வேதசாஸ்திரிகளின் இளவரசராகிய அர்ச். தாமஸ் அக்குயினாஸ் பூசையைப் பற்றிக் கூறும் அழகிய வார்த்தைகள் இதோ:
பூசைப் பலியானது, சாவான பாவத்தில் இருக்கும் பாவிகளுக்கு மனஸ்தாப வரத்தைப் பெற்றுத் தருகிறது. தேவ இஷ்டப்பிரசாத அந்தஸ்தில் இருப்பவர்களுக்கோ அற்பப் பாவங்களுக்கு மன்னிப்பும், பாவத்தின் நிமித்தம் வரும் அநித்திய தண்டனையிலிருந்து விடுதலையும் பெற்றுத் தருகிறது. வழக்கமான வரப்பிரசாதமும் (அதாவது தேவ இஷ்டப்பிரசாதமும், அவர்களுடைய விசேஷ தேவைகளுக்கு அவசியமான எல்லா வரங்களையும் அது பெற்றுத் தருகிறது, இந்த வரப்பிரசாதங்கள் அவர்களில் அதிகரிக்கச் செய்கிறது.''
அர்ச். வனத்துச் சின்னப்பர் ஒரு முறை ஒரு கோவில் வாசலின் அருகில் நின்று கோவிலுக்குள் நுழைபவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு மனிதன் உள்ளே நுழைந்தான். அவனது ஆத்துமம் ஏராளமான சாவான பாவங்களால் எந்த அளவுக்கு அழுகிப் போயிருந்தது என்றால், அந்தக் காட்சி சின்னப்பரின் மனதில் பெரும் திகிலை ஏற்படுத்தியது. போதாததற்கு அவன் அருகில் ஒரு பசாசும் நின்றுகொண்டிருந்ததை சின்னப்பர் கண்டார். அது அவன் மீது முழு அதிகாரம் கொண்டிருந்தது போலத் தோன்றியது. பூசைக்குப் பிறகு அதே மனிதன் வெளி வருவதைக் கண்ட அர்ச். சின்னப்பர் பெரும் ஆச்சரியமும், மகிழ்ச்சியும் அடைந்தார். ஏனெனில் இப்போது அந்த மனிதனின் ஆத்துமம் மிக அழகானதாயிருந்தது. அவன் அருகில் இருந்த பேயையும் இப்போது காணவில்லை. அந்த மனிதனின் தோற்றமே ஓர் ஒட்டுமொத்தமான மாற்றத்திற்கு உள்ளாகியிருந்தது.
ஆகவே நம் அர்ச்சிய சிஷ்டவர் அவனிடம் சென்று, அவன் தன் பாவங்களுக்காக மனஸ்தாபப்பட்டானா என்று இரகசியமாகக் கேட்டார். அந்த மனிதன் உடனே அவரிடம் நடந்ததை விவரிக்கத் தொடங்கினான்: ''நான் ஒரு பெரும் பாவி. ஏராளமான , கனமான பாவங்கள் செய்திருக்கிறேன். இன்று பூசையின் போது, என் ஜெபப் புத்தகத்தில், ''உன் பாவங்கள் செந்தூரத் தைப் போலச் சிவந்திருந்தாலும், நான் அவற்றை உறைபனி யைப் போல் வெண்மையாக மாற்றுவேன்" என்ற வார்த்தை களை நான் வாசித்தேன். உடனே நான் சர்வேசுரனிடம் என் பாவங்களை மன்னிக்கும்படி மன்றாடத் தொடங்கினேன். உண்மையாகவே நான் என் சகல பாவங்களுக்காகவும் மிகவும் மனஸ்தாபப்படுகிறேன். உடனடியாகப் பாவசங்கீர்த் தனம் செய்யவும் ஆசையாயிருக்கிறேன்" என்றான் அவன்.
அர்ச். சின்னப்பர் தேவ இரக்கத்திற்கு நன்றி செலுத் தினார். தன்னுடைய உத்தம மனஸ்தாபத்தால், பூசையின் அளவற்ற பேறுபலன்களின் வழியாக, அவன் தன் சகல பாவங்களுக்கும் ஏற்கெனவே மன்னிப்புப் பெற்று விட்டான் என்பதை அவர் அறிந்து கொண்டார்.
நம் ஆண்டவர் அர்ச். மெட்டில்டம்மாளிடம் கூறிய வார்த்தைகள் :
''பூசையில் எப்பேர்ப்பட்ட தாழ்ச்சியுடன் நான் வருகிறேன் என்றால், நான் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லாத பாவி என்று யாரும் உலகில் இல்லை. அவன் எவ்வளவு கெட்டுப்போனவனாகவும், கொடியவனாகவும், அசுத்தனாகவும் இருந்தாலும், அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. என்னால் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்று அவன் விரும்பினால் போதும். எப்படிப்பட்ட இனிமையோடும், இரக்கத்தோடும் நான் வருகிறேன் என்றால், என் மிகப்பெரும் எதிரிகளும் கூட என்னிடம் மன்னிப்பை மன்றாடுவார்கள் என்றால், நான் அவர்களை மன்னிப்பேன்.
எத்தகைய தாராளத்தோடு நான் வருகிறேன் என்றால், என் அன்பின் செல்வங்களைக் கொண்டு என்னால் நிரப்பப்பட முடியாத அளவுக்கு மிகவும் ஏழ்மை யான மனிதன் எவனுமில்லை . அனைவரிலும் அதிக பலவீன மானவர்களையும் பலப்படுத்தும் பரலோக உணவோடும், அனைவரிலும் அதிகக் குருடானவர்களையும் ஒளிர்விக்கக் கூடிய ஒளியோடும், சகல நிர்ப்பாக்கியங்களையும் அகற்று. பவையும், சகல பிடிவாதங்களின் மீதும் வெற்றி கொள் பவையும், சகல பயங்களையும் அகற்றுபவையுமான வரப்பிரசாதங்களின் முழுமையோடும் நான் வருகிறேன்."
எப்பேர்ப்பட்ட வார்த்தைகள்! சர்வேசுரனுடைய வார்த்தைகள்! தேவ ஆறுதலை நிரம்பத் தரும் வார்த் தைகள்! திவ்விய பலிபூசையைப் பற்றி வேறு எதையும் நாம் கேள்விப்பட்டதில்லை என்றாலும், இந்தப் பரம இரகசியங் களின் மீதுள்ள விசுவாசத்தாலும், நம்பிக்கையாலும் நம்மை நிரப்ப இந்த வார்த்தைகளே போதுமானவையாக இல்லையா?
அர்ச். நாஸியான்சென் கிரகோரியார்: இந்த மாபெரும் அர்ச்சியசிஷ்டவரின் வாழ்வில், நாம் ஒரு நிகழ்ச்சியை வாசிக்கிறோம். அவருடைய தந்தை ஒரு முறை கடுமையாக நோய்வாய்ப்பட்டு சாகும் தறுவாயில் இருந்தார். அவர் எந்த அளவுக்கு மோசமான உடல் சோர்வுக்கு உள்ளானார் என்றால், கை, கால்களை இலேசாக அசைக்கக்கூட அவரால் முடியவில்லை . அவருடைய நாடித்துடிப்பும் மிக மிகப் பலவீனமாக இருந்தது. அவரால் எந்த உணவும் உட்கொள்ள முடியவில்லை . இறுதியாக அவர் தம் சுய நினைவையும் இழந்து விட்டார்.
அவருடைய குடும்பத்தினர் மனித ரீதியான எல்லா முயற்சிகளையும் செய்து பார்த்தபின், கடவுளிடம் தங்கள் நம்பிக்கையை வைத்து, அருகிலிருந்த கோவிலுக்குச் சென்றனர். அங்கே நோயாளி குணம் பெறுவதற்காக பூசை நிறைவேற்றப்பட்டது.
அவர்கள் வீட்டுக்குத் திரும்பி வந்தபோது, நோயாளி ஆபத்தான நிலையைக் கடந்து, கண்விழித்திருந்தார். விரைவில் அவர் பூரண உடல் நலம் பெற்றார்.
ஆர்ஸின் புனித குருவாகிய அர்ச். மரிய வியான்னி அருளப்பர் ஒரு முறை கடுமையாக நோய்வாய்ப்பட்டார். மருத்துவர்கள் அருகிலிருந்து இடைவிடாமல் அவருக்கு சிகிச்சையளித்தும் பலனில்லை. அவருடைய நிலை வேகமாக மோசமாகிக் கொண்டே வந்தது. பிழைப்பார் என்ற நம்பிக்கையே அற்றுப் போயிற்று.
இந்நிலையில் அவர் தம்மோடு இருந்தவர்களிடம், அர்ச். பிலோமினம்மாளின் பீடத்தில் தமக்காக ஒரு பூசை வைக்கச் செய்யும்படி கேட்டுக்கொண்டார். பூசை முடிந்த கணமே அவர் முழுமையாக குணம் பெற்று எழுந்து, தம் வேலைகளைக் கவனிக்கலானார்.
லிஸ்பன் நகரத்தில் ஒரு பெண் மரணத்துக்கு ஏது வான நோய்வாய்ப்பட்டு, சாகும் தறுவாயில் இருந்தாள். மருத்துவர்கள் அவள் குணமாக வாய்ப்பில்லை என்று கைவிட்டு விட்டனர். ஒரு பயங்கரமான புற்று நோயால் அவள் அவதிப்பட்டுக் கொண்டிருந்தாள். அறுவை சிகிச்சை செய்யக்கூட வாய்ப்பில்லை என்னும் அளவுக்கு அவளுடைய நோய் முற்றியிருந்தது.
அவள் முழுமையாகக் குணம் பெறும்படியாக அவளுக்காக ஒரு பூசை ஒப்புக்கொடுக்கப்பட வேண்டும் என்று அவளுடைய ஆன்ம குரு ஆலோசனை கூறினார்.
இந்த ஆலோசனையை அந்த இளம்பெண் மகிழ்ச்சி யோடு ஏற்றுக் கொண்டாள். அர்ச். சாமிநாதருக்குத் தோத்திரமாக பூசை ஒப்புக்கொடுக்கப்பட்டது. அதன் அளவற்ற வல்லமையின் காரணமாக, அக்கணத்திலிருந்தே இந்தப் பெண் தன் நோயிலிருந்து குணமாக ஆரம்பித்ததைக் கண்டு அவளது நண்பர்கள் மகிழ்ச்சியடைந்தனர். மருத்துவர்கள் நடந்த இந்தப் புதுமையைக் கண்டு வியந்து போயினர்.
நம் கிறிஸ்தவக் குடும்பங்களில் எவ்வளவு அடிக்கடி பெற்றோர், சகோதரர்கள், சகோதரிகள் நோயில் விழுந்து, மரணம் வரைக்கும் கடும் அவஸ்தைப்படுவதை நாம் பார்க் கிறோம்! பிரசித்தி பெற்ற மருத்துவர்கள் வரவழைக்கப் படுகிறார்கள், விலையுயர்ந்த மாத்திரை, மருந்துகள் வாங்கப் படுகின்றன. ஆனாலும் நமக்குப் பிரியமானவர்களின் வேதனையைத் தணிக்கவோ, அல்லது அவர்கள் குணம் பெறுவதைத் துரிதப்படுத்தவோ நம்மால் முடிவதில்லை.
தேவ சித்தத்தை நம்மால் தடுக்க முடியாதுதான். ஆனாலும் சகல மருந்துகளிலும் அதிக வல்லமையுள்ள மருந்தாகிய திவ்விய பலிபூசையை நாம் ஏன் மறக்க வேண்டும், ஏன் அதை அலட்சியம் செய்ய வேண்டும்?
அந்த லிஸ்பன் நகரப் பெண்ணுக்கு நிகழ்ந்தது போல், தங்களுக்கென பூசைகள் நிறைவேற்றப்பட்டிருந் தால், இன்று தங்கள் கல்லறைகளில் படுத்திருக்கும் எத்தனை ஆண்களும், பெண்களும், இப்போது உயிரோடு, நலமாக, இருந்திருக்கக் கூடும்!
திவ்விய பலிபூசையின் அளவற்ற பேறுபலன்களில் மனிதர்கள் விசுவாசமும், நம்பிக்கையும் கொண்டிருந்திருப்பார்கள் என்றால் எத்தனை நிர்ப்பாக்கியங்களும், விபத்துக்களும் தவிர்க்கப்பட்டிருக்கும்!
பூசையின் நற்பயன் விளைவிக்கும் தன்மையை மட்டும் கத்தோலிக்கர்கள் புரிந்து கொள்வார்கள் என்றால், அதில் கலந்து கொள்ளப் படையெடுத்து வரும் மக்கள் கூட்டங்களுக்கு உலகிலுள்ள அனைத்துக் தேவாலயங் எகளுமே போதாதவையாக இருந்திருக்கும்.
கிறீஸ்தவத் தாய்மார்கள் தங்கள் குடும்பங்களுக் காகப் பூசை கண்டு, அவற்றை ஒப்புக்கொடுத்து வந்தால், அதை விட அதிகமாக, தங்களுக்குப் பிரியமானவர்களை அவர்களுடைய இளம் பருவத்திலிருந்தே பூசை காணப் பழக்கியிருந்தார்கள் என்றால் அது கடவுளுக்குப் பெரும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும்!