இரண்டாம் கற்பனை - பொது வியாக்கியானம்

1. இரண்டாம் கற்பனையைச் சொல்லு.

“சர்வேசுரனுடைய திருநாமத்தை வீணாகச் சொல்லாதிருப் பாயாக.” 


2. “வீணாகச் சொல்லாதே” என்பதற்கு அர்த்தமென்ன?

தக்க முகாந்தரமில்லாமல் சொல்லாதே என்று அர்த்தமாம்.


3. முதல் கற்பனைக்கும் இரண்டாம் கற்பனைக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது?

முதல் கற்பனை மனதிலும், உண்மையிலும் சர்வேசுரனை ஆராதிக்க நம்மைத் தூண்டுகிறது.  இரண்டாவது கற்பனை வார்த்தைகளினால் அவருக்குச் சங்கை செய்து ஆராதனை செலுத்தத் தூண்டுகிறது.


4. இரண்டாம் கற்பனை நமக்குக் கற்பிக்கிறதென்ன?

(1) சர்வேசுரன் ஆதிகர்த்தரும், சகலத்துக்கும் ஆதிகாரணரு மாயிருப்பதினால், “உமது நாமம் அர்ச்சிக்கப்படுவதாக” என்று நமது ஆண்டவர் நமக்குப் படிப்பித்ததுபோல் (லூக். 11:2) அவருடைய திருநாமத்தை நாம் மகிமைப்படுத்தவும்;

(2) தேவமாதா, சம்மனசுகள் முதலிய அர்ச்சியசிஷ்டவர்களைப் பற்றியும், சர்வேசுரனுக்கு வசீகரம் பண்ணப்பட்ட ஆட்கள், பரிசுத்தமான பொருட்களைப் பற்றியும் சங்கை வணக்கத்தோடு பேசவும்;

(3) நாம் கொடுத்த வார்த்தைப்பாட்டையும், பொருத்தனை யையும், செய்த நியாயமான சத்தியப்பிரமாணத்தையும் நிறைவேற் றவும் கற்பிக்கிறது.


131.  இரண்டாம் கற்பனையால் சர்வேசுரன் நமக்குக் கற்பிப்பதென்ன?

தேவதூஷணமாய்ப் பேசுவதும், சாபமிடுவதும், பொய்யாணை, பொய்ச் சத்தியம் செய்வதும், நியாயமான சத்தியப் பிரமாணிக்கங் களையும், பொருத்தனைகளையும் செலுத்தாமல் இருப்பதும் பாவம் முதலியவைகளாம்.