மனிதன்

1. சம்மனசுகளைத் தவிர சர்வேசுரன் உண்டாக்கின பிரதான வஸ்து என்ன?

ஆத்துமமும் சரீரமுமுள்ள மனிதன்தான்.


2. மனிதன் என்றால் யார்? 

ஆத்துமமும், சரீரமுமாகிய இவ்விரண்டும் ஒன்றாகக் கூடி புத்தியறிவும், பகுத்தறிவும் உடைய வஸ்துவே மனிதன் என்னப்படும்.


3. பகுத்தறிவு ஆவதென்ன? 

ஒரு காரியத்தில் உண்மையை அல்லது நியாயத்தை ஆராயவும், விசாரிக்கவும் சக்தி கொடுக்கும் புத்தியின் சத்துவமாம்.  அதைக் கொண்டு அறிந்த ஒரு விசே­த்திலிருந்து மற்றொரு விசே­த்தை நிதானித்து அறிந்து கொள்ளலாம்.  இப்படியே சர்வேசுரனுடைய பரிசுத்தத்தனத்தை அறிந்து, நாம் பாவத்தை விலக்கிப் பரிசுத்தமாயிருக்க வேண்டுமென்று தீர்மானிக்கிறோம்.


4. மிருகத்துக்கும் மனிதனுக்குமுள்ள வித்தியாசமென்ன? 

மிருகத்துக்கு உயிரும் சரீரமும் இருந்தாலும் பகுத்தறிவு கிடையாது.   சில மிருகங்களுக்கு ஆச்சரியமான இயல்பான அறிவு இருக்கக் கூடும்.  ஆனாலும் எந்த மிருகமும், நம்மைப் போல் பகுத்தறிய முடியாது.  

உதாரணமாக: கணக்கிடவும், இன்று என்ன கிழமை என்று அறியவும், தன் அந்தஸ்தை விருத்தி செய்யவும், தான் அடைந்த அறிவைத் தன் குட்டிகளுக்கு அறிவிக்கவும், பிரதிக்கினை செய்யவும், கடமை, புண்ணியம் முதலியவற்றை ஆராயவும், சர்வேசுரனை ஆராதிக்கவும் அவைகளால் முடியாது.  மிருகம் தன் ஐம்புலன்களைக் கொண்டு அதன் கண் முன்னிருப்பதை அதற்குத் தோன்றுவதுபோல் மதிக்கிறது. மனிதனோ தன் புத்தியைக் கொண்டு மதிக்கக் கூடியவனாயிருக்கிறான்.