சம்மனசுக்கள்

31. சர்வேசுரன் உண்டாக்கினவைகளில் பிரதான வஸ்துக்கள் என்ன?

சரீரமில்லாத சம்மனசுகளும், ஆத்துமமும் சரீரமுமுள்ள மனுஷர்களுந்தான்.


32. சம்மனசுக்களையம் மனுஷர்களையும் பிரதான வஸ்துக்கள் என்று சொல்லுவானேன்?

ஏனென்றால் சம்மனசுகளும், மனுஷர்களும் மாத்திரம் சர்வேசுரனை அறியவும், நேசிக்கவுந் தக்கவர்களாயிருக்கிறார்கள் என்பதினாலேதான்.


பிரதான வஸ்து என்பதற்குப் பொருள் என்ன?

முக்கியமான, விசேஷமான பொருள் என்று அர்த்தமாம்.