23. சகல மோக்ஷவாசிகளைப் பற்றிப் பொதுவாய்ச் சொன்னதெல்லாம் விசேஷமாய்த தேவமாதாவைப் பற்றிச் செல்லும் அல்லோ. ஆகிலும் மற்ற வான் மீன்களைத் நீண்டாத கரியதோர் பாம்பு, முழுதும் ஒளி விளங்குகிற பூரண மதியை விழுங்க வருமென்று இந்நாட்டில் வழங்கும் கதை மெய்யானாற் போலப் பதிதர் அனைவரும், மற்ற மோக்ஷவாசிகளைப் பகைத்தாலும் எவ்வுலகனைத்தும் விளங்கிய குளிர்ந்த கதிரை வீசுந் தயையுள்ள பரம தேவதாயை விசேஷமாய்ப் பகைத்து முழுதும் அவளை விழுங்க ஊத்தையும், அழலும் ஒழுகி நாறுந்தமது நரக வாயைத் திறந்து தூஷணங்களைக் கக்கிக்கொண்டுத் திரிகிறார்கள்.
ஆகிலும் பாவம் விளைவிக்கப் பிறந்த சமயங்களாகையில் சகல பாவங்களைத் தீர்க்கும் அமிர்தமுமாகிப், பாவத்திற்கு முதற்காரணமாகிய பசாசின் தலையை மிதித்தவளுமாகி, வானோருக்கு அரசியாகிய அர்ச். மரியாயென்பவளை அச்சமயத்தார் எல்லாரும் பகைப்பது அதிசயமல்ல. தேவமாதாவுக்கு இதனால் ஒரு குறையும் இல்லை. பாவத்தை விட்டுத் திரும்புவதற்கு ஆசையுள்ள பாவிகளுக்கெல்லாம் அடைக்கலமும், ஆதரவும் ஆதலால் பரம நாயகியுடைய தயையின் பெருமையாவது போல மெய்வழி விட்டுப், புண்ணிய நெறியைப் பகைத்த பாவிகள் வாயால் இகமுப்படுவதே அவளுக்கு உயர்ந்த புகழ்ச்சியாகும். ஆகிலும் இதிலே தெளிவாய் நடக்கும்படிக்குத் திருச்சபை தேவ மாதாவுக்குச் செய்யும் ஆராதனை ஏதென்று முந்தி விளக்கக் கடவோம்.
29. ஆகையால் பாவத்தில் அமிழ்ந்திக் கெட்ட மனிதரை இரட்சிக்கும்படிக்குச் சர்வேசுரன் தாமே மனிதனாய்ப் பிறக்கக் கன்னி முத்திரை கெடாமல் தமக்குத் தாயாக அர்ச். மரியாயென்பவளைத் தெரிந்து கொண்டாரென்றும், அறிந்து, திருச்சபை சர்வேசுரனுக்குப் பின்பு சகல மோக்ஷவாசிகளுக்கும், சம்மனசுகளுக்கும் மேலாக அவளை எண்ணித், தேவ ஆராதனை நீங்கி, உத்தம ஆராதனையாகப் பரிசுத்தக் கன்னியும், தேவமாதாவுமாய் நிகரொன்றின்றி விளங்கும் பரம நாயகியாகிய அர்ச். மரியாயென்பவளை வணங்கவும், அவளை இருண்ட அக்கியானத்திற்கு ஒளியும், பகைத்த பசாசின் பேரில் வெற்றியும், அடைந்த துன்பத்தில் ஆதரவும், வந்த நோய்க்கு ஆரோக்கியமும், அழுவாருக்கு ஆறுதலும், மெலிந்தாருக்கு உறுதியும், கல்லாருக்கு உணர்ச்சியும், எவருக்குங் கிருபை தயாபமுள்ள தாயுமாக எண்ணி மன்றாடவும், தேவமாதா ஆராதனையின் முறையாமே.
நோயுள்ள கண் ஒளிமிகுதியைப் பொறுக்கமாட்டாததுபோல, இவ்வுத்தம வகை ஆராதனையை மதிகெட்ட பதிதர் பொறாமல், தன் தலையை மிதித்தவளாகிய அவள்மேல் தீராப் பழியை வைத்த பசாசினால் ஏவப்பட்டு வணக்கம் ஆகாதென்றும், அக்கியானமென்றும் வெட்கமின்றி உலகெங்கும் கரிந்து நாற்றம் வீச தூஷணங் கக்கிக்கொண்டு திரிகிறார்கள்.
30. ஆகையால் பதிதர் சொன்னதை ஆராய்ந்து வெளியாக்கக் கடவோம். அர்ச். லூக்காஸ் எழுதின சுவிசேஷத்து 11-ம் அதிகாரம் 27ம் வசனந் துவக்கி, நம்முடைய கர்த்தரான சேசுநாதர் விரிவாய் அருளிச்செய்த உத்தம உணர்ச்சிகளை மகிழ்ந்து கேட்ட ஒருத்தி, மனதில் பூரித்த இன்பம் உள்ளடக்க மாட்டாமல் பேரொலியாகக் கூப்பிட்டுச் சுவாமியை நோக்கி: உம்மைச்சுமந்த உதாரமும், நீர் அமுதுண்ட கொங்கைகளும் பாக்கியம் பெற்றதுகளாமே என்றாள். அதற்குச் சேசுநாதர்: இதிலேயுஞ் சர்வேசுரன் திருவசனங்களைக் கேட்டு, ஒத்து நடப்பவர் பாக்கியம் பெற்றவரென்றார். ஆகையால் தம்மைப் பெற்ற தாயைப் புகழ்ந்த வார்த்தையை மறுத்துச் சேசுநாதர் தேவமாதாவின் ஆராதனை ஆகாதென்று பதிதர் சொல்லுகிறார்கள்.
ஆகிலும் அதிலேயும் இது தாவிளை என்ற போது, முன் சொன்னதை மறுத்த வகையோ அல்ல. அதை ஒத்துக்கொண்டு, இரண்டிலும் பின் சொன்னது அதிகமென்பது அர்த்தமாகும். அப்படித்தானே சந்திரன் ஒளியினும், சூரியன் ஒளி பெரிதென்றால் இதனால் சந்திரனுக்கு ஒளியில்லை என்பதாமோ இல்லையே. ஆகையால் நம்மைச் சுமந்த உதரமும், நாம் பால் உண்ட கொங்கையும் புகழப்படுவது நியாயந்தானே. ஆகிலுந் தேவ வாக்கியங்களைக் கேட்டு வழுவாமல் நடப்பவரை, அதிலேயும் புகழ்வது நல்லதென்று சேசுநாதர் திருவுளம் பற்றினார்.
31. மீளவும் இந்த வார்த்தையைக் கொண்டு சேசுநாதர் தம்மை ஈன்ற தாயைப்பார்க்கத் தேவ வசனங்களைக் கேட்டு, நன்னெறி வழுவாத மற்ற அறிவுடையோர்களை உயர்த்தினாரென்று நினைக்கவும் வேண்டாம் இது வெளியாகும்படிக்கு ஓர் உவமை சொல்லிக் காட்டுவோம். ஆயுதமின்றி நின்ற ஒருவன் பகைவர் தன்னை வெட்ட வருவதைக் கண்ட அளவில் அருகே நின்ற கோட்டையில் நுழைய ஓடிப்போகாமல், ஐயோ தம் பகைவர் கையில் அகப்படாமல், பறவைகள் ஆகாயத்தில் பறக்கும் விசையைப்பார், அதுகளே பாக்கியமுள்ளதுகள் என்றான். அதனைக்கேட்டு, மதிவல்லோன் ஒருவன்: விசையோடு ஆகாயத்தில் பறக்கும் பறவையிலும் நீ ஓடிக் கோட்டையில் நுழைந்து உன் உயிரைக் காத்தல் நீயே பாக்கியமுள்ளவன் என்றான். என்றாலும் பறவை பறக்கும் விசையிலும் இவன் ஓடும் ஓட்டத்தை உயர்த்தினானென்று எண்ணலாமோ இல்லையே.
அவன் சொன்னதற்கு அர்த்தம் ஏதெனில், பறவை பறக்கும் விசை அதிகந்தானே, ஆகிலும் அதனால் உனக்கு ஆவதென்ன? நீ பறக்கக் கூடாமையால் அதிலேயும் உனக்கு உன் கால் ஓட்டமே நல்லதென்பதாமே. அவ்வண்ணமே சேசுநாதர் முன் சொன்னதற்கு அர்த்தம் ஏதெனில், நம்மைப் பெற்ற தாய் அடைந்த பாக்கியம் நிகரொன்றில்லாத உத்தமம் அதுதானே. ஆகிலும் வான் மேல் வாழுஞ் சம்மனசுகளுக்கு முதலாய் எட்டாத பாக்கியமாகையில், நீ அதைப் புகழ்ந்து, ஆசைப்படுவது என்ன? தேவ திரு வாக்கியங்களைக் கேட்கவும், அதின்படியே நடக்கவும், பசாசு செய்யும் பகையில் அகப்படாதபடிக்கு வேண்டியிருக்கையில், முன் சொன்னதிலேயும், இதுவே உனக்கு வேண்டிய பாக்கியம் என்பதே சேசுநாதர் முன் திருவுளம் பற்றினதற்கு அர்த்தமாகும்.
32. இதுவுமன்றி அத்திரு வசனத்தைக் கொண்டு, சேசுநாதர் எவருக்குஞ் சொன்ன உணர்ச்சியாவது : ஆண்டவர் கட்டளையிட்ட நியாயத்தைக் கேளாமலும், அவர் காட்டிய நெறியில் நடவாமலும், தம்மைப் பெற்ற பரிசுத்தக் கன்னியாகிய தேவமாதாவை வணங்கினாலும், அதனால் பலன் ஒன்றுமில்லையென்று காட்டினார். இது வெளியாகும்படிக்கு அர்ச். லூக்காஸ் எழுதின சுவிசேஷத்திற்றானே 23- ம் அதிகாரம், 28 - ம் வசனத்தில் எழுதப்பட்டதைச் சொல்லிக் காட்டுவோம். நம்முடைய கர்த்தராகிய சேசுநாதர் சிலுவையைச் சுமந்து கபாலமலைமேல் ஏறுகிறபோது பத்தியுள்ள சில ஸ்திரீகள் அவர் மேல் இரங்கி, விம்மி மிகவும் அழுது கொண்டிருந்தார்கள். அவர்களை நோக்கிச் சேசுநாதர் திருவுளம் பற்றினதாவது: எனக்காக இரங்கி அழவேண்டாம்; உங்களையும், உங்கள் மக்களையும் பார்த்து நொந்து அழக்கடவீர்களென்றார்.
ஆகையால் சேசு நாதர் நம்மை இரட்சிக்கும்படி அளவிறந்த தயை பொருந்திப் பாடுபட்ட அகோர கஸ்தி நோவுகளைத் தியானித்து, மனமிரங்கிக் கண்ணீர்விட்டு அழுவது ஆகாதோ. மதிகெட்டவனாயினும் ஆகாதென்று சொல்ல மாட்டான். ஆகையால் அதற்கு அர்த்தம் ஏதெனில், ஒருவன் தன் பாவங்களை நினைத்து மனஸ்தாபப்படாமலும், அதுகளை வெறுத்து நொந்து அழாமலும் பாவத்திற்காகப் பாடுபட்ட கர்த்தர்மேல் இரங்கி அழுதால் பலனில்லாத இரக்கமென்று அர்த்தமாகும். அவ்வண்ணமே முன் சொன்ன உதாரணத்திலும் ஆண்டவர் சொன்ன புத்திகளைக் கேளாதவனும், கேட்டு நடவாதவனும், நம்முடைய தாயைப் பாக்கியமுள்ளவளென்று புகழ்ந்ததினால் பலன் ஒன்றுமில்லையென்பது அர்த்தமாகும்,
33. இங்கே நாம் சுலபமாய்ச் சொன்னதை யோசித்துப் பார்க்கில், அந்த ஸ்திரீயானவள் தேவமாதாவை வணங்கிச் சொன்ன புகழ்ச்சியைச் சேசுநாதரும் ஒத்துக்கொண்டு, நல்லதென்றாரொழிய, அதனை மறுத்துத் தேவமாதாவை வணங்கவும், புகழவும் வேண்டாமென்றாரென்று மதிகெட்டவனுக்குத் தோன்றுமல்லாமல், நல்ல அறிவுடையோர் சொல்லவும், கருதவுமாட்டார்கள். ஆகையால் பகைவராகிய பதிதர் தேவமாதாவின் மேல் எய்த அம்புகளைத் திருப்பி முறிந்துபோன அவர்கள் மனம் புண்ணாகி வருந்தும்படிக்கு நாமே பரம தேவதாயை ஸ்துதித்து, ஞான உணர்வில் தெளிந்த அந்த ஸ்திரீயோடு ஒரு மிக்கத் திருப்புகழாகச் சொல்லக்கடவோம்.
மனிதனாகிய கடவுளைச் சுமந்த உதரமே வாழ்க . கன்னிமலர் கெடாக் கனியைத் தந்த உதரமே வாழ்க. உயிர்க்கெல்லாம் உணர்வினைத் தந்தவருக்கு அமுது ஊட்டிய கொங்கைகளே வாழ்க. எம் கண் மகிழ அரூபியானவரை உருவாக்கினவளே வாழ்க. நம்மை இரட்சிக்கச் சிந்தின குருதியைத் தந்தவளே வாழ்க. வானோருக்கு அரசியே வாழ்க. ஈனோருக்கு உறுதியே வாழ்க. வானுலகின் அழகே வாழ்க. பூவுலகின் உயிரே வாழ்க. தீயுலகின் அதிர்வே வாழ்க. வேதம் விளக்கும் சுடரே வாழ்க. உயிரைப் புரக்கும் அருட்கடலே வாழ்க. நோய் தீர் அமிழ்தே, மருள் தீர் ஒளியே, துயர் தீர் மகிழ்வே, கதிக்கரையே, புவித் துணையே, கருணாகரியே, உயிரே, அமுதே, அருளே வாழ்க. எங்கும் புகழத்தகுந் தாயே வாழ்க. எல்லோராலும் புகழப்படுந் தாயே வாழ்க. பரம தேவதாயே வாழ்க. பதிதர் அஞ்சுந் திறத்தியே வாழ்க. பத்தர் பகைக்குஞ் செல்வியே வாழ்க. பதிதரை நல்வழி திருப்பும் அரசியே வாழ்க, வாழ்க.
34. இவ்வண்ணமே பதிதர் முதற்படை வெட்கி முறிந்துபோன பின்பு, மறு படையாகச் சிலரும் வந்து, அர்ச். அருளப்பர் எழுதின சுவிசேஷம் 2-ம் அதிகாரத் துவக்கத்திலுள்ள வர்த்தமானத்தை ஆயுதமாக ஏந்திக் கொண்டு தேவமாதாவைப் பகைத்து எதிர்ப்பார்கள். ஆகிலுந் தேவமாதா துணையைக் கொண்டு நாமே அவர்கள் எறிந்த அம்பை அவர்கள் மேல் திருப்பித் தேவமாதா ஆராதனை ஒழிப்பதற்கு அவா்கள் சொன்னதைக்கொண்டு, அந்த ஆராதனையின் முறையை ஒப்பித்து அதனை விளக்கிக் காட்டுவோம்.
ஆகையால் அர்ச். அருளப்பர் எழுதின வர்த்தமானம் ஏதெனில், கானாவென்னும் ஊரில் ஒரு கலியாணத்திற்குச் சேசுநாதரும், அவருடைய திவ்விய மாதாவும், சீஷர்களும் வந்திருந்தார்கள். நடு விருந்திலே முந்திரிகைப்பழத்து இரசம் இல்லாததை அறிந்த தயாபரியாகிய தேவமாதா, தன் திருக்குமாரனை நோக்கி: இரசம் இல்லையென்றாள். அதற்குச் சேசுநாதர் ஸ்திரீயே உமக்கும் நமக்கும் காரியமென்ன, நம்முடைய காலம் இன்னம் வந்ததில்லையென்றார். என்றாலும் அவர் மனதை அறிந்த மாதா, ஏவற் செய்வோரைப் பார்த்து, இவர் சொன்னபடி செய்யுங்களென்றாள். சேசுநாதரும் அங்கே இருந்த ஆறு சாடிகளில் நிறையத் தண்ணீரை ஊற்றச் சொன்னபடி ஊற்றின பின்பு, அதில் எடுத்து வார்த்துக் குடித்த இடத்தில், உத்தம இம்சமாகக் கண்டு அதிசபப்பட்டார்களென்று அர்ச். அருளப்பர் எழுதிவைத்தார்.
ஆகையால் சேசுநாதர் உமக்கும் நமக்கும் காரியமில்லையென்று மாதாவுக்குச் சொன்னபோது, மாதாவை நினையாமல் அவள் நமக்காக மன்றாட, நாம் வேண்டிக் கொள்ளத் தேவையில்லையென்றாற்போல் ஆயிற்றென்று பதிதர் சொல்லுவார்கள். நாமோவெனில் சேசுநாதர் தாம் புதுமை செய்யும் நேரம் இன்னம் வராதிருந்தாலும், தேவ மாதாவின் வார்த்தையை மறுக்கமாட்டாமல் உடனே அப்புதுமை செய்தமையால் எல்லோருந் தேவமாதாவை வணங்கவும், தமக்கு வேண்டிய வரங்களைத் தப்பாதடையும்படிக்கு எல்லோரும் அவளை மன்றாடவும் படிப்பித்தாபொன்போம். என்றாலும். இது நியாயத்திற்கு ஒத்திருக்கு மென்று ஒப்பிப்பது எளிதே . அதெப்படியெனில் :
நம்மை இரட்சிக்க அவதரித்து இங்கே பிறந்த சேசுநாதர் பாடுபட்டு இரட்சித்ததும், எவருக்கும் வழுவா ஒழுக்க நெறியைக் காட்டிப் போதித்ததும் அதல்லாமல் தம்மைக் கடவுளென்றும், தாம் போதித்த வழி மெய்யான வேதமென்றும் ஒப்பிக்க மட்டில்லாத புதுமைகளைச் செய்தார். ஆகிலும் தாம் புதுமை செய்யுமுன்னே தேவ மாதாவைக் கொண்டு செய்வித்தார். அதுவுமன்றி தாம் செய்த முதல் புதுமை மாதாவைக் குறித்துச் செய்யத் திருவுளமானார். அதெப்படியென்றால் :
அர்ச். லூக்காஸ் எழுதின சுவிசேஷம் முதல் அதிகாரத்தில் 39-ம் வசனந் துவக்கி: ஆண்டவர் தேவமாதா திரு வயிற்றில் அவதரித்தவுடனே தேவமாதா எலிசபேத்தம்மாளண்டை போய் அவள் கருப்பத்திலிருந்த ஸ்நாபக அருளப்பர் புதுமையாகச் சென்மப் பாவந்தீர்ந்த உணர்வம் அடைந்து, தாய் வயிற்றில் குதித்துக் கூடினவகையாய் ஆண்டவரையுந் தேவமாதாவையும் வணங்கித் துதித்தார். அப்பொழுது எலிசபேத்தம்மாள் தேவமாதாவைப் புகழ்ந்து ஸ்திரீகளுக்குள்ளே ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே என்ற பின்பு, நீர் என்னை மினவின சத்தம் என் காதில் விழுந்தவுடனே என் வயிற்றிலுள்ள பிள்ளை மகிழ்ச்சி மிகுதியால் குதித்ததென்றாள். ஆகையால் சேசு நாதர் தாம் புதுமை செய்யுமுன்னமே தமது மாதா புதுமை செய்யத் திருவுளமானார். பின்பு சொன்ன கலியாணத்தில் தாம் முதல் புதுமை செய்யும்போது தேவமாதாவை உத்தேசித்துச் செய்தாரல்லோ.
35. மீளவும் இது அதிகமாய் வெளியாகும்படிக்கு யோசிக்கவேண்டியதாவது: புதுமையானது சுபாவமுறையைக் கடந்த செய்கையாகையால் அதனை முடிக்க அளவிறந்த பலம் வேண்டியதொழிய அதனைச் செய்யத் துணிவதற்கு மிகுந்த தயையும் வேண்டியிருக்கிறது. ஆகையால் சொன்ன கலியாணத்தில் சம்பவித்த புதுமை செய்யச் சேசுநாதருக்கு அளவிறந்த பலமிருந்தாலும் இன்னந் தமது காலம் வரவில்லை என்றதினால் அதனைச் செய்யத் துணிவதற்குக் குறித்த தம் தயையின் நேரம் இல்லாதிருந்ததாம். இல்லாதாயினுந் தேவமாதாவின் தயை முந்தினதினால் அவள் தயையைக்கொண்டு துணிந்து தம் பலத்தோடு புதுமையைச் செய்தார்.
ஆகையால் அருளப்பரிடத்திலான புதுமையைத் தன் திருக்குமாரன் பலத்தைக்கொண்டு தேவமாதா செய்தாள்; கலியாணத்திலான புதுமையைத் தேவமாதாவின் தயையைக்கொண்டு திருக்குமாரன் செய்தார். இது எல்லாமாகையில் சேசுநாதர் நடத்தின முறையினால் நமக்குப் படிப்பித்ததாவது: உயிர் உடல் இரண்டும் பிழைக்க வேண்டிய யாவையுந் தப்பாதடைவதற்கு ஆசையுடையவர்களாகில் நம்மைக் கன்னிமை கெடாமல் ஈன்ற தாயை அண்டி, அவளை வேண்டிக்கொள்ளக் கடவீர்களாக. அவளும் உங்கள் வேண்டுதலைக் கேட்டு இரங்குவாளாகில் அவள் இரக்கத்தை மறுக்கமாட்டாமல், நாமும் புதுமை வேண்டினும் புதுமையே செய்து உங்களை இரட்சிப்போம் என்றாற்போல ஆச்சுதென்று சலஞ்சாதியாமல் சொன்னதை ஆராய்ந்த யாவருக்குந் தோன்றும் என்பதற்கு ஐயமில்லை.
36. இதுவே உச்சிப் பகலினும் விளக்கமாகும்படிக்கு ஒரு உவமையால் இதனை வெளிப்படுத்துவோம். அதாவது: இராசாவானவன் ஒருவன் மேல் மிகவும் நட்பு வைத்தமையால் அவனை எவராலும் எங்கும் வணங்கப்பட்டு விளங்கச் செய்வதற்கு உபாயம் என்னவென்று நெடுநாளாய் ஆராய்ந்த பின்பு, கொலுவில் வந்த நேரமெல்லாம் இராசா அவனை அழைத்துக் காதில் சில செய்திகளைச் சொல்லவும் அவனைக்கொண்டு சிலருக்கு வரிசை செய்யவும் அவன் கேட்ட மன்றாட்டை மறுக்கமாட்டாமல் அருளவுந் துவக்கினான். இதனைக் கண்ட யாவரும் இராசா அவன் மேல் வைத்த நட்பை அறிந்து, அவனை வணங்கவும் தமக்காக வேண்டி அவனே இராசாவை மன்றாடச் சொல்லவுஞ் செய்தார்கள்.
அவ்வண்ணமே சேசுநாதர் தாம் புதுமை செய்யு முன்னே தேவமாதாவைக்கொண்டு செய்வித்ததும், தாமே செய்த முதல் புதுமை தேவமாதாவின் வார்த்தையை மறுக்கமாட்டாமல் செய்ததுங் கண்டமையால், சேசுநாகர் நோக்கத்தை அறிந்து திருச்சபை தேவமாதாவை வணங்கவும், நமக்காக அவள் ஆண்டவரை வேண்டும்படிக்கு மன்றாடவுங் கற்பித்த முறையே வேகத்திற்கு ஒத்த முறை எனத்தகும். இது இப்படியாகையில் தேவமாதா இரசம் இல்லை என்றதற்கு உமக்கும் நமக்கும் காரியம் என்ன வென்று சேசுநாதர் சொன்னதற்கு அர்த்தமேதெனில், பிறர் செய்யுங் கலியாணத்தில் இரசம் இல்லாதிருந்தால் அது நமக்கும் காரியமில்லை, உமக்கும் காரியமில்லையென்று காண்பித்தார். காண்பித்தாலும் அவர்களைப்பற்றி நமக்கு அதிலே காரியமில்லாதாயினும் நீர் மன்றாடினதினால் புதுமை செய்வோம் என்றாற்போல செய்தார்.
37. இதிலே பதிதர் சுவிசேஷத்தைத் தமிழாகத் திருப்பினவிடத்தில் உனக்கு என்னுடனே காரியம் என்னவென்று எழுதிவைத்தார்கள். ஆகிலும் இது கப்பிதந்தானே. இலத்தீன் பாஷையில் (milliet tili) tகி யெத்தீபி இருக்க இரண்டுங்கு வென்னும் நான்காம் வேற்றுமையாகையால் நமக்கும் உமக்கும் என்று அர்த்தமாகும். ஆகிலும் உனக்கு என்னுடனே என்று பதிதர் தமது அக்கியானத்தை ஊன்றத் தப்பிதமாய் வைத்த வசனத்தை ஒத்துக் கொண்டாலும் ஸ்திரீயே நம்மோடு ஒத்ததாய் உமக்கு அதிலே காரியமில்லை. ஆகிலும் நீர் மன்றாடினதை மறுக்க மாட்டோம் என்றாற் போல வாயிற்றென்க.
மீளவும் அத்தருணத்திலே சேசுநாதர் தாயே என்னாமல், ஸ்திரீயே நமக்கும் உமக்குங் காரியம் என்னவென்றதிலே வேறொரு திவ்விய சூழ்ச்சி உண்டென்று அறியக்கடவீர்கள். அதேதெனில், கண்ணுக்குத் தோன்றின மனுஷ தத்துவமன்றித் தமக்குத் தேவதத்துவம் உண்டென்று எல்லோரும் அதுசரிக்க வேண்டியிருக்கையில் புதிதாய்க் கூட்டின சீஷர்களுக்கு அதனை ஒப்பிக்கச் சேசுநாதர் நீர் நமக்குத் தாயாகித் தந்த மனுஷ சுபாவத்தைக்கொண்டு இப்புதுமையைச் செய்யக் கூடாமையால் நீர் அதிலே நமக்குத் தாயல்ல வென்றாற்போல் தாயே என்னாமல் ஸ்திரீயே என்றார். பின்பு மனுஷ சுபாவத்தைத் தமக்குத் தந்த தாய் பேரில் தாம் வைத்த பட்சத்தைக் காட்ட அவள் வார்த்தையை மறுக்கமாட்டாமல் சொன்னபடி தேவ சுபாவத்தைக் கொண்டு அப்புதுமையைச் செய்தார்.
ஆகையால் இந்த வர்த்தமானத்தை நன்றாய்ப் பார்க்கில் சேசுநாதர், பதிதர் சொன்னபடி தேவமாதாவின் வார்த்தையைத் தள்ளவுமில்லை, அவளுக்கு ஆராதனை விலக்கவுமில்லை. அவள் வேண்டுதலை உடனே கேட்டுச் செய்த புதுமையால் அவளை அண்டி நாம் எல்லோரும் மன்றாடி வணங்க வேண்டுமென்று படிப்பித்தார் என்பதற்குச் சந்தேகமில்லை.