57. திடம் என்றால் என்ன?
நமது கடமையை நிறைவேற்றுவது கடினமாயிருந் தாலும் கஷ்டத்தைப் பாராது கடமையைச் செய்து முடிப்ப தற்கான மன உறுதியைத்தான் திடம் என அழைக்கிறோம்.
58. நமது கடமை எவ்வெவ்விதத்தில் கடினமாய் இருக்கக்கூடும்?
சில சமயம் அதில் உடல் வருத்தம் இருக்கலாம். களைப்பு, அசதி, சோம்பல் அல்லது உடல் நலக்குறைவு ஏற படும்போது இது உண்டாகும். சில சமயம் மனதுக்கு வருத்தம் ஏற்படலாம். நாம் செய்ய விரும்புகிற அல்லது செய்ய நினைக்கும் எந்தக் காரியத்தையாவது, நமது கடமைக் குறுக்கிட்டுத் தடை செய்தால் இது நேரிடக் கூடும். ஆசாபாசங்கள் கிளர்ச்சிகொண்டு எழும்பினால் அவற்றை எதிர்ப்பதில் கஷ்டம் ஏற்பட்டு. கடமையைச் செய்வது கடினமாயிருக்கக் கூடும். வேறு சில சமயங்களில் நாம் கடமையைச் செய்வதால் நமக்குப் பிரியமான பொருட்களை இழக்க நேரிடலாம். அல்லது நாம் கடமையைச் செய்வது கண்டு பிறர் நம்மைக் கேலி பண்ணி நகைக்கலாம். அல் லது அதைச் செய்யாதபடி தடை செய்யலாம். உதாரண மாக கிறிஸ்துவ வேதசாட்சிகள். தங்கள் வேதத்தை மறு தலிப்பதைவிட கொடிய வேதனைகளை அனுபவிக்கவும் மனதாயிருந்தனர். உயிரையும் கொடுத்தார்கள். இதனால் அவர்கள் மனத்திடம் சிறந்த முறையில் வெளிப்படையாகத் தெரிகிறது.
59. மனத்திடத்தில் அல்லது தைரியத்தில் பயிற்சி அடைவதெப்படி?
நமது கடமை கடினமாய்த் தோன்றினாலும் அதை நிறை வேற்றுவதில் பிரமாணிக்கமும், மன உறுதியும் காட்டி தைரியமாய் கஷ்டங்களையும், இடையூறுகளையும் சகித்து தடைகள் ஏற்படுவதினிமித்தம் பயிற்சித்து வெற்றி பெறலாம்
பாவம் சகல தீமைகளிலும் பெரியது. புண்ணியம் சகலத்திலும் சிறந்த நன்மை ; சற்போது நமது கஷ்டங் களை எவ்வளவுக்குப் பொறுத்துக் கொள்கிறோமோ. அவ்வளவுக்கவ்வளவு, பிற்பாடு அவற்றைப் பொறுத்துக்கொள் வது எளிதாகும். நமது கஷ்டத்துக்குத் தகுந்த அளவு நமது சம்பாவனையும் அதிகமாகும் '- என்ற சிந்தனைகள் நமக்கு மிகவும் உதவியாகும்.