ஐந்தாம் கற்பனை

1. ஐந்தாம் கற்பனையைச் சொல்லு.

“கொலை செய்யாதிருப்பாயாக.”


140. ஐந்தாம் கற்பனையால் சர்வேசுரன் விலக்குகிறதென்ன?

தன்னையாவது பிறரையாவது கொலை செய்யக் கூடாதென்றும், பிறருடைய ஆத்தும சரீரத்துக்கு எவ்வித தீங்கும் செய்யக் கூடாதென்றும் விலக்குகிறார்.