1. கடவுள் யார்?
இவ்வுலகில் காணப்படும் படைப்புகள் பலவித மானவை. அவற்றுள் மிகவும் உயர்ந்த, சிறந்த படைப்பு மனிதன் தான். மனிதன் சிருஷ்டி என்ற முறையில் தானாக தோன்றியிருக்க முடியாது. ஏனெனில் தானாகத் தோன்றக் கூடிய சக்தி இருந்தால் அவன் தன் வாழ்வில் தனக்கு வேண்டிய சகல வசதிகளையும் ஏற்படுத்திக்கொள்ள முடி யும். தனக்கு நேரிடும் துன்பம், கஷ்ட நஷ்டங்கள் யாவும் தன்னை நெருக்காதபடி தடுத்துக்கொள்ள முடியும். எல்லா வித இன்பங்களையும் எத்தகைய இடை யூறுமின்றி அனுப விக்க முடியும். ஆனால், உலகின் நிலையை ஊன்றிப்பார்த் தால் எங்கும் மனிதனின் இயலாமை, பலவீனம் காணப்படு கிறது. இதன் காரணமென்ன? அவன் சக்தியற்றவன். பிற ஒரு சிருஷ்டி கர்த்தரின் - ஆற்றல் வாய்ந்தவரின் ஆணைக்கு அடங்கியவன் என்பது விளங்குகிறது. இதிலி ருந்து அவன் யாரோ ஒருவரால் உண்டாக்கப்பட்டவன் என்பது தெளிவு. அப்படி அவனையும், அவனைச் சுற்றிலும் உள்ள அனைத்தையும் உண்டாக்கினவரே கடவுள். எனவே, புகையைக் காணுமிடத்து நெருப்பு அங்கே உண்டு என்று உய்த்துணர்வது போல, எதுவும் காரணமின்றி, காரியம் ஆகாது என்பதை உணர வேண்டும். ஆகவே எவ்விதம் நோக்கினும், எப்பொருள் நோக்கினும் அப் பொருளைப் படைத்த ஒருவர் உண்டு என்பதை நோக்க வேண்டும். அதை முழுமன துடன் ஏற்க வேண்டும்.
2. எத்தனை கடவுள்கள் உண்டு
ஒரே கடவுள் தான் இருத்தல் வேண்டும். பல தெய் வம் இருக்க முடியாது. அப்படி இருப்பது புத்திக்கும் நியாயத்துக்கும் ஒவ்வாது. ஏனெனில், ஒரு நாட்டில் ஒரே சமயத்தில், பல அரசர்கள் ஆட்சி செய்வது முடியாதாகள் யம். ஒரு குடும்பத்தில் அல்லது ஒரு கூட்டத்தில், பல தலை வர்கள் இருத்தல் முடியாது. ஒரே அதிகாரம் கொண்ட பல தலைவர்கள் இருப்பின் சட்ட திட்டங்கள் சரிவர நடை பெறா. கருத்து வேற்றுமைகள் ஏற்படும். பல இன்னல் களுக்கும், அலங்கோலங்களுக்கும் காரணமாகும். கடைசி யில் குழப்பமும், கலகமுமே முடிவாகும்.
3. கடவுளைப்பற்றிக் குறிப்பிடும்போது, அவர் என்று குறிப்பிடும் சொல் சரியா? அல்லது 'அவர்கள்' என்னும் சொல் சரியா? எது உண்மை ?
'அவர்' - என்பதுதான் சரியான சொல் ; உண்மையும் இதுவேயாகும். ஏனெனில் கடவுள் ஒருவர் மட்டுமே இருக்கமுடியும் ஆதலால், பலரைக் குறிப்பிடும் ' அவர்கள் என்ற சொல்லைக் கையாள முடியாது.
4. உண்மையான ஒரே கடவுளின் இலட்சணங்கள் யாவை?
உண்மையான ஒரே கடவுளின் இலட்சணங்கள் பல இருப்பினும், அவை ஒரு சிலவற்றில் அடங்கிவிடும். அவை யாவன:
(1) அவர் உண்டாக்கப்படாதவர்:
கடவுள் யாராலும் உண்டாக்கப்படாதவர்; தனி முதற் பொருள். இவர் பிறரால் உண்டாக்கப்படுவதாயிருந்தால் அந்த உண்டாக்கினவர், இவரைவிடப் பெரியவராவார். உண்டாக்கப்பட்டவர் சிறியவர் என்றால் குறையுள்ளவர். குறையுள்ளவர் கடவுளாக இருக்க முடியாது.
(2) துவக்கமும் முடிவும் இல்லாதவர்:
படைப்பு பொருட்கள் துவக்கமும், முடிவும் உள்ளவை. துவக்கம் உள்ளவைகளுக்கு, அவசியம் முடிவும் இருக்கத் தான் வேண்டும் ஆனால், கடவுள் துவக்கம் இல்லாத வராக இருப்பதால், முடிவும் இல்லாதவர் என்று சொல்லப் படுகிறது நியாயம். அவரை ஒருவரும் அழித்தல் முடி யாது. அழிக்கப்படவும் மாட்டார். ஏனெனில், உண்டாக் கப்படாததால் துவக்கம் இல்லை. இவருக்கு மேல் அதிக சக்தியள்ளவர் யாரும் இருக்கமுடியாதபடியால் இவரை அழிக்க முடியாது. அழிவில்லை என்றால் முடிவில்லை என் பது பொருள்.
(3) அரூபியானவர் :
அதாவது காணக்கூடிய உருவம் அற்றவர். அவர் சிருஷ்டிகளாயிருப்பதால் - எல்லாப் பொருட்களுக்கும் உள் ளேயே இருந்து அவைகளைப் போஷிக்க வேண்டியிருப்ப தால் உருவம் இருந்தால் மேற்கூறிய ஒவ்வொரு பொருளுக் குள்ளும் ஒவ்வொரு அணுவின் உள்ளும் இருப்பது எப்படி? ஆதலால், அரூபியாக, பார்க்க முடியாத உயிர்ப் பொரு ளாக இருப்பது பொருத்தமானது.
ஆனால், நாம் கடவுளின் நினைவை மனதில் வருவித்துக் கொள்ள அவரது குணலட்சணங்களைக் காட்டக்கூடிய பொருட்களையோ, படங்களையோ செய்து நினைவுப்படுத்திக் கொள்வது தவறில்லை. இப்படி தகுந்த குண உருவங்களை அமைப்பதால் அவருக்கு உருவம் உண்டு என்று கொள்வ தில்லை. அல்லது அந்த உருவங்கள் தான் தெய்வம் என்று நாம் வழிபடுவதில்லை. அந்த உருவம் நினைவூட்டும் பரம் பொருளுக்கே நாம் வழிபாட்டு ஆராதனை செய்வதாகும்.
அந்த உருவங்கள் அல்லது படங்கள், சிறப்புள்ள கடவுளின் வல்லமையில், சிருஷ்டிகளாகிய சூரியன், சந் திரன், கடல், மலை போன்ற வேறு எந்த பொருளும் அவை எவ்வளவு சிறப்பும், உயர்வும் உடையவைகளாக இருப்பினும், காணக்கூடிய மரங்கள், பறவைகள், மிருகங்கள் பொருள்கள் நமது வாழ்வுக்கு எவ்வளவுதான் நன்மை பயக்கக்கூடியதாக இருப்பினும் அவை கடவுளாகமாட்டா.
(4) சகல நன்மையும் நிறைந்தவர்:
அவர் எல்லா நன்மைகளுக்கும் ஊற்றானவர். அவரி டம் இல்லாத நன்மைகள் ஒன்றுமே இல்லை. சகல நன்மை களையும், வரங்களையும், கொடைகளையும், புத்தி நுட்பத்தை யும், சக்தி வல்லமையையும், இன்னும் நாம் எண்ணக்கூடு மான நன்மைகள் அனைத்தையும், அளவுகடந்த முறையில் தன்னில் கொண்டிருப்பவர். அவருக்குக் குறைவு என்பது கிடையாது. சுருங்கச் சொல்ல வேண்டுமானால் அவரே சர்வான்மை ஆதலால், தீமை என்பது எதுவும், வியாதியோ, கஷ்டமோ, நஷ்டமோ எதுவாயிருப்பினும் அவரை நெருங்காது. ஆகவே அவர் சர்வ நன்மை நிறைந் தவர். சகல நன்மையும் கொண்டவராதலால் நாம் என்ன கேட்டாலும் கொடுக்கக்கூடியவர் அவர். அவரை நம்பி, சலியாது, நமது எளிமையை ஏற்றுக்கொண்டு, தாழ்மை யுடன் அவரது கட்டளைகளை மீறாமல் தூய மனத்தோடு கேட்போமானால் நமக்குக் கிடைக்கும். "கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும்; தேடுங்கள் கண்டடைவீர்கள்.'' என்பது கடவுள் குமாரனாகிய கிறிஸ்து வின் பொன்மொழிகள். ஆனால் நமக்குத் தேவையற்றதைக் கொடுப்பார் என்று எண்ணுவது பகற்கனவாகும்.
(5) எங்கும் இருப்பவர் :
கடவுள் சர்வவியாபி, எதிலும் நிறைந்திருப்பவர். அவர் இல்லாத இடமோ, பொருளோ கிடையாது. எவ் விடங்களிலும், எப்பொருள்களிலும், நிறைந்து, இருந்து, அவை ஒவ்வொன்றையும் காத்து ஆண்டு உயிர்கொடுத்து, நடத்தி வருகிறார். அவர் இல்லாவிடில் ஒரு பொருளும், பொருளாக இருக்கமுடியாது. ஒரு பொருள், பொருளாக இருக்கவேண்டுமானால், அதில் அவர் இருந்து தான் ஆக வேண்டும்.
எப்பொருளை நோக்கினும், அப்பொருள் இறைவனின் ஒரு வெளிப்பாட்டுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது
அவர் துரும்பிலும் இருப்பார்; தூணிலும் இருப்பார்"என்று நாம் சொல்லி வருகிறோம். அவர் எங்கும் நிறைந் திருப்பதால் வியாபித்திருப்பதால் நாம் செய்யும், பேசும், நினைக்கும் ஒவ்வொன்றையும் அறிவார். அவருக்கு மறை வானது எந்த இரகசியமும் கிடையாது. எவ்வளவோ இரகசியமாய்ச் செய்யப்படும் நன்மை, தீமைகளோ, நினைத் துச் செய்யப்படும் திட்டங்களும் காரியங்களும் அவருக்கு மறைவானதல்ல. இதனால் தான் கடவுளை எங்கும் இருப்ப வர், எல்லாம் அறிபவர் என்று நியாயப் பொருத்தமாகச் சொல்ல வேண்டியிருக்கிறது.
(6) ஆதிகாரணமாக இருப்பவர்
உலகில் எல்லாக் காரியமும் கடவுளால் நடைபெறு கிறது. அவர் உத்தரவு இல்லாமல் ஒரு காரியமும் நடப்ப தில்லை. ஆக்கவும், அழிக்கவும் வல்லமையுடையவர் அவர். அவரால்தான் உலகனைத்தும் ஒரு வார்த்தையால் உண் டாக்கப்பட்டது. அவரே யாவற்றையும் காத்து நடத்து கிறார். அவர் இன்றி ஓரணுவும் அசையாது, ஏனெனில், கடவுள் ஒருவரே எல்லாவற்றுக்கும் சர்வ அதிகாரி.
உலகில் நடக்கும் ஒவ்வொரு விஷயத்துக்கும் அவரே காரணர் என்று சொல்லும்போது ஒரு முக்கிய விஷயம் நமது நினைவில் இருக்கவேண்டும். அதாவது, உலகத்தில் நடக்கும் சகலத்துக்கும் காரணம் கடவுள் என்று சொல்லும் போது உலகில் நடக்கும் அக்கிரமங்களுக்கும், தீமைகளுக் குமகூட கடவுள் தான் காரணமா? என்ற ஒருகேள்வி, இயல் பாகவே கேட்கத் தோன்றுகிறது. கடவுள் தீமைக்கு காரண மல்ல. ஆனால், தீமை நடக்கும்படி சில சமயங்களில் விட்டு விடுகிறார். அதாவது; அனுமதிக்கிறார். தீய காரியங்கள் செய்ய. அதாவது; களவு, கொலை செய்ய ஒருவன் முயலும் போது, கத்தியை எடுக்கவும், பொருள் உள்ள இடத்துக்கு நடந்து போகவும், கைகால்களுக்குச் சக்தியைக் கொடுப்பவர் கடவுள் தான். ஆனால், நன்மை செய்யும் பொருட்டு கொடுக்கப்பட்ட அந்த உறுப்புகளை மனச் சுவாதீன முள்ள மனிதன் தீமைக்காக உபயோகிக்கும் போது அதைத் தடுப்ப தில்லை. ஏனெனில், மனிதனுக்கு மனச்சாட்சியையும், மனச் சுதந்திரத்தையும் கொடுத்தவர் கடவுள். ஆகையால் அவ னுக்கு நன்மை, தீமை என்னவென்பதைக் காட்டிவிட்டு, அதைச் செய்யவும், செய்யாமல் இருக்கவும் உள்ள அந்த சுதந்திரத்தைக் கொடுத்தவர் அதைப் பறித்துக்கொள்வ தில்லை ஏனென்றால் கடவுள் நீதியுள்ளவர். கொடுத்த சுவாதீனத்தை எடுத்துக்கொள்வது நீதிக்கு விரோதம் என் பதால்தான் அதை விட்டுக்கொடுக்கிறார். ஆகவே மனச் சாட்சியை மீறிச் செய்யும் போது. அதற்கு அவர் காரண மாகமாட்டார் என்பதை உணர வேண்டும். மற்றபடி அவரே சர்வத்துக்கும் காரண கர்த்தா. காய்கறி வெட்டு வதற்காகவே என்று. எல்லோருக்கும் முன்னால் சொல்லி, வாங்கி வைத்த கத்தியை, விபரம் தெரிந்த மகன், அதை எடுத்து குத்திக்கொண்டு இறந்து போனால், கத்தியை வாங்கிவைத்த தகப்பன் குற்றவாளியாக மாட்டான் என்பது நியாயம்.