புனிதர்களின் சமூக உறவின்பேரிலும், பாவப் பொறுத்தலின் பேரிலும்.

101. புனிதர்களின் சமூக உறவு என்பதற்கு அர்த்தமென்ன?

பரிசுத்தவான்கள் எல்லோரும் யேசுநாதரோடு ஒரே ஞானசபை அங்கத்தினராயிருக்கிறார்கள் என்றும், திருச்சபையிலுள்ள ஞான நன்மைகளுக்கெல்லாம் பங்காளிகளாயிருக்கிறார்கள் என்றும் அர்த்தம்.


102. மேற்சொல்லிய பரிசுத்தவான்கள் யார்?

மோட்சத்திலுள்ள அர்ச்சியசிஷ்டவர்களும், உத்தரிக்கிற ஆத்துமாக்களும், பூமியில் வாழும் சத்திய திருச்சபையாருமே அந்தப் பரிசுத்தவான்களாம்.


103. பாவப்பொறுத்தல் ஆவதென்ன?

சகல பாவங்களையும் பொறுப்பதற்கு யேசு கிறிஸ்துநாதர் தமது திருச்சபைக்குக் கொடுத்திருக்கும் அதிகாரமாகும்.


104. திருச்சபையில் எப்படி பாவப்பொறுத்தல் அடையலாம்?

விசேஷமாய் ஞானஸ்நானம். பச்சாத்தாபம் என்கிற தேவத்திரவிய அனுமானங்களாலே தான்.