திருச்சபையின் குணங்கள்

1. கிறீஸ்துவ சபைகள் என்று தங்களைத்தானே அழைத்துக் கொள்ளும் பற்பல சபைகளினின்று சேசுநாதரால் ஸ்தாபிக்கப்பட்ட மெய்யான திருச்சபை இன்னதென்று அறியக் கூடுமோ? 

அறியக் கூடும்.  உள்ளபடி மெய்யான திருச்சபை இன்னதென்று சுட்டிக்காட்டும் சில அடையாளங்கள் உண்டு.


2. அந்த அடையாளங்கள் எப்படிப்பட்டவையாயிருக்க வேண்டும்? 

சகல மனிதரும் மெய்யான திருச்சபையைக் கண்டறிய வேண்டியிருப்பதினால் அந்த அடையாளங்கள்:

(1) வெளியரங்கமாய்க் காணக்கூடியவைகளாயும், எளிதாய் அறிந்துகொள்ளத் தக்கவைகளாயுமிருக்க வேண்டும்;

(2) மேலும் அந்த அடையாளங்கள் எல்லாம் மெய்யான திருச்சபை ஒன்றுக்கு மாத்திரம் சொந்தமாயிருக்க வேண்டும்;

(3) சேசுநாதர் ஸ்தாபித்த திருச்சபைக்கு அந்த அடையாளங்கள் அவசியமாயிருப்பதால், அவைகள் எப்போதும் திருச்சபையில் நிலைமையாயிருக்கவேண்டியது.


89. இந்தச் சத்திய திருச்சபை இன்னதென்று காண்பிக்கும் குணங்கள் எவை?

1-வது. ஏகம்,
2-வது.  பரிசுத்தம்,
3-வது.  பொது (கத்தோலிக்கம்)
4-வது. அப்போஸ்தலத்துவம்
ஆகிய இந்நான்குமே மெய்யான திருச்சபையின் குணங்களாம்.