ஒரு முறை பதிதன் ஒருவன் அர்ச்சியசிஷ்ட அந்தோணியாரிடம் வந்து திவ்ய நற்கருணையில் சேசுநாதர் இல்லை என்று வாதித்தான்.
அவன் அந்தோணியாரிடம் ஒரு போட்டி வைத்தான். தான் ஒரு கழுதையை மூன்று நாள் உணவு எதுவும் கொடுக்காமல் பட்டிணி போடுவேன். மூன்றவது நாள் நான் கழுதையை தெருவில் நிறுத்தி அதற்கு முன் நான் புல் மற்றும் தண்ணிர் வைப்பேன். நீர் நற்கருணையை கொண்டு வாரும்.
கழுதை முதலில் புல் தின்றால் நற்கருணையில் சேசுநாதர் இல்லை என்று அர்த்தம். மாறாக நற்கருணை முன் வணங்கினால் நான் ஒரு கிறிஸ்தவனாக மாறுவேன். என்றான். அதற்கு அந்தோணியார் சம்மதித்தார்.
மூன்று நாட்களுக்கு பிறகு அந்த வீதியில் மக்கள் பலர் கூடினர். அதில் கிறிஸ்தவர்களும் பதிதர்களும் இருந்தனர். கழுதை கொண்டு வரப்பட்டது அதற்கு முன் புல் போடப்பட்டது.
அந்தோணியார் கையில் திவ்விய நற்கருணையுடன் பவணியாக வந்தார். என்ன ஆச்சரியம் மூன்று நாள் பசியாக இருந்த கழுதை தனக்கு முன் வைக்க பட்டு இருந்த புல் கட்டுகளைப் பாராமல் அந்தோணியார் வரும் திசையை நோக்கி முன்னங்கால்களை மடக்கி திவ்ய நற்கருணையை ஆராதித்தது.
அந்த பதிதனும் மனம் திரும்பினான்.