மரணத் தருவாயில் இருப்பவர்களுக்கு மிகப் பலனுள்ள மூன்று ஜெபங்கள்

முன்னொரு காலத்தில் உரோமை நகரிலே ஒரு பாப்பரசர் மரணத்திற்கு ஏதுவான ஒரு நோயால் பீடிக்கப்பட்டிருந்தார். தாம் மரிக்கப் போவதை அறிந்து, கர்தினால்மார், மேற்றிராணிமார், வேதசாஸ்திரிகள் அனைவரையும் வரவழைத்து, அவர்களிடம், ''என் அன்பிற்குரிய நண்பர்களே! நான் இப்போது மரித்து, என் பாவங்களுக்காக நித்திய தண்டனையை அனுபவிக்க வேண்டும். இந்நிலையில் நீங்கள் எனக்கு என்ன ஆறுதல் தர முடியும்?'' என்று வினவினார். அதற்கு எவருமே மறுமொழி கூறவில்லை . சங். ஜான் என்ற பக்தி மிகுந்த குருவானவர் மட்டும், "தந்தையே, தாங்கள் ஏன் சர்வேசுரனின் இரக்கத்தின் மட்டில் சந்தேகம் கொள்கிறீர்கள்?" என்று வினவினார். அதற்கு பாப்பரசர் முன் கூறியதையே சொன்னார். இதற்கு அக்குருவானவர், ''நான் உமக்காக மூன்று ஜெபங்களை ஜெபிப்பேன். நீர் தேவ ஆறுதலையும், சர்வேசுரனின் தேவ இரக்கத்தையும் பெறுவீர் என்று நம்புகிறேன்'' என்றார். பாப்பரசர் அதற்கு மறுமொழி ஒன்றும் கூறவில்லை . கூடியிருந்த அனைவரும் முழங் காலில் இருந்து கர்த்தர் கற்பித்த ஜெபத்தையும், கீழ்க் காணும் ஜெபங்களையும் ஜெபித்தனர். குருவானவர் இந்த ஜெபங்களை ஜெபித்துக் கொண்டிருந்த போதே பாப்பரசர் மரித்தார். குருவானவர் தொடர்ந்து மூன்றாம் மணி வரை ஜெபித்தார். பாப்பரசர் குருவானவருக்குத் தோன்றி அவரைத் தேற்றினார். அவருடைய முகம் சூரியனைப் போல ஒளி வீசியது. அவருடைய ஆடை பனி வெண்மையாக இருந்தது. அவர் குருவானவ ரிடம், "என் அன்புக்குரிய சகோதரரே, நான் தண்ட னைக்குப் பாத்திரவானாக இருந்தேன். இப்போது மோட்சப் பேரின்பப் பாக்கியத்திற்குப் பாத்திரவானாகி விட்டேன்” என்றார்.

முதல் ஜெபம் :

ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துநாதர் சுவாமி! நீர் சர்வேசுரனின் திவ்ய குமாரன், அர்ச். கன்னி மரியாயின் திருமகன், சர்வேசுரனும், மனிதனு மானவர், மரணப் படுக்கையில் இருக்கும் இவரது (பெயரைக் கூறவும்) ஆத்தும் இரட்சணியத்துக்காக வும், இவருக்கு அமைதியைக் கொண்டு வரவும், பூங்காவனத்தில் பயத்தினால் இரத்த வியர்வைவியர்த்து உம் பரலோகப் பிதாவுக்கு அர்ப்பணித்தீர். இப்படி யிருக்க, இவர் தன் பாவங்களுக்காக நித்திய தண்டனை அனுபவிக்க வேண்டியவர். இத்தண்டனையை இவரிடமிருந்து விலக்க வேண்டுமென்று பரம பிதாவே! உம்மோடும் திவ்ய இஸ்பிரீத்து சாந்துவோடும் ஐக்கியத் தில் என்றென்றும் ஆட்சி புரியும் உம் திவ்ய குமார னும், எங்கள் ஆண்டவருமான இயேசு கிறீஸ்துநாதர் சுவாமி வழியாக உம்மை மன்றாடுகிறோம். ஆமென்.

இரண்டாம் ஜெபம் :

எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறீஸ்து நாதர் சுவாமி! இவரைப் பாவத் தளையினின்று விடுவிக்கவும், இவருடைய பாவங்களுக்கு ஏற்பட்ட தண்டனையை இவரிடமிருந்து நீக்கவும், இவருக்கு சமாதானத்தைக் கொணரவும், உமது பரிசுத்த திருச் சித்தத்தை முழுவதுமாக உமது பரலோகப் பிதாவுக் குக் கையளித்து எங்களுக்காகச் சிலுவை மரத்தில் சாந்தமாக உயிர் நீத்தீர். நித்திய பிதாவே! உம் மோடும், திவ்ய இஸ்பிரீத்து சாந்துவோடும் ஐக்கியத்தில் என்றென்றும் ஆட்சி புரியும் கிறீஸ்துநாதர் சுவாமி வழியாக இவருக்கு இந்தத் தேவ வரப்பிரசாதத்தைத் தந்தருளும். ஆமென்.

மூன்றாம் ஜெபம் :

மெளனமாக இருந்து தீர்க்கதரிசிகளின் வாய் மொழியாகப் பேசியருளிய எங்கள் ஆண்டவரான இயேசுக் கிறிஸ்துநாதர் சுவாமி! நித்திய தேவசிநேகத் தால் எம்மை உம்பால் இழுத்துக் கொண்டீர். அதே சிநேகம், உம்மைப் பரலோகத்திலிருந்து திவ்விய கன்னித் தாயின் திரு உதரத்தில் உற்பவிக்கச் செய்தது. அந்த உன்னத தேவசிநேகமே இந்தக் கண்ணீர்க் கணவாயாகிய உலகில் உம்மை மனிதனாய்ப் பிறக்கச் செய்தது. இவ்வுலகில் ஜீவிக்கச் செய்ததும் அதே சிநேகம்தான். உமது விலைமதிப்பற்ற திவ்ய திருச்சரீரத்தையும், திவ்ய திரு இரத்தத்தையும் எங்கள் ஆத்துமங்களுக்கு மெய்யான போஜனமாகவும், பானமாகவும் எமக்குக் கொடுக்கச் செய்ததும் அதே உன்னதமான சிநேகம்தான். இந்தத் தேவ சிநேகமே உம்மை ஒரு கைதியைப் போல் நீதிபதிகளிடம் இழுத்துச் செல்லப்படவும், மரணத்திற்குத் தீர்வை யிடப்படவும், சிலுவையில் மரித்து அடக்கம் செய்யப் படவும் சம்மதிக்கச் செய்தது. அந்த சிநேகமே, மெய்யாகவே உயிர்த்தெழவும், பரிசுத்த கன்னிகைக் கும், அப்போஸ்தலர்களுக்கும் காட்சியளிக்கவும் அருள் கூர்ந்தது. அதே உன்னத சிநேகத்தினால் உமது சொந்த வல்லமையால் பரலோகத்திற்கு எழுந்தருளி, பரலோகத்தில் பிதாவாகிய சர்வேசுரனின் வலப் பக்கத்தில் வீற்றிருக்கின்றீர். உமது நித்திய சிநேகத்தின் அடையாளமாக திவ்ய இஸ்பிரீத்து சாந்துவானவரை உமது அப்போஸ்தலர்களுக்கும், உம்மில் விசுவாசம் கொள்ளும் அனைவருக்கும் அனுப்பி வைத்தீர். இன்று உமது பரலோகத்தைத் திறந்து, மரித்துக் கொண்டிருக்கும் இவரை ஏற்றுக் கொள்ளும். இவர் இன்றும் என்றும் உம்மோடு அரசாள்வாராக. ஆமென்.

நன் மரணத்தின் பாதுகாவலராகிய அர்ச்சிய சிஷ்ட சூசையப்பரே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

ஆமென்.