும் அனுசரித் துப் பிறரும் அதை அனுசரிக்கச் செய்வது ; சுருங்கக் கூறு மிடத்து, இறைவனின் திருநாமம் உலகமெங்கும் பரவி புகழடைய இடை விடாது உழைப்பது.
39. கடவுளை நேசிக்க விரும்புகிறவன் என்ன செய்யவேண்டும்?
தனது நினைவு, வாக்கு. கிரிகைகளில் கவனம் செலுத்துவதுடன், நற்தண பழக்க வழக்கங்களைக் கையாண்டு. தூய்மையான வாழ்க்கை நடத்த முயற்சிக்க வேண்டும்.