ஞானஸ்நானத்தின் பேரிலும் உறுதிப்பூசுதலின் பேரிலும்.

225. ஞானஸ்நானம் ஆவதென்ன?

ஜென்மப் பாவத்தையும், கர்மப் பாவத்தையும் போக்கி, நம்மைச் சர்வேசுரனுக்கும் திருச்சபைக்கும் பிள்ளைகளாக்குகிற தேவத்திரவிய அனுமானம். 


226. ஞானஸ்நானம் எல்லோருக்கும் அவசரமோ?

ஆம். ஞானஸ்நானம் இல்லாமல் மோட்சத்தை அடையக் கூடாதபடியால் ஞானஸ்நானம் எல்லோருக்கும் அவசரந்தான். 


227. ஞானஸ்நானம் கொடுக்கும் அதிகாரம் யாருக்கு உரியது?

சாதாரணமாய் குருமாருக்கே உரியது. 


228, அவஸ்தை சமயத்தில் யாராகிலும் ஞானஸ்நானம் கொடுக்கலாமா? 

அப்படிப்பட்ட சமயத்தில் யாராகிலும் கொடுக்க வேண்டியதுதான்.


229. ஞானஸ்நானம் கொடுக்கிறதெப்படி?

1-வது - திருச்சபை ஞானஸ்நானங்கொடுக்கிற கருத்தோடு நானும் ஞானஸ்நானம் கொடுக்கிறேன் என்று மனதில் நினைத்துக் கொள்ளுகிறது, 

2வது - பிள்ளைக்கு இடவேண்டிய பெயரை உச்சரித்து அதன் தலையின் மீது தண்ணீர் வார்க்கிறபோது, தான்தானே சொல்லவேண்டியதாவது: பிதாவுடையவும், சுதனுடையவும், பரிசுத்த ஆவியுடையவும் நாமத்தினாலே நான் உன்னைக் கழுவுகிறேன். 


230. உறுதிப்பூசுதல் ஆவதென்ன?

நம்மை சத்திய வேதத்தில் திடப்படுத்துவதற்காக பரிசுத்த ஆவியையும் அவருடைய வரப்பிரசாதங்களையும் நமக்குக் கொடுக்கிற தேவத்திரவிய அனுமானம், 


231. அந்த வரப்பிரசாதங்கள் எத்தனை?

ஏழு, 


232. ஏழுஞ் சொல்லு.

1-வது - ஞானம். 
2-வது - புத்தி. 
3-வது - அறிவு. 
4-வது - விமரிசை. 
5-வது - திடம். 
6-வது - பக்தி. 
7-வது - தெய்வ பயம்.