புறச்சமயம் முளைத்த வகை

வேத விளக்கம்



வெண்பா. 

பதிதரும் பொய்மதமும் பட்டொளிப்பவான் மேற் 
பதிதரு மாறிலங்கப் பண்பாப் - பதிதரும் 
வேதவிளக்கம் விரித்த சுடர் மங்கா 
நீ தவிளக்கா நிலத்து. 
நல்லோர்க்கொளிசுடர் நா னான்கிரண்டா மூவறுவேற் 
புல்லோர்க்கா மூவாறாப் பூட்டிய நூ லெல்லோர்க்குஞ் 
சீதவான் வீட்டைத் திறக்குங்கோற்றந்தாரே 
வேதவிளக்கந் தந்தார்.

முதல் அதிகாரம்.

புறச்சமயம் முளைத்த வகை. 

1. - ஆடுகள் அடைத்த மந்தையைச் சுற்றி நுழையும் வழியைத் தேடித் திரியும் ஓநாய்களைப் போலக் கீழ்த்திசை மதத்தார் நெடுநாள் இந்த நாட்டில் நுழையத் தேடின வழியைக் காணாமல், இந்நாளில் மாறின முகத்தோடே நுழைந்து, தளர்ந்த நடையோடே வந்து, நடுங்கின மொழிகளோடே பிதற்றிச் சர்வேசுரனுடைய வேதத்தைப் போதிக்கிறோமென்று சொல்லுமளவில், எப்படிப் பட்ட வேதம் அதென்று நீங்கள் எண்ணிக்கொண்டிருக் கிறீர்கள். மனிதனாய்ப் பிறந்து, தரித்திரனாய் வளர்ந்து, எளியனாய்த் திரிந்து, நம்முடைய கர்த்தராகிய சேசுநாதர் திருவுளம் பற்றின வேதமோ? அல்ல. அவர்தான் தெரிந்து கொண்ட சீஷராகிய அப்போஸ்தலர்மார் உலகம் எங்கும் பரப்பின வேதமோ? அல்ல.

சேசு நாதர் தமது ஸ்தானத்தில் அர்ச். இராயப் பரை வைத்துப் பசாசுக்களால் அசைக்கப்படாத செங் கோன்மையைக் கொடுத்த முறையோடு இராயப்பர் துவக்கி இந்நாள்வரைக்கும் வழுவாமல் உரோமாபுரியில் திருச் சபைக்குத் தலைவராக நின்ற அர்ச். பாப்புகள் வெளிப்படுத் தின வேதமோ? அல்ல. 1728-ம் வருஷமட்டுங் குறையாம லும், மிகாமலும், வேறுபடாமலும் ஒருமுகமாய்ப் பூவுல கெங்கும் பரம்பின வேதமோ? அல்ல. எக்காலத்தும், எவ் விடத்துஞ் சந்தேகமுமின்றி, எண்ணிக்கையுமின்றி வழங் கின புதுமைகளால் ஒப்பிக்கப்பட்ட வேதமோ? அல்ல. எல்லா விடத்தும், எல்லாக் காலத்தும், எல்லா வயதிலும், எல்லாக் குலத்திலும், ஆணும் பெண்ணுங் கோடாகோடி சனங்கள் மகிழ்ந்த மனதோடும், மலர்ந்த முகத்தோடும் எண்ணப்படாத கொடிய முறைகளால் வருத்தப்பட்டு வலி யப் பிராணனைத் தந்து சாட்சி சொன்ன வேதமோ? அந்த வேதமும் அல்ல. நாம் இப்போது சொன்ன வேதம் சமூ தீதப் பிரயோசனமாக நிற்குங் கத்தோலிக்கு உரோமான் வேதம் என்னத்தகுமொழிய, அதனை விட்டு மனிதரால் பிரிக்கப்பட்ட சமயங்கள் அல்ல.

2. - இந்நாளிலே சர்வேசுரனுடைய வேதமென்னும் வேஷத்தைப் போர்த்துக்கொண்ட கீழ்த்திசையார் சொல் லுஞ் சமயம் யாதெனில் : இருநூறு வருஷத்துக்கு முன்னே ஆண்டவருக்கு மனம் பொருந்திக் கொடுத்த மூன்று வார்த் தைப்பாடுகளை மிதித்து நிந்தித்த ஆங்காரத்தினாலேயும், சாராயம் நிறையக் குடித்த மயக்கத்தினாதேயும், கன்னியாஸ் திரிகளைக் கட்டாயமாகக் கற்பழித்த காம வெறியினாலேயும், பழிவாங்க நினைத்த கோபத்தினாலேயும், மதிகெட்டவன் ஒருவன் பிதற்றின ஒன்று மொவ்வாத தப்பறைகளாக்கும். அந்த மதத்தார் சர்வேசுரனுடைய வேதமென்று வெட்க மில்லாமல் சொல்லுகிறார்களென்று அறியக்கடவீர்கள். செத்த நாய் புழுத்து நாறி முளைத்த புழுவே, உலகம் யாவையும் விளக்கத்தகுஞ் சூரியனென்று நினைக்கினுஞ் சகல பாவங்களிலே பிறந்து முளைத்த தப்பறை ஈடேற்றத் துக்குரிய வேதமென்று கருதவுந் தகுமோ.

3. - ஆகையால், ஜெர்மானிய தேசத்தில் பிறந்த லுத்தேரென்பவன் சத்தியவேதத்தைப் பாலோடு உண்டு வளர்ந்து, பூவுலகுள்ள பொய்யான வாழ்வுகளை வெறுத்து, வால் சந்நியாசம் பண்ணி , அர்ச். அகுஸ்தீனுடைய சபை யுட்பட்டு, மனம் பொருந்தி ஆசையோடு ஆண்டவர் பாதத் தில் எல்லாரும் அறிய மூன்று வார்த்தைப்பாடுகளைத் தந்து, மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை வெறுத்து, மரணபரியந்தம் விரத்தனாகவும், தரித்திரனாகவும் , சிரேஷ் டர் சொற்படிக் கேட்பவனாகவுந் துணிந்தான். துணிந்த படியே நெடுநாளும் நடந்து, குருப்பட்டமும் வாங்கி, எவ ருக்கும் புண்ணிய நெறியைக் காட்டிக்கொண்டு திரிந்தான். அப்போது கத்தோலிக்கு உரோமான் திருச்சபைக்கு அப் பாலே கரையேற்றம் இல்லையென்றும், உரோமாபுரியில் ஆளும் அர்ச். பாப்பு சேசுநாதருடைய ஸ்தானத்தில் இருப்பவரென்றும், அவர் கட்டளையிட்ட முறைகள் ஆண் டவர் கட்டளையிட்டாரென்றும், ஒருசந்தி, செபம், திரு நாட்கள், மற்றத் திருச்சபை ஆசாரமெல்லாம் நல்லதென் றும், பரிசுத்த தேவமாதாவையும், மற்ற அர்ச்சியசிஷ்டவர் களையும் வணங்குவது நல்லதென்றுந் தானே நிச்சயித்து நடந்ததொழிய , மற்றவருக்குஞ் சொல்லி மோக்ஷக் கரை ஏறும் வழி இதென்று காட்டிக்கொண்டு திரிந்தான்.

4. - அதன்பின்பு இதற்கு இருநூற்றுப் பதினோரு வருஷத்திற்கு முன்னே கர்த்தர் திரு அவதாரத்தின் ஆயிரத் தைந்நூற்றுப் பதினேழா மாண்டில் அர்ச். பாப்பானவர் இட்ட ஓர் கட்டளை லுத்தேர் என்பவனுக்குப் பொருந் தாமையால் இருந்தாற்போல கண் கெட்டு, மதியுங் கெட்டு, கல்லிலே மோதி, முள்ளிலே விழுந்து, சேற்றிலே புரண்டு திரிகிறவனைப்போல தான் சகல பாவத்தின் பாதாளத்தில் விழுந்து கெட்ட வகையைச் சொல்லிக் காட்டுவோம். அதெப்படியென்றால், கர்த்தர் நமக்காகச் சிந்தின திவ்விய இரத்தத்தின் பலனே பொக்கிஷமாகத் திருச்சபையி லிருக்க, அதில் அவசரங்களைப்பற்றி எடுத்து நீதி முறை யோடு அர்ச். பாப்புமார்கள் எவருக்கும் நன்மையாகச் செலவழித்துப் பூரண பலன்களை ஸ்தாபிப்பது திருச் சபையிலுள்ள பழைய முறைமை என்னத்தகுமே.

இப்படி ஸ்தாபிக்கப்பட்ட பூரண பலன்களைச் சனங்களுக்கு அறிவிப்பது அந்நாள் வரைக்கும் அர்ச். அகுஸ்தீனு சபையில் உட்பட்ட சந்நியாசிகளுக்கு உத்தியோகமாய் நடந்ததாம். மேற்சொன்ன வருஷத்திலோவெனில் அர்ச். பாப்பு பத்தாம் சிங்கராயர் என்பவர் யாதோர் காரணமாக அகுஸ்தீனு சபையாரை விட்டுப் பலன்களைச் சீர்மையில் அறிவிக்க, அர்ச். தொமினீக்குச் சபை சந்நியாசிகளைக் குறித்தார். அது தன் சபைக்கு நிந்தையாக எண்ணி அடி பட்ட நச்சுப்பாம்பு சீறினாற்போல, லுத்தேர் என்பவன் சினந்து முறைப்பட்டதற்கு அர்ச். பாப்பு கேளாததனால், ஒருநாள் லுத்தேர் நிறையச் சாராயங் குடித்த வெறியிலே கால் தளர்ந்தாடின தன்மையாய் மதியுந் தளர்ந்து மயங் கிப் பூரண பலன் ஏதென்றும், அர்ச். பாப்பு ஆரென்றுஞ் சொல்லி, அந்நாள் வரைக்கும் மற்ற உலகத்தாரோடெல் லாந் தானும் சேசுநாதர் ஸ்தானத்தில் இருப்பவராக அர்ச். பாப்புவை வணங்கின லுத்தேர், அன்று தான் அவரைப் பசாசு ஸ்தானத்திலிருக்கிற பெருங் கள்ளனென்று சொல்லத் துடங்கினான்.

தன் சபையார் முன்னறிவித்தபோது சேசுநாதர் இரத்தத்தினால் எவருக்கும் நன்மை தரும் பூரண பலன்கள், தன் சபையாரல்லாதே புறச் சபை குறிக்கப்பட்ட பின்பு மனிதரை ஏய்க்கும் உபாயங்களென்றும், வீண் சடங்குக ளென்றும் அதுகளைச் சொல்லத் துணிந்தான். கள்ளுண்ட வெறியில் மயங்கிப் பிதற்றின அபத்தங்களை மீளவும் பிறகு பின்வாங்காமற் சலஞ்சாதித்துச் சொன்ன தனால், அர்ச். அகுஸ்தீனு சபையில் உட்பட்ட மகாத்துமாக்களாகிய மற் றச் சந்நியாசிகள் லுத்தேர் என்பவனை மிகவுந் தண்டித்துக் கோபித்தார்கள். ஆயினும் தூக்கணாங்குருவி குரங்குக்குப் புத்தி சொன்னதுபோல லுத்தேர் என்பவனுங் கேட்ட நல் உணர்ச்சிகளால் அதிகமாய் மயங்கிப் பசாசினால் ஏவப் பட்டுச் சந்நியாசமாவது ஏதென்றும், சிரேஷ்டராவது ஏதென்றும், இதெல்லாம் அபத்தமென்றுஞ் சொல்ல, அவனைச் சிறைச்சாலையில் அடைக்கவேண்டுமென்றிருக்கை யில் தான் அதை அறிந்து தப்பி ஓடிப்போனான்.

5. ஓடினபின்பு கொண்ட மயக்கம் எவ்வளவாகி லும் மாறி ஒருநாள் உயர்ந்த இடத்தினின்று விழுந்தவன் இழந்த விடத்தை மேற் பார்த்தாற்போல, லுத்தேர் செய்த அபத்தங்களைக் கண்டு கூசி வெட்கப்பட்டு மனதில் நொந்தான். அப்பொழுது அவனுக்குப் பசாசு தோன்றி அவன் மனந்திரும்பினால் உடனே சந்நியாசிகள் அவனைச் சிறைச்சாலையில் போட்டு மிகவும் உபாதிப்பார்கள் என்று மனதில் அஞ்சும்படிக்குப் பயங்கரமாக நெடுநேரம் பசாசு சொன்னதற்கு, லுத்தேர் என்பவன் "நான் சொன்னதுஞ் செய்ததும் அபத்தமாகையால் உலகத்தார் என்னை நிந்தித் துச் சபையில் சேர்க்காமல் தள்ளுவார்களே'' என்றான்.

அதற்கு மிகவுங் கூர்ந்த அறிவுள்ள பசாசு சொன்ன மறுமொழி ஏதெனில்: “நீ நிந்தைப்படாமல் எங்கும் புகழப் படும்படிக்கு, நான் காட்டின வழியால் நீ செய்ததெல்லாஞ் செய்யத் தகும் வேதமுறையென்று ஒப்பிக்கக்கடவாய். சந் நியாசம் அபத்தம் என்பாய்; விரத்தனாய் இருப்பது பாவம் என்பாய்; தவம் ஒருசந்தி உபவாசங்கள் ஆண்டவருக்கு ஏற்காத முறைமைகள் என்பாய். கற்பைக் காத்தவள் மதி கெட்டப் பேதை என்பாய் பாவமே மனிதருக்கு இயற்கை என்பாய். கரை ஏறுவேன் என்று தளராத விசுவாச மாத்திரம் உண்டானால் எவ்வகைத் துரோகங்களைச் செய்தா லுந் தவமின்றிக் கரை ஏற்றம் உண்டாகும் என்பாய்.''

இத்தகைப்பட்ட பலவற்றையுஞ் சொல்லி, ஒப்பிக்கும் படிக்குச் சுகிர்த வேத வாக்கியங்களை எடுத்து அதிலே சிலது குறைக்கவும், சிலது மாற்றவும், சிலது விரோத முக வேதமாய்த் திருப்பி அர்த்தத்தைச் சொல்லவும், பாவத்திற் சாய்ந்த குணமுள்ள ஏழைச் சனங்களெல்லாம் மயங்கிச் சொன்ன யாவையும் ஒத்துக்கொண்டு பின் துடர்ந்து உன்னை மிகவும் புகழ்வார்கள் என்று பசாசு சொன்ன தற்கு லுத்தேர் தடையொன்றின்றிக் காமச் சேற்றிற் புர ளவும், பேரெடுத்து எங்கும் விளங்கவும் ஆசையால் மயங்கி மகிழ்ந்து உடன்பட்டான்.

6. இதெல்லாம் விரோதத்தாற் சொன்னதென்று தோன்றா தபடிக்கு லுத்தேர் என்பவன் தானே பூசைமுறை மைக்கு எழுதின புஸ்தகத்தில் சொன்ன தாவது : "நான் ஒருவன் அறிந்தவனோ? மற்ற அனைவோரும் மதிகெட்ட வர்களோ , இந்நாள் வரைக்குந் திருச்சபை எல்லாம் மயங்கி னதோ? நானும் வழி தப்பி மற்றவரும் வழியில் தவறச் செய்தால் வரும் ஆக்கினை சொல்லத்தகுமோ என்று நெடு நாள் அஞ்சிக் கூசி நடுங்கினேன்" என்றான். பிறகு தான் தேறித் துணிந்த வகையைச் சொல்லிப் பசாசு தன்னோடு ஒரு சிநேகிதனைப்போல அநுதினமும் வந்து பழகிகூட ஒரு காலத்தில் உண்டு சொன்ன உறுதிகளால் சந்தேகமெல் லாம் போய்த் தெளிந்து, தன் மதத்தைத் தான் உண்டாக்கி னேன் என்றான். ''பூசையை ஒழிக்கலாமோ இல்லையோ வென்று பசாசோடு நெடிதாய்த் தர்க்கம் பண்ணினேன்; கடைசியில் பசாசு சொன்னபடி கேட்டேன்." அதே னென்றால், ஒரு க்ஷணத்துக் கண்ணிமைக்கு முன்னே பசாசு ஆக்குரோஷ முறையோடு என் மனமெல்லாம் அச் சத்தாலும் இருளினாலும் நிரப்பி மயக்குவித்தது என்றான். லுத்தேர்தானே இதுவெல்லாம் எழுதி வைத்து அச்சிலே யும் பதித்தபின்பு அவன் வழியாக வந்த சமயம் மனிதர் ஈடேற்றத்துக்குரிய வேதமென்போமோ, பசாசோடு நா கத்தில் என்றென்றைக்கும் வேகக் கொண்டுபோய்விடும் வழி என்போமோ என்பதை நல்லறிவுடையார் யாவரும் எளிதாய்க் கண்டு தெளிவார்கல்லவா.

7.- இவ்வண்ணமே லுத்தேர் என்பவனுக்குப் பசாசு தான் குருவான தினால், ஒருநாள் சொன்னதை மறு நாள் மறுத்து லுத்தேர்தான் தன்னோடு ஒவ்வாமல் விப ரீத மொழிகளைப் பிதற்றி ஒன்றோடொன்று ஒவ்வாத முப் பத்தாறு வசனங்களைத் திவ்விய நற்கருணைக் காரியத்திலே மாத்திரம் எழுதிவைத்தான். லுத்தேர் தானே சேசுநாதர் நம்மை இரட்சிக்க வந்த மெய்யான சர்வேசுரனும் மெய் யான மனுஷனுமென்றும், பின்பு தன் குருவாகிய பசாசி னால் ஏவப்பட்டு அர்ச். சின்னப்பர் கலாசிய தேசத்தாருக்கு எழுதின நிருபத்தில் லுத்தேர் வியாக்கியானம் பண்ணின திலேயும், ஞானஸ்நானத்துக்கடுத்த முதல் பிரசங்கத்திலே யும் அவன் எழுதி வைத்ததாவது:

சேசுநாதரைச் சகல பாவிகளிலும் பாவி என்றும், அவரைப் போலப் பாவி இல்லை என்றும், அவரைக் கள்ளன் என்றும், கர்த்தர் துரோகி என்றும், தேவ தூஷணன் என் றும், வேதத்தைக் கெடுத்தவன் என்றும், அவரைப் பசாசு என்றும் நாக வாயனாகிய லுத்தேர் என்னும் பெருந் துரோகி உலகெல்லாம் அஞ்சிக் கூசும்படிக்குக் கக்கின பின்பு, இவனே சேசுநாதரால் உலகத்தை இரட்சிக்க அனுப்பப்பட்டவன்; இவனே வழுவின வேத நெறியை ஒப்புரவாக்கினவன்; இவனே மற்றத திருச்சபை எல்லாங் கெட்டு மயங்கி நிற்கத் தளராத ஞானத்தை அறிந்து போதித் தவன் என்று பிதற்றினான். இவையெல்லாஞ் சகல பாவத் துக்கு வாசலைத் திறக்கும் வழியை விரும்பிக் கண் மூடி மதி கெட்டவன் அநுசரிப்பானொழியக் கரை ஏற ஆசை யுள்ள ஒருவனாகிலுஞ் சொல்லவுங் கருதவுமாட்டான்.

8.- மலையினின்று உருண்டு விழும் பெருங் கல் போகப்போக விசையும் அதிகமாகித் தகர்ந்து உடைந்து பாதாளமட்டும் விழுவது போல, லுத்தேருஞ் சொன்னபடி பசாசினால் தள்ளுண்டு, திருச்சபையாகிய மலையில் நின்று உருண்டு விழுந்து, முன்னிருந்த எண்ணப்படாத பதிதர் எல்லாருஞ் சொல்லி மறுத்திருந்த அபத்தங்கள் யாவை யும் ஒருப்படக் கூட்டித் தான் ஒருவன் சொல்லவுஞ் செய்யவுந் துவக்கினான். விரத்தனாக வார்த்தைப்பாடு கொடுத்தி ருந்த லுத்தேர், காமவெறியில் சிக்கி கத்தரீன் போரே என் கிற ஒரு கன்னியாஸ்திரியைக் கட்டாயமாகப் பற்றி இழுத்து, துராகரமாக அவளைக் கற்பழித்துக் கலியாணப் பெயரைச் சாட்டி மெய்யான வைப்பாட்டியாக வைத்துக் கொண்டான்.

ஆகிலும், லுத்தேரும் அவனுடைய சீஷரும் இந்தக் கலியாண முகாந்தரமாக வெட்கிப்போய் நிந்தைப்பட்டு மிக வும் வருந்தினார்கள். ஆகையால், 1525-ம் ஆண்டில் 45 வய துள்ள லுத்தேர் தன் சிநேகிதருக்கு ஒன்றுஞ் சொல்லா மல் வேறே மூன்று பேர்களை மாத்திரம் விருந்துக்கென்று அழைத்துத் தானே அந்தப் போரே என்பவளைக் கட்டிக் கொண்டான். இந்தச் செய்தியைப்பற்றி லுத்தேர் பிரிய சீஷனாகிய மேலந்தோன் கமெறாரி என்பவனுக்குக் கிறேக் பாஷையில் எழுதின தாவது : "இதில் லுத்தேர் நீசக குணத்தைக் காட்டித் தன் பெயர் இகழப்பட்டு எவரா லும் நகைக்கப்படக் கலியாணஞ் செய்தானே; உட் சுடுங் காமக் கொடுமையைப் பொறுக்கமாட்டாமையால் அவன் இதற்குத் துணிந்தான் என்று அறிவோம். ஆகிலும், இப் பொழுது லுத்தேர்தானே இந்தக் கலியாணத்தினால் வெட்கி வருந்திக் கிடக்கிறான். நானோவெனில் என்னாலான மட்டும் அவனைத் தேற்றிக்கொண்டு வருகிறேன்'' என்று சொல்லி மேலந்தோன் எழுதினான்.

9. தான் நடந்தபடி மற்ற எவருக்குஞ் சொல்லிக் கன்னிமையுஞ் சந்நியாசமும் மிகவும் ஆண்டவருக்குப் பொருந்தாத பாவமென்று லுத்தேர் 1522-ம் ஆண்டில் சொன்ன பிரசங்கத்தில் சொன்னான். மீளவும் மறுவரு ஷத்தில் கர்த்தர் பாடுபட்டத் திருநாளன்று லுத்தேர்சீஷர் கள் போய் நிமிசெனமென்னும் ஊரிலே கன்னியாஸ்திரி ம-த்திற் புகுந்து, ஏழு கன்னியாஸ்திரிகளைப் பலாத்கார மாய் இழுத்துக்கொண்டுபோய்க் கற்பழித்தார்கள். அதை அறிந்து லுத்தேர் பொதுப் பிரசங்கத்தில் அவர்களைக் கொண்டாடி, நம்முடைய கர்த்தரான சேசுநாதர் பிதாக்கள் இருந்த ஸ்தலத்திற்குப் போய் அவர்களை மீட்டிரட்சித்தப் பாவனையாக அந்தச் சண்டாளரும் அன்று புண்ணியத் தைக் கட்டிக்கொண்டார்கள் என்று சொன்னான்.

10. ஆயினும் லுத்தேர் ஒருவன் செய்த தப்பிதங்களையும், சொன்ன அபத்தங்களையும் ஒழுங்குடன் கூட்டி இங்கே எழுதிக் காட்டுவது நமக்குக் கருத்தல்ல. பெருங்கடல் வெள்ளஞ் சிறிதோர் கலத்தில் அடங்கினும் லுத்தேர் தப்பறைகள் பெரிதோர் புஸ்தகத்திலும் அடங்குந் தன்மையல்ல. தன் குருவாகிய பசாசினால் ஏவப்பட்டமையால் எல்லாப் பாவமும் நுழையும் பெருவாசலைத் திறக்கும்படிக்கு மனிதரை ஏய்க்கச் சில புண்ணியங்களைப் படிப்பித்தாற்போல சொன்னபின்பு, மனிதருக்குப் புண்ணியமு மில்லை பாவமுமில்லை என்றான், ஆண்டவரைத் துதிப்பதும் அவரை நிந்திப்பதும் ஒன்றென்றான். அவனவன் தன் தகப்பனாரை வணங்குவதும் மிதித்து உதைப்பதும் ஒன்றென்றான். ஆளும் அரசருக்கு இறையைக் கொடுப்பதுந் துரோகஞ் செய்வதும் ஒன்றென்றான். அதுவும் புண்ணிய மல்ல, இதுவும். பாவமல்ல. பாவங்களென்றாலும் அதுக ளால் மனிதருக்கு ஓர் அற்ப ஆக்கினையாகிலும் வரவறியாது.

விசுவாசமில்லாத ஒருவன் நரகத்திற்குப் போவானொ ழிய, மற்றவர் என்ன பாவஞ் செய்தாலும் விசுவாசத்து டனே சற்றும் அஞ்சாமல், ஆண்டவர் பொறுத்தார் என்று நம்பினமாத்திரத்தில் தவமொன்றுமில்லாமற்பாவமெல்லாம் அமிழ்ந்து ஒழியுமென்று சந்நியாசவிரதங் கெடுக்க லுத் தேர் உண்டாக்கின புஸ்தகத்தில் எழுதி வைத்தான். மீள வும் இராயப்பர் மேலே செய்த வேறொரு பிரசங்கத்தில் தான் எழுதி வைத்ததாவது: "எவ்வளவு பெரும் பாவியா யிருக்கிறாயோ அவ்வளவு சீக்கிரமாய் ஆண்டவர் தம் இஷ் டப்பிரசாதத்தை நிறையத் தருவார்" என்றான். ஆகையால் ஆண்டவருக்குப் பிரியனாகவும், அவர் இஷ்டப்பிரசாதத்தை அடையவும் பாவமே வழியென்பதாயிற்றே, ஆகையால் புண்ணியங்களை, தவங்களைச் செய்யாமல் மிக வும் பாவங்களைச் செய்வது நல்லதென்றாயிற்றே.

மதி கெட்டவனாயினுங் கருதவுமாட்டாத அபத்தங்களை மனுக்குலம் நிந்தைப்படவும், பாவமெல்லாம் வளரவும் முளைத்த பெரும் பாவியாகிய லுத்தேர் வெட்கமில்லாமல் வேதமாகச் சொல்லக் கூசாதே போனான். இது பாவங்களைத் தீர்த்துப் புண்ணிய வழியைக் காட்ட வந்த சேசு நாதர் அருளிச்செய்த வேதமோ? இதின்மேல் அக்கியானத்திலும் பாவத்துக்கும் நரகத்துக்கும் பெரும் பாதை திறந்ததுண்டோ? நாம் இங்கே சுலபமாய்ச் சொன்னதெல்லாம் லுத்தேர் சீஷராகிய கீழ்த்திசையார் மறுத்துப் பகையால் சொன்ன பொய் என்பார்களாக்கும்; ஆகிலும் அறியாத சனங்களுக்கு நடந்த செய்தி பொய் என்பார்களொழியத் தங்கள் புஸ்தகங்களைக் கொண்டு இதெல்லாம் அவர்களுக்கு ஒப்பிக்க நாம் வல்லவனாயிருக்கக்கொள்ளச் சொன்னதிலே ஒன்றாகிலும் எம் முன்பாகப் பொய்யென்று சொல்லமாட்டார்கள். சொன்னாலும் வெட்கி நாணும்படிக்குச் செய்வது எளிதாகும்.