108. பந்தயம், சூதாட்டம் தீய குணங்களா?
இவைகள் தம்மிலே குற்றமற்ற விளையாட்டுக்கள், தீய குணங்கள் அல்ல. ஆனால் மிக எளிதில் தீய குணங்களாக மாறலாம்.
109. பந்தயம், சூதாட்டம் எப்படி தீயகுணங்களாக மாறக்கூடும்?
முதன் முதலாக மனதில் வேகமான கிளர்ச்சி உண்டு பண்ணி, மேலும் மேலும் அந்தக்கிளர்ச்சி வளரக்கூடிய மன நாட்டத்தை உண்டாக்குகிறது. இவ்விதமாக அது ஒரு ஆசாபாசமாகிறது. அதாவது இன்பத்தின் மீது முறையற்ற விதமான ஆவல், அல்லது லாபமடைய (வெற்றி கொள்ள) மிதமிஞ்சிய ஆசைப்படும் பேராசை என்னும் தீய குண மாகலாம்.
இரண்டாவது - தனக்கும். தன் குடும்பப் பாதுகாப்புக் கும் தேவையான பணத்தை இழக்கும் ஆபத்துக்குள்ளாக் குகிறது. இது, அவனுக்கும், அவன் குடும்பத்துக்கும் ஏற்படும் பெருந்தீங்கு ஆகின்றது.
மூன்றாவது - பந்தயம் எவ்வளவுக்கு ஆடுகிறானோ, அவ் வளவிற்கு அதிகமாய் இன்னும் விளையாட ஆசை அதிகரித்து, கடைசியாய் அதன்மேல் ஒருவித பைத்தியம் கொண்டவன் போல் ஆகிறான் இதனால் அம்மனிதனுக்கு, ஆன்ம விஷயங்களைப்பற்றிய அக்கரை இல்லாது போய் விடும். தன் கடமையைச் செய்யவும், அறநெறியில் தடக்க வும், எந்தவிதமான உயர்ந்த கொள்கைகளைக் கடைப்பிடிக்க வும் ஆர்வம் இல்லாது போகும். 110. சுருட்டு குடிப்பதும், போதை தரும் பொருட்களை உபயோகிப்பதும் தீயகுணமல்லவா? உடல் நலத்துக்கு எத்தகைய இடையூறு நேராமலும், வெறி மயக்கம் கொள்ளாமலும் இருக்கும்வரை சுருட்டு குடிப்பதும், போதையூட்டும் பொருட்களை (பானங்களை) உபயோகிப்பது குற்றமல்ல. இதனால் ஒருவனது பொருளா தார நிலை பாதிக்கப்படக் கூடாது
111. போதையூட்டும் குடிவகைகளைப் பற்றிய சிறந்த ஒழுங்கு யாது?
முதன் முதல் ; இதுவரை அதில் பழக்கமில்லையென்றால் புதிதாக அந்தப் பழக்கத்தை உண்டாக்கிக்கொள்ளாதே அதனால் வீண் செலவும், பாவச்சோதனையும் உண்டாகும்... இரண்டாவது ; சிலகாலம் அதில் பழக்கம் ஏற்பட்டு அளவுக்கு மீறி குடிக்க ஆசை ஏற்பட்டால் உடனே அந்த வழக்கத்தை நிறுத்திவிடு. ஏனெனில் பிறகு அதை நிறுத்து வது கடினமாக இருக்கலாம்.
112. நாடகம், நடனம், படக்காட்சி இவைகளைக் காண்பது தீயகுணமா?
உல்லாச பொழுதுபோக்கின் மீதுள்ள ஆவல், ஆசாபாசமாகி அல்லது அதன் விளைவாக முக்கியமான விஷயங் களில், கவனமும், கருத்தும் குறைந்து, உற்சாகம் குன்றி. கடமையைச் செய்வதில் அலட்சியம் ஏற்படுவதாயிருந்தால் அவற்றைப் பார்ப்பது தீய குணமாகும்.
மேலும், இதில் கவனிக்கவேண்டியது யாதென்றால், ஆன்ம வாழ்வுக்கும். நல்லொழுக்கத்துக்கும் விரோதமான அல்லது பாவச் சோதனைக்கேதுவான காட்சிகள் காட்டப் படுமானால் அவற்றை ஒரு போதும் பார்க்கக்கூடாது என்பது வெளிப்படை.
115. பலவித விளையாட்டுகள், பந்தாட்டம் முதலியவற்றில் பங்கெடுத்துக்கொள்ள விரும்புவது தீயகுணமாகுமா?
இல்லை. உடலுக்கு நலத்தையும், புத்திக்கு தெளிவையும் அளிக்கக்கூடிய நல்ல பொழுது போக்குகள் அவை. தன்னடக்கம், மனவுறுதி முதலான நற்குணங்களை வளர்க்க இவை மிகவும் உறுதியானவை. ஆனால் எல்லாவற்றிலும் மட்டுத்திட்டம் வேண்டும். அதிகக் களைப்புக்கும், சோர்வுக் கும் இடங்கொடுத்து நமது உடல் நலத்துக்குத் தீங்கு நேரிடாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும். அதில் அதிக நேரத்தைப் போக்கி நமது கடமையை அலட்சியம் செய்யக்கூடாது.
114. கல்வி, அறிவுத்திறமை, உயர்ந்த பதவி அடைய ஆசைப்படுவது தீயகுணமா?
இத்தகைய ஆவல் நல்லது தான். ஆனால் அகங்காரம், பேராசை, கடமையை அலட்சியம் செய்தல் முதலிய தீய குணங்கள் இவற்றால் உண்டாகாதபடி கவனமாயிருக்க வேண்டும்.