58.- பெருஞ் சங்கிலியால் ஒரு முளையில் கட்டப் பட்ட வேங்கை சூழக் குதித்துச் சங்கிலியைக் கடித்துப் போக்கிடமின்றிக் கர்ஜித்தது போலப், பதிதரும் நாம் சொன்ன நியாயங்களினால் கட்டப்பட்டுச் , சொல்லும் மறுமொழி இல்லாமல், அங்கங்கே தாண்டி ஏழைச் சனங் களை மயக்குவிக்கும்படிக்கு இன்னும் உளறிக் கூப்பிடுஞ் சத்தங் கேட்கக் கடவோம். நாம் என்ன சொன்னாலுஞ் சுரூபங்களை வணங்குவதே அக்கியானமென்றும், அபத்த மென்றும் பதிதர் சொல்லி வருகிறார்கள். அதேதெனில் மோயீசன் எழுதின 5-ம் ஆகமம் 12-ம் அதிகாரம் 32-ம் வசனமாவது : நான் கட்டளையிட்டதை மாத்திரம் ஆண்டவருக்குச் செய்வாயாக; அதற்கு ஏதாகிலுங் குறைக் கவும், ஏற்றவும் வேண்டாமென்றார். ஆகையால் சுரூபங்களை வணங்க வேதத்தில் கட்டளை இல்லாதபோது நான் வணங்கினால் ஆண்டவர் கட்டளை இட்டதின் மேல் செய்தமையால், அவர் விலக்கின காரியஞ் செய்தாற்போல ஆச்சுதல்லோவென்று பதிதர் சொல்ல வருகிறார்கள்.
இதைக் கொண்டு அவர்கள் திருச்சபைக் கற்பனைகளை எல்லாந் தள்ளி, அதுகளுக்குக் கீழ்ப்படிந்து நடக்கிற நாம், சர்வேசுரன் வழி விட்டு, மனிதர் காட்டின வழியில் நடந்து தப்பிப் போகிறோமென்று, நியாயத்தைச் சற்றும் பாராத பித்தரைப்போல் பதிதர் பிதற்றிக்கொண்டு வருகிறார்கள். ஆகிலும் முந்திப் பதிதர் சொல்லிக்காட்டின வேத உதாரணங் கொண்டிருக்கிற அர்த்தத்தைக் காட்டக்கடவோம். நாம் இங்கே முதல் அதிகாரத்தில் சொன்னபடி லுத்தேர் சமயம் எளிதாய்ப் பரம்ப, அவன் குருவாகிய பசாசு லுத்தேருக்குச் சொன்ன உபாயமாவது: வேத வசனங்களை முழுதும் வையாமல் குறைத்து வைத்தல், முன்னும் பின்னும் எழுதினதை விட்டுப் பார்க்கில் அதுகளுக்கு அர்த்தம் வேறாகி, நீ உண்டு பண்ணின அபத்தங்களை எளிதாய் வேத உதாரணங்களால் ஒப்பித்துக்கொள்ளச் செய்வாய் என்ற தாம் பசாசு. அப்படியே லுத்தேரும் அவன் சீஷர்களுஞ் செய்து கொண்டு வந்தார்கள்.
இப்போதும் அவர்கள் எடுத்துக்காட்டின உதாரணத்திலேயும் செய்தமையால், நாம் அதைக் குறையாமல் வைத்தோமாகில் பதிதருக்கு அது சற்றும் உதவாமல், மலையைப் போல தோன்றின நியாயம், புகையாய்க் கரையக் காண்போம். ஆகையால், மோயீசன் வாயினால் ஆண்டவர் அக்காலத்தில் தமக்குப் பலி இடும் முறையும், இடமுங் கற்பித்த பின்பு சொன்னதாவது: ஆண்டவர் அக்கியானிகளைக் கெடுத்துப், பெயர்த்து, அகற்றி அவர்கள் நாட்டில் நீ இருக்கும்போது அவர்கள் பாவனையாக அக்கியானி முறைகளை எடுக்கவும் வேண்டாம், அவர்கள் தம் தேவர் களை வணங்கினபடி நானுஞ் சர்வேசுரனை வணங்குவேன் என்னவும் வேண்டாம். ஆண்டவருக்கு அருவருப்புள்ள தெல்லாம் அவர்கள் தம் தேவர்களுக்குச் செய்து, தம் மக்களை முதலாய்த் தேவ பலிகளாகக் கொன்று, நெருப்பிற் சுட்டார்கள். நீ அப்படிச் செய்யால் நான் கட்டளையிட்டதை மாத்திரம் ஆண்டவருக்குச் செய்வாயாக. அதற்கு ஏதாகிலும் குறைக்கவும், ஏற்றவும் வேண்டாமென்றார்.
ஆகையால் அக்கியானிகள் முறைகளும், அவர்கள் பூசை முறைகளும் விலக்கப்பட்ட காலத்தில் ஆண்டவர் தமக்குப் பலியாகக் கற்பித்த வேத முறைமை மாத்திரம் ஒன்றுங் குறையாமலும், கூட்டாமலும் இருக்கச்சொல்லிக் கற்பித்தாரென்பது அர்த்தமாகும் அல்லோர் இதனால் மனி தர் கற்பனைகளைக் கேட்கவேண்டாமென்று விலக்கினதா கக் கொள்ளலாமோ விலக்கினதாகக் கொண்டால் பதி தர் தாமே தம் இராசாவின் கற்பனை மீறாமல் நடப்ப தென்ன? தம் குருவாகிய லுத்தேர் விரத்தனாய் இருப்பது பாவம் என்பது என்ன? கலியாணம் எவருக்கும் வேதத் தில் கட்டளையிட்டது எங்கே? அர்ச. சின்னப்பர் கொரிந்தி யாருக்கு எழுதின முதல் நிருபம் 7-ம் அதிகாரம் 35-ம் வசனத்தில் கலியாணம் நல்லதாயினும் அதிலேயும் விரத் தத்து வந் தாவிளையென்றார் அல்லோ .
59.- மனிதர் கற்பித்ததைக் கேட்டு நடப்பது அக்கி யானமாகில், அந்த அக்கியானத்தை ஆண்டவர் நல்ல தென்று புகழ்வாரோர் அப்படியாயினும் எரேமியாஸ் 35-ம் அதிகாரத்தில் யோனதபென்பவன் தன் கோத்திரத்தில் கட்டளையிட்டபடி, அவர்கள் தலைமுறை தலைமுறையாய் முந்திரிகைப்பழத்து இரசத்தைக் குடியாமல், அவன் இட்ட கற்பனையின்படியே நடந்ததினால், ஆண்டவர் அவர் களைப் புகழ்ந்தாரல்லோ. மீளவும் அப்போஸ்தலர்மார் தாமே இரத்தத்தையும், இரத்தஞ் சிந்தாமல் கொன்றதையும் உண்ண வேண்டாமென்று அவர்கள் முயற்சி ஆகமம் 15-ம் அதிகாரம் 29-ம் வசனத்தில் கற்பித்ததென்ன?
அதிலே தானே 15-ம் அதிகாரம் 41-ம் வசனத்தில் அப் போஸ்தலரும், மற்றப் பெரியோர்களும் இட்ட கற்பனை களை அநுசரிக்கவேண்டுமென்று கற்பித்துத் திருச்சபைக்கு உறுதி சொல்லிச் சீரிய, சீலிசியவென்ற இரு நாடுகளில் அர்ச். சின்னப்பர் திரிந்தாரென்று எழுதினதென்ன?
அரச . சின்னப்பர் தாமே கொரிந்தியருக்கு எழுதின முதல் நிருபம் 7- ம் அதிகாரம் 12-ம் வசனத்தில் தன் கற் பனை வேறே, சேசுநாதர் கற்பனை வேறாய்ப் பிரித்துச் சொல்வதென்ன? மனிதர் கற்பனை கேட்பது அக்கியான மாகில், வேதத்தில் அப்போஸ்தலர்மார் தாமே அந்த அக் கியானத்தைப் படிப்பித்ததென்ன கற்பித்ததென்ன? ஆகையால் பெரியோர்கள் கட்டளைகளையும், திருச்சபைத் தலைவர்கள் கற்பனைகளையுங் கேட்டுத் தலைமேல் வைத்து, மீறாமல் நடப்பது வேதத்தில் விலக்கப்படாமல் பிரத்திய க்ஷமாய்ப் படிப்பித்த முறைமையாகும் அல்லோ.
மீளவும் மோயீசன் 2-ம் புஸ்தகம் 20-ம் அதிகாரம் 8-ம் வசனத்தில் மூன்றாங் கற்பனையாகத் திருநாளென்று சனிக்கிழமை ஆசரிக்க நினைப்பாயாகவென்று எழுதியிருக் கப் பதிதர் தாமே சனிக்கிழமையைத் திருநாளாக ஆசரி யாமல் ஞாயிற்றுக்கிழமையை ஆசரிப்பானேன்? அவர் களே தரங்கம்பாடியில் அச்சிற் பதித்த உபதேசத்தின் குறிப்பிடமென்னும் புஸ்தகத்தில் இந்த மூன்றாங்கற் பனையை மாற்றித் திருநாளை ஆசரிக்கத் தக்கதாக நினைப் பாயாக வென்று வைப்பானேன்? இந்த மாற்றம் நியாயத் தின்படியே திருச்சபைக் கற்பனையால் வந்ததொழிய வேதத்தில் ஞாயிற்றுக்கிழமையைக் கொண்டாடக் கட் டளை இட்டதில்லையே.
அப்படியே ஞாயிற்றுக்கிழமையுமன்றிப் பதிதர் தாமே சில திருநாட்களைக் கடனாகக் கொண்டாடுவானேன்? அந்தப் பல திருநாட்களுந் திருச்சபைக் கற்பித்ததொழிய வேதத்தில் ஆண்டவர் கற்பித்ததில்லையே. ஆகையால் திருச்சபைக் கற்பனையின்படியே பதிதரும் நடக்கிறார்கள்.
நடந்தாலுந் தங்களுக்கு ஆகாத மற்றத் திருச்சபை உத் தம் கற்பனைகளைத் தள்ளும்படிக்குத் திருச்சபைக் கற் பனையை மீறாமல் நடப்பது, மனிதர் வழியை அநுசரித்துச் சர்வேசுரன் வழியில் தப்பிப்போகும் முறைமையென்று வெட்கமில்லாமல் சொல்வானேன்?
60.- இப்படியே திருச்சபைக் கற்பனை மனிதர் கற் பனையென்று ஒத்துக்கொண்டாலும், இன்றையவரைக்கும் நாம் சொன்னதைப் பார்க்கில், அந்தக் கற்பனையை மீறா மல் நடப்பது, வேதத்தில் கற்பித்த முறைமையாம் என் னத்தகுமே. ஆகிலுந் திருச்சபை கற்பனைகளை மனிதர் கற் பனை ஆக்காமல், சர்வேசுரன் கற்பனையாகக்கொள்ளவேண்டு மென்று ஒப்பிக்கக்கடவோம். அதெப்படியென்றால், அர்ச். லூக்காஸ் எழுதின சுவிசேஷம் 10-ம் அதிகாரம் 16-ம் வசனத்தில் அப்போஸ்தலர்மார்களுக்குச் சேசுநாதர் திரு வுளம் பற்றின தாவது: உங்கள் வார்த்தையைக் கேட்பவன் என் வார்த்தையைக் கேட்பவன்றானே என்றார். அதனா லல்லோ அர்ச். மத்தேயுஸ் எழுதின சுவிசேஷம் 18-ம் அதிகாரம் 17-ம் வசனத்தில் சேசுநாதர் தாமே திருச்சபை வார்த்தையைக் கேளாதவன் உனக்கு அக்கியானிகளில் ஒருவனாகக்கடவானென்றார். ஆகையால் திருச்சபை கற் பித்ததெல்லாம் ஆண்டவர் கற்பித்ததாக உட்கொள்ளச் சேசுநாதர் கட்டளையிட்டார்.
61.- இதெல்லாம் இப்படி இருக்கையில் நாம் திருச் சபை கற்பித்தபடி கேட்கும்போது, மனிதர் வழியை அது சரியாமல், சர்வேசுரன் கற்பனையின்படியே நடக்கிறோ மென்று சொல்லத்தகுமே. ஆகிலுந் தேவ கற்பனைக்கும், திருச்சபைக் கற்பனைக்கும் மூன்று வேற்றுமை உண் டென்று அறியக்கடவீர்கள். முதல் வேற்றுமையாவது : ஆண்டவர் தாமே கற்பித்தது தேவ கற்பனையாகி, ஆண் டவர் ஏவலால் அவர் ஸ்தானத்திலிருக்கிற அர்ச். பாப்பு கற்பித்தது திருச்சபைக் கற்பனை என்னத்தகும். அப்ப டியே இராசாதாமே சில கட்டளை இடுவதல்லாமல், தன் மந்திரி இராசா சொற்படி சிலதுகளைக் கற்பிப்பார். கற்பித் தாலும் இதுவும் இராசாவின் கட்டளையாக எண்ணிக்கேட்க வேண்டியதனால், இதனையும் மீறினவனைத் தண்டிப்பாரொழிய, நாம் இட்ட கற்பனை அல்லாமல் மந்திரி கற்பனையைக் கேட்க வேண்டாமென்று இராசா சொல்லப்போகிறதில்லை யென்பது நிச்சயந்தானே .
ஆதலால் இரண்டாம் வேற்றுமையாக தேவ கற்ப னையை மீறி நடக்க அர்ச். பாப்பு முதலாய் எக்காலத்தும் உத்தாரங் கொடுக்கக் கூடாமல், திருச்சபைக் கற்பனை தாம் இட்ட கற்பனையாகையால், ஓரோரிடத்தில் இதுகளை விட்டு நடக்க அவர் உத்தாரங் கொடுக்கலாம் என்னத்த கும். அப்படியே இராசா கற்பனை மீற உத்தாரங் கொடுக்க மாட்டாத மந்திரி, தாம் இராசா பெயரைச் சொல்லி இட்ட கற்பனை சிலமுறை தாமும் அழிக்கவும், அல்லது பிறருக்கு உத்தாரங் கொடுக்கவும் வல்லவன் அவன் அல்லோ ?
மூன்றாம் வேற்றுமையோவெனில், உயிரைத் தந்தா லுந் தரவேண்டு மொழிய வேத கற்பனையை மீற எவருக் கும் உத்தாரமில்லை. திருச்சபைக் கற்பனையானால் ஒருவ ருக்குக் கனமான அவசரம் வந்த உடனே, அக்கற்பனையின் படியே நடக்கக் கடனில்லை. அப்படியே இறந்தாலும் பொய்யைச் சொல்லக் கூடாமல், வியாதி வந்த அளவில், ஒருசந்தியாயிருக்கக் கடனில்லை. சொன்ன வேறுபாடுக ளன்றித் திருச்சபைக் கற்பனைகளையும் மிகுந்த அவசரமில் லாமல் மீறாமல் நடக்கும்படிக்கு எவருக்குங் கடன் உண் டென்பது சத்தியந்தானே. பதிதரோவெனில் பாவ வழி யிலே தடை ஒன்றின்றி வழுவி ஓடும்படிக்கு, விக்கினமாக விருக்குந் திருச்சபைக் கற்பனையை உதறிப் பாகனை இழந்த மத யானைபோலவும், கடிவாளம் அறுந்த குதிரைபோலவும், சுக்கான் கழன்ற மரக்கலம் போலவும் ஒழுங்கொன்றின்றித் தவறிக் குதித்து, அலந்து, மோதித் தாம் தம்மோடு ஒவ் வாமற் பிதற்றி, மதி கெட்ட பித்தரைப் போல் பேசவும், நடக்கவுஞ் செய்வார்களென்று கண்டிருக்கிறோம்.